வெள்ளி, 1 மே, 2015

கான்டர்பரி கதைகள் (The Canterbury Tales)

கான்டர்பரி கதைகள் (The Canterbury Tales):
ஜாபரி சாசர் (Geoffrey Chaucer). இவர் ஆங்கில கவிதை உலகின் தந்தை என்று போற்றப்படுவர். கதைத் தொகுப்பாக இவர் எழுதியுள்ள கதைகள் மிக சிறந்தவை என போற்றப்படுகிறது.இவர் இங்கிலாந்தில் 1387 முதல் 1400 வரை உள்ள காலங்களில் இந்தக் கதைத் தொகுப்பை எழுதினார். அப்போது இங்கிலாந்தை ரிச்சர்டு-2 மன்னர் ஆண்ட காலம். இதை மத்திய ஆங்கில காலம் என்பர். (Middle English period);
இங்கிலாந்தில் கான்டர்பரி என்ற பகுதிக்கு யாத்திரை செல்வார்களாம். அப்போதுள்ள மக்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம். அந்தக் கூட்டத்தில் 30 பேர்கள் சேர்ந்து மாலை, இரவு வேலையில் பொழுதைப் போக்குவதற்காக ஒவ்வொருவரும் போகும்போது இரண்டு கதைகளும், திரும்பி வரும்போது இரண்டு கதைகளும் சொல்ல வேண்டும் என்று உடன்பாடு செய்து கொண்டார்களாம். அவ்வாறு சொல்லப்பட்ட கதைகளாக ஜெப்ரி சாசர் எழுதி உள்ளார். (இன்றைக்கு 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகள் இவைகள்). வாழ்க்கையின் தத்துவங்களை புட்டுப்புட்டு வைத்திருப்பார். அவர் எழுதிய நிறைய கதைகள் கிடைக்கவும் இல்லையாம்.
நார்மன்கள் இங்கிலாந்தை ஆண்ட காலத்தில் ஆங்கிலம் அங்கு பிரபலம் ஆகிவில்லை. பிரான்ஸ்காரர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறிய பின்னரே, மேல்தட்டு மக்களால் ஆங்கிலம் பேசப்பட்டதாம்.
அந்தக் காலக்கட்டத்தில், மத்திய கால ஆங்கிலம் (Middle English) இருந்துவந்த காலம். ஆங்கில வார்த்தைகள் வேறு வேறு மாதிரி இருக்கும்; இப்போதுள்ள ஆங்கிலம் வேறு மாதிரி இருக்கும். உதாரணமாக--
aiel என்றால் தாத்தாவாம்; ஆனால் இப்போது grandfather;
alday என்றால் தினமும்; ஆனால் இப்போது daily:
ba என்றால் முத்தம்; ஆனால் இப்போது kiss;
chambre என்றால் படுக்கையறை; ஆனால் இப்போது bedroom;
coverchief என்றால் தலைப்பாகை; ஆனால் இப்போது head-dress; (அதுதான் இப்போது கர்சீப் ஆகியிருக்குமோ?);
dame என்றால் அம்மா; இப்போது mother;
deef என்றால் செவிடு; ஆனால் இப்போது deaf:
scole என்றால் பள்ளிக்கூடம்; இப்போது school;
ஜெப்ரி சாபர் எழுதிய கான்டர்பரி கதைகளில் முக்கியமானவைகள்;
The Knight's Tale
The Miller's Tale
The Reeve's Tale
The Cook's Tale
The Man of Law's Tale
The Wife of Bath's Tale
The Friar's Tale
The Summonor's Tale
The Clerk's Tale
The Merchant's Tale
The Squire's Tale
The Franlin's Tale
the Parson's Tale
The Manciple's Tale
The Second Nun's Tale
The Canon's Yeoman's Tale
The Shipman's Tale
The Prioress's Tale
The Tale of Sir Thopas
The Tale of Melibee
The Monk's Tale
The Nun's Priest's Tale
The Physician's Tale
The Pardoner's Tale
எல்லாமே மிகுந்த படிப்பினை கொண்ட கதைகள்.
அதிக உருக்கமாகவும் அறிவுபூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கும்.


1 கருத்து: