The Man of Law's Tale:
சிரியா நாடு; ஒருகாலத்தில் பெரும் பணக்கார வியாபாரிகள் வசித்த நாடு; அங்குள்ள பொருள்களையும் விலையுயர்ந்த துணிகளையும் உலகின் மற்ற நாடுகளுக்கு
கப்பல்மூலம் அனுப்பி செல்வச் செழிப்பில் சிரியா நாடு கொழித்தது. சிரியா நாட்டின் பல
வியாபாரிகள் வியாபாரத்தை விரிவாக்க ரோம் நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தனர்;
ரோம் நாட்டுக்கு வியாபாரத்தை பெருக்க போகிறார்களோ அல்லது மகிழ்ச்சியாக
இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை; வியாபாரிகள் ஆர்வமாக ஆயத்தமானர்கள்;
ரோம் நாடு சென்ற சிரியா
நாட்டு வியாபாரிகள் சுற்றித் திரிந்தார்கள்; அங்குள்ள பேரரசரின்
மகள் ஒன்று இருப்பதாக பேசிக் கொண்டார்கள்; அவள் மிக அழகாம்;
இந்த உலகம் உருவான காலத்திலிருந்து இதுவரை யாருமே அப்படிப்பட்ட அழகை
பார்த்திருக்கவே முடியாதாம்! எல்லாருடைய ஏகோபித்த முடிவும் அதுதானாம். This
was the considered judgment of all. அழகாகவும் இருந்து, அமைதியாகவும் இருப்பவள்; இளமையாகவும் இருந்து அறிவு முதிர்ச்சியாகவும்
இருப்பவள்; இப்படி பொருத்தமாக இருப்பதே அரிதாம்; மற்றவர்களின் பேச்சை காதுகொடுத்து பொறுமையாக கேட்பவளாகவும் இருக்கிறாள்;
அது இதைவிட அரிது; கண்ணியத்தை பிரதிபிம்பமாக வைத்திருப்பவள்;
இவ்வளவு பெருமைகளை உடையவளை கடவுளே நீயே காப்பாற்றி வைக்க வேண்டும் என்று
ரோம் நாட்டு மக்கள் தினமும் வேண்டிக் கொள்கின்றனராம்; May God keep her and
protect her!" they all cried. இவையெல்லாம் சத்தியமான உண்மைகளே!
ரோம் நகர் போன வியாபாரிகள்
சரக்குகளை வாங்கி கப்பலில் ஏற்றிவிட்டனர்; கப்பல் நிறைந்து
விட்டது; கப்பல் சிரியா நாடு நோக்கி மிதக்கிறது; இந்த சிரியா நாட்டு வியாபாரிகள் பெரும் பணக்காரர்கள்; எனவே எப்போது வெளிநாட்டுக்கு வியாபாரத்துக்குச் சென்றாலும் சிரியா மன்னரான
சுல்தானிடம் சொல்லிவிட்டே செல்வர்; அதேபோல, நாடு திரும்பியவுடன் மன்னர் சுல்தானைப் பார்த்து அந்த நாட்டு சிறப்புகளையும்,
வியாபாரம், அந்நாட்டு விபரங்களையும் மன்னரிடம்
சொல்வர். சுல்தானும் மிகவும் ஆர்வமாக வெளிநாட்டுக் கதையை கேட்பார்; வியாபாரிகள் சிரியா நாடு திரும்பியவுடன் சுல்தானை சென்று பார்க்கிறார்கள்;
அரண்மனையில் பெரிய விருந்து நடக்கிறது; அப்போது
நடந்த பேச்சில் ரோம் நகரத்து பேரழகி "கான்ஸ்டான்ஸ்" (Constance) பற்றி மெதுவாக சுல்தானிடம் தெரிவிக்கிறார்கள்; அவள்
அழகை வர்ணிக்கிறார்கள்; அவள் குணத்தை வர்ணிக்கிறார்கள்;
அவள் பண்பை வர்ணிக்கிறார்கள்; சுல்தானுக்கோ ஆசை
உச்சத்துக்கே போகிறது; எப்படியும் அந்த இளவரசியை தான் அடைந்துவிடவேண்டும்;
காதலுக்காகவே சுல்தான் இறப்பதற்குகூட தயாராவார் போல! Sultan
would die through love.
சுல்தான் தயாராகிவிட்டார்; தனது மந்திரிகளை ரோமுக்கு அனுப்பினார்; "எங்கள்
சுல்தான், உங்கள் இளவரசி மீது தீராத காதல் கொண்டுவிட்டார்;
அவர் காதல் தீயை அணைக்கவில்லை என்றால், அவர் அந்த
தீயிலேயே உயிரை விடுவார் போலத் தெரிகிறது; எனவே இளவரசியை எப்படியாகவது
எங்கள் சுல்தானுக்கு மணமகளாகக் கொடுங்கள்"
என்று மந்திரிகள் கெஞ்சுகிறார்கள்;
ரோம் நாட்டு சக்கரவர்த்தியோ
கிறிஸ்தவர்; சிரியா நாட்டு மன்னரோ முஸ்லீம்; எப்படி சாத்தியப்படும்? எப்படி, கிறிஸ்தவப் பெண்ணை ஒரு முஸ்லீம் மன்னருக்கு கொடுப்பது? நடக்கிற காரியமா? மணமகன் வீட்டு வழக்கப்படிதானே திருமணமும்
நடக்கும்; அப்படியென்றால், எங்கள் வீட்டு
கிறிஸ்தவ பெண்ணை, முஸ்லீம் முறைப்படி சுல்தான் மணப்பாரே?
"என்னால், இவ்வளவு பேரழகுள்ள இளவரசியை மணக்காமல் இருக்க முடியாது; அதற்காக எதையும் துறக்க தயார்; என்ன, மதம் தானே பிரச்சனை? முஸ்லீமான நானே கிறிஸ்தவனாகிறேன்;
பிரச்சனை தீர்த்துவிடும் அல்லவா?" சுல்தான்
முடிவுக்கே வந்துவிட்டார்; "Rather than lose all hope of gaining
Constance as my wife, I shall be christened. I must have her! I have no other
choice!" எவ்வளவு உறுதியான வார்த்தைகள்!
உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாயின; மந்திரிகள் பறந்தார்கள்; போப் சமரசம் ஆனார்; சுல்தான் முஸ்லமான் அல்ல, கிறிஸ்தவர் ஆனார்; அதுமட்டுமா, மொத்த சிரியா நாட்டையே கிறிஸ்தவ நாடு என்று
உத்தரவு போட்டு விட்டார்; அப்பாடி! ஏன், சுல்தானுக்காக நாட்டு மக்கள் மாறக்கூடாதா? இனி சிரியாவும்
கிறிஸ்தவ நாடுதான்;
பேரழகி கான்ஸ்டான்ஸ் இனி
எனக்குத்தான்! தங்ககட்டிகளை ரோம் நாட்டுக்கு அனுப்பிவிட்டார் சுல்தான்; நிச்சயதார்தம் முடிந்து விட்டது; Now, fair Constance - may God
guide you!
ரோமாபுரி விழாக்கோலம்
பூண்டுவிட்டது; மகளை சிரியா நாட்டுக்கு மணமகளாக அனுப்பப் போகிறார்;
வார்த்தைகளில் சொல்ல முடியாது; நாடே விழாக்கோலம்
போங்கள்! இளவரசி பிரயாணத்துக்கு கப்பல் தயாராகி விட்டது; துணைக்கு
செல்வோர் தயாராகின்றனர்; பிஷப்புகள் தயாராகின்றனர்; தோழிப் பெண்கள், வேலைக்காரிகள், தளபதி, பாதுகாப்பு வீரர்கள், சமையல்காரர்கள்,
கப்பல் வேலையாட்கள், மொத்தமும் தயார்; கப்பல் சைரன் ஒலிக்கிறது; நாட்டு மக்களே குவிந்து விட்டனர்;
மொத்த ரோமாபுரி மக்களும் ஜீசஸ் கிறிஸ்துவிடம் மனமார வேண்டும்படி கேட்டுக்
கொள்கிறார்கள். "எங்கள் இளவரசியின் திருமணம் நல்லபடியாக நடக்கவும், பிரயாணம் பாதுகாப்பாக இருக்கவும் அருள்புரிய வேண்டும் இறைவனே!" என்று
எல்லோர் மனமும் வேண்டுகிறது; Everybody in Rome was asked to pray to
Christ that he should look favourably upon this marriage and give his blessing
to the voyage.
கப்பல் நகருகிறது; இளவரசி வெளிநாட்டுக்கு மணமகளாகப் போவதால் அழுவாரோ? தாய்,
தந்தை, நட்புகள் இவற்றை பிரிவதால் வருந்துவாரோ?
எங்களுக்காக (மக்களுக்காக) எங்களின் பாவத்துக்காக சிலுவையில் உயிர் நீத்த
எங்களின் பிதாவே எங்கள் இளவரசியின் கண்ணீரை போக்கும்! பெண்களே, ஆண்களுக்கு சேவை செய்யதற்காகவே படைத்தீரோ? எப்போதும்
ஆண்களின் ஆளுமையிலேயே பெண்களை வைத்திருக்கிறீரே?
ஆனால், இளவரசி கான்ஸ்டான்ஸ் முகத்தில் எந்த வருத்தமும் இல்லை; அழுகையும் இல்லை; அவள் அழுதாலும், சிரித்தாலும் சிரியாவுக்கு சென்றே ஆகவேண்டும் என்று அவளுக்குத் தெரியும்போல!
எல்லா கணவர்மார்களும் நல்லவர்களே; நல்லவர்களாகவே எப்போதும் இருப்பார்கள்;
அப்படித்தான் எல்லா மனைவிகளும் நினைத்து வருகிறார்கள்; அதற்குமேல் எனக்குச் சொல்லத் தெரியவில்லை; All husbands are good
and always have been, as every wife knows! I shall say no more.
"அப்பா!..... அம்மா!
...... நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். ஜீசஸ்
கிறிஸ்து என்னை காப்பாற்றுவார்; உங்கள் மகள் கான்ஸ்டான்ஸ்க்கு
உங்களின் ஆசீர்வாதத்தை அளியுங்கள்; நான் சீக்கிரம் சிரியா நாடு
சென்று விடுவேன்; மறுபடியும் உங்களை எப்போது பார்ப்பேன் என்றே
எனக்குத் தெரியவில்லை; நமக்காக உயிர் தியாகம் செய்த ஜீசஸ் கிறிஸ்து
எனக்காகவும் ஆசிவழங்குவார்; நான் பரிதாபத்துக்குறிய ஒரு பெண்தானே!
இதுவரை கேட்காத அழுகைகள்...........
புத்திகெட்ட ரோமானிய சக்கரவர்த்தியே!
கடவுளே! ஒரு ஜோதிடன் கூட இந்த ரோமாபுரியில் இல்லாமலா போய்விட்டான்? அவள் வாழ்வைக் கணித்துச் சொல்ல! கிழக்கிலிருந்து மேற்காக மறுபடியும் மறுபடியும்
சுத்திக் கொண்டிருக்கும் கிரகங்களே உங்களுக்குக் கூடத் தெரியாதா, நல்ல நேரம் எதுவென்று? எல்லா நேரமும் நல்ல நேரமாகவே இருந்துவிட
முடியாதே? கடவுளே! நாங்கள் எல்லோருமே இவ்வளவு அப்பாவிகளாகவும்
முட்டாள்களாகவும் இருந்திருக்கிறோமே?
இளவரசி கான்ஸ்டான்ஸ் விடை
பெறுகிறாள்; "எப்போதும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!
போய்வருகிறேன் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை"
என்று விடைபெறுகிறாள்; "போய்வா அழகிய மகளே;"
ஆராவாரம்!
இந்தக் கதையானது The
Man of Law's Tale ன் ஒரு பகுதி மட்டுமே இது...
இதை சுமார் 800 வருடங்களுக்கு
முன் ஜான் பெய்னி John Payne என்பவர் எழுதியுள்ளார்.
இது பெரிய கதைத் தொகுப்பு; இதை கான்டர்பரி கதைகள் என்பர் The
Canterbury Tales. அறிவு பூர்வமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் வாழ்க்கை
அனுபவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
நன்றி; கான்டர்பரி கதைகள் தொகுப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக