இளவரசி கான்ட்ஸ்டன்ஸ்
- ஏசியான் கடலில்...
Days
and years passed. Years and days! இளவரசி கான்ட்ஸ்டன்ஸ்
ஏசியான் கடலில் கப்பலில் மிதந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல! நாட்களாக.... வருடங்களாக.... கரை தெரியாப் பயணம்! மரணம்
துரத்தும் பயணம்... அவளுக்கே தெரியவில்லை ... அவள் பிழைப்பாளா மாட்டாளா என்று! .
.. . சந்தேகமே!
உங்களுக்கு ஒரு
சந்தேகம் இருக்கும். ஏன் அந்த சிரியா நாட்டு பெரும் விருந்தில் இவளைக் கொல்லவில்லை
என்று நீங்கள் கேட்கலாம். யார் இவளைக் காப்பாற்றி இருப்பார்கள்? பல கேள்விகள் உங்கள் மனதில் எழும். பதில் தெரியவில்லை. யார் சிங்கத்தின்
வாயிலிருந்து டேனியலைக் காப்பாற்றினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுபோலத்தான் இதுவும்.
(அது என்ன டேனியலும்
சிங்கமும்? இது பைபிளில் உள்ள கதை. பெர்சியா நாட்டை
ஆண்ட சக்கரவர்த்தியான டேரியஸ், ஒருநாள் நாட்டு மக்களுக்கு
ஒரு பெரிய உத்தரவு போட்டார். " இன்று முதல் முப்பது நாட்களுக்கு யாரும்
கடவுளையோ, மனிதனையோ வணங்கக் கூடாது; இந்த
உத்தரவை மீறினால் தூக்குத் தண்டனை." எல்லோரும் அமைதியாக எந்தவித வழிபாடும்
இல்லாமல் இருந்தனர்; ஆனால் கடவுளை தினந்தோறும் வழிபட்டுவரும்
டேனியலால் அவ்வாறு சும்மா இருக்க முடியவில்லை; தண்டனை
எப்படிப்பட்டது என்று தெரிந்தும், அவர் எப்போதும்போல கடவுளை
வழிபட்டு வந்தார்; இது சக்கரவர்த்திக்கு தெரியவருகிறது; டேனியலை கூப்பிட்டு வரச்
செய்கிறார்; தண்டனையாக சிங்கத்தின் குகைக்குள் போடும்படி
உத்தரவு கொடுக்கிறார்; டேனியல் தினமும் ஜாவே என்ற கடவுளை ஒரு
நாளில் மூன்று முறை பூஜை செய்து வணங்கும் பழக்கம் உள்ளவர்; சிங்கத்தின்
குகையில் என்ன செய்வார்! டேனியலைத் தூக்கி சிங்கத்தின் குகைக்குள் போடுகிறார்கள்;
மன்னர் கோபமாக "உன்
கடவுள் உன்னை வந்து காப்பாறுவாரா பார்க்கலாம்" என்று சவால் விடுகிறார்;
"May your God, whom you serve continually, rescue you!" இதுபோதாதென்று, பெரிய கருங்கல்லை வைத்து குகையின்
வாசலையும் மூடிவிட்டனர்; தப்பிக்கவும் முடியாது; மன்னருக்கு அன்று இரவு உறக்கமும் இல்லை; சாப்பாடும்
இல்லை; கவலை தொற்றிக் கொள்கிறது; விடிந்தும்
விடியாததுமாக மன்னர், சிங்கத்தின் குகையை நோக்கி ஓடி,
அங்கு சத்தமான குரலில் டேனியல்! என்று கத்துகிறார்; உன்னை உன் கடவுள் இந்தச் சிங்கங்களிலிருந்து காப்பாற்றி விட்டாரா என்றும்
சத்தமாக கேட்கிறார்; உள்ளே இருந்த டேனியல், "மன்னரே வாழ்க! நேற்று என் கடவுள் அவரின் தேவதையை அனுப்பி சிங்கங்களின்
வாயைக் கட்டிப்போட்டுவிட்டார்; அதனால் நானும்
தப்பித்தேன்" என்று கூறுகிறார்; உடனடியாக டேனியல்
மீட்கப் பட்டார்; அவர் உடலில் ஒரு காயமும் இல்லை; இவரை காட்டிக் கொடுத்தவரை அதே குகைக்குள் தூக்கிப் போடுகிறார்கள்; சிறு நேரத்தில் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகிறது; மன்னர்
அப்போது ஒரு உத்தரவு போடுகிறார்; இனி நாட்டு மக்கள்
எல்லோரும் டேனியலின் கடவுளை வணங்க வேண்டும்" என்று உத்தரவு. எல்லோருக்கும்
சந்தேகம் டேனியல் சிங்கத்தின் வாயிலிலிருந்து எப்படி தப்பித்தார்; உண்மையில் கடவுளின் தேவதை வந்து காப்பாற்றி இருக்குமா? இன்னும் இதற்கு விடை கிடைக்கவில்லை.)
எந்தக் கடவுள்
டேனியலை சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றினாரோ, அவரே
இந்த இளவரசி கான்ஸ்டான்ஸையும் காப்பாற்றினார் இவ்வளவு நாளும்!
சரி! சிரியா நாட்டு
விருந்தில் இவள் கொலை செய்யப்படாமல் யாரோ ஒருவர் காப்பாற்றினார் என்றே வைத்துக்
கொண்டாலும், இந்த உப்புக்கடலில் மூழ்காமல் யார் இவளை
காப்பாற்றிக் கொண்டு வருவது? "திமிங்கிலத்தின்
வாயிலிருந்து ஜோனாஸை காப்பாற்றியவரே, இவளையும் இந்த
இக்கட்டிலிருந்து காப்பாற்றி இருப்பார்!
(கடவுள் பேச்சை
கேட்காமல் கடலில் போன ஜோனாவை, பெரும் புயலை ஏற்படுத்தி
கப்பலைக் கவிழ்த்து, கடலில் மூழ்க இருந்த ஜோனாவை மட்டும் ஒரு
பெரிய மீன் வந்து விழுங்கிச் சென்று மறுநாள் கரையில் துப்பியது; கடவுள் போகச் சொன்ன இடம் அதுதான்.)
இந்த மூன்று
வருடங்களாக கான்டான்ஸுக்கு யார் உணவு கொடுத்திருப்பார்கள்? மூன்று வருடங்களாக..... யார் கொடுத்திருப்பர்; கடவுள்தான்
கொடுத்திருக்க முடியும்! ஐந்து ரொட்டித் துண்டுகளையும் இரண்ட் மீன் துண்டுகளையும்
வைத்துக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர் எவரோ அவரே இவளுக்கும்
உணவளித்திருக்க முடியும்! கடலிலேயே
மிதந்து, அலைகள் அடித்து அடித்து நார்தம்பர்லாண்டுக்கு
வந்துவிட்டாள். அங்கு கோட்டை கொத்தளங்கள் இருக்கின்றன; அதன்
காவல் அதிகாரி இந்தக் கப்பலை கண்டுவிட்டான்; உடைந்த கப்பல்;
அதில் நைந்துபோன பெண்; கருணை காட்டும்படி
கெஞ்சுகிறாள்; ஆனால் அவள் மொழியில் அந்த கெஞ்சல் உள்ளது;
தன்னை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என் கேட்டுக் கொள்கிறாள்; இவள் பேசுவது லத்தீன் மொழி; அவன் கப்பலை சுற்றி
சோதனை இடுகிறான்; பிரயாணத்தில் வழி தவறி விட்டதாகச்
சொல்கிறாள்; தான் யார் என்பது நினைவில்லை என்கிறாள்; கிளம்பும்போது இருந்த நினைவு இப்போது இல்லை என்றும்; என்ன நடந்த்து என்றும் தெரியவில்லை என்றும் சொல்லிச் சமாளிக்கிறாள்;
காவல் அதிகாரி அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்; தன் மனைவியின் பொறுப்பில் விடுகிறான்; இவள் மீது
இருவருமே இரக்கம் கொள்கிறார்கள்; காவல் அதிகாரியின் மனைவி
அழுதே விடுகிறாள்; அங்கு தங்க வைக்கப் படுகிறாள்; எங்குள்ள எல்லோருக்கும் இவளைப் பிடித்து விடுகிறது; இந்த
பகுதி ஒரு காட்டுவாசிப் பகுதி; கான்ஸ்டான்ஸ் பக்திப்
பாடல்களை பாடிக் கொண்டு பொழுதை கழித்து உழைக்கிறாள்; இங்கிருந்த
பல கிறிஸ்தவர்களை இந்த நாடு விரட்டி விட்டது; அவர்கள் வேல்ஸ்
நாட்டுக்கு ஓடிப் போய்விட்டார்கள்; கடவுளை வழிபடாத
காட்டுவாசிகள் இவர்கள்; காவல் அதிகாரியின் மனைவியோ
கான்ஸ்டான்ஸின் கடவுள் பக்தியை கண்டு அதிசயித்து அவளைப் போலவே இவளும் கடவுள்
பக்தியில் இறங்கி விட்டாள்; கணவனுக்குத் தெரியாது; கான்ஸ்டான்ஸ், ஒரு கண் தெரியாதவருக்கு கடவுளிடம்
வேண்டி கண்பார்வை கொடுத்திருக்கிறாள்; ஆனால் எப்போதும்
சாத்தான் தன் தருணத்துக்காக காத்துக் கொண்டே இருக்குமாம்; ஒரு
போர்வீரனை தேர்வு செய்து இந்த வேலையை சாத்தான் செய்கிறது; அவன்
இந்த கான்ஸ்டான்ஸ் மீது அளவில்லா காதல் கொள்கிறான்; அவள்
விரைவில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் இறப்பதற்கும் தயாராக இருப்பான் போல!
ஆனால் அவளோ இந்த பாவத்தை செய்ய விரும்பவில்லை; ஒருநாள்
யாருக்கும் தெரியாமல், அந்த போர்வீரன், காவல் அதிகாரியின் மனைவியின் படுக்கையில் படுத்துவிடுகிறான்; அதே அறையில்தான் இந்த கான்ஸ்டான்ஸும் படுத்துக் கிடக்கிறாள்; மெதுவாக காவல் அதிகாரியின் மனைவியின் கழுத்தை அறுத்து விடுகிறான்; அந்த ரத்தம் படிந்த கத்தியை கான்ஸ்டான்ஸின் பக்கத்தில் வைத்துவிட்டு
ஓடிவிடுகிறான்; காவல் அதிகாரி கொலையுண்ட மனைவியைப் பார்த்து
கதறுகிறார்; கத்தி கான்ஸ்டான்ஸிக்கு அருகிலேயே கிடக்கிறது;
அவளால் பேச முடியாமல் பேச்சு நின்றுவிட்டது; மன்னருக்கு
தகவல் தெரிகிறது; வெட்டுவதற்கு ஆட்டை இழுத்துச் செல்வது போல,
கான்ஸ்டான்ஸை மன்னரிடம் இழுத்துச் செல்கின்றனர்; எப்படி இவள் இந்த கொலையை செய்திருக்க முடியும்? எல்லோருக்கும்
ஆச்சரியம்தான்! எல்லோரும் சாட்சி சொல்கிறார்கள்; இந்த
பெண்ணும் காவல் அதிகாரியின் மனைவியின் ஒருவருக்கொருவர் பிரியமானவர்கள்; நிச்சயமாக இந்தப் பெண் இந்த கொலையைச் செய்திருக்க வாய்பே இல்லை என்று
அடித்துச் சொல்கிறார்கள்; மன்னருக்கு குழப்பம்; இன்னும் விசாரனை வட்டத்தை அதிகப் படுத்தினார்; கான்ஸ்டான்ஸ்
மகளே! கடவுள் உன்னை காப்பாற்றினால் அன்றி, உன்னை தூக்கில்
இட்டுவிடுவார்கள்; "கடவுளே! நீதான் கெட்டவனிடமிருந்து
சூசன்னாவை காப்பாற்றினாய்; மேரித் தாயே! நான் எந்தக்
குற்றமும் செய்யாதவள்; என்னைக் காப்பாற்று; இல்லையென்றால் என்னை இப்போதே கொன்றுவிடு." கெஞ்சுகிறாள்;
கொலைக் குற்றம்
சுமத்தி தூக்கில் இடுவதற்காக யாரையாவது மக்கள் கூட்டத்தின் நடுவே இழுத்துக் கொண்டு
போகும்போது அவர் முகத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அப்படி முகம் இருண்டுவிட்டது இந்த கான்ஸ்டான்ஸ் பெண்ணுக்கு; மன்னருக்கே சிறிது இரக்கம் வந்துவிட்டது; அவரின்
கண்களிலிருந்து ஒருசொட்டு கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓடியது; உடனடியாக மன்னர் ஆணையிடுகிறார், "அந்த
போர்வீரனைக் கூப்பிடுங்கள்; அந்த புத்தகத்தை கொண்டு
வாருங்கள்; இதன்மீது அவன் கைவைத்து சத்தியம் செய்யட்டும்,
இந்தப் பெண்தான் காவல்அதிகாரியின் மனைவியைக் கொன்றவன் என்று;
பின்னர் நாம் தண்டனை கொடுப்போம்;" என்கிறார்;
அதில் கைவைத்து அவள்தான் அந்த பெண்ணைக் கொன்றாள் என்று கூசாமல் பொய்
கூறுகிறான்; உடனே
எங்கிருந்தோ ஒரு கை அவன் தலையில் அடிக்கிறது, கீழே
விழுகிறான்; உணர்வு இல்லை; கண்கள்
துருத்திக் கொண்டன; ஒரு அசரிரி கேட்கிறது, "இந்த அப்பாவிப் பெண்ணை பழிசுமத்துகிறாய்; நீ வாழ
தகுதி இல்லாதவன்." இதைக் கண்ட அனைவருக்கும் ஆச்சரியம்; கான்ஸ்டான்ஸ்
பெண்ணின் வழிபாட்டால்தான் இப்படி அதிசயம் நடந்தது என்று நினைக்கின்றனர்; மன்னரும் மக்களும் இவள் மதத்துக்கு மாறி விட்டனர்; பின்னர்
வெகுநாள் கழித்து, இவளது நல்ல குணத்தை கண்டு, மன்னர் இவளை திருமணம் செய்ய நினைக்கிறார்.
இங்கும் மன்னரின்
தாய் சகுனியாகிறாள்;
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக