Fellow of the Royal Society (FRS):
இங்கிலாந்து மன்னர் 2-ம் சார்லஸ், 1660ல் இந்த சொசைட்டியை உருவாக்கினார்; விஞ்ஞான
அறிவாளிகள், எஞ்சினியர்கள், இதில்
உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்; இந்த
உறுப்பினர்களுக்குப் பெயர்தான் 'பெலோ' 'Fellow" இது ஒரு கௌரவ பட்டம் போல
கொடுக்கப்படும்; இங்கிலாந்து, காமன்வெல்த்
நாடுகள் இவைகளிலிருந்து தேர்தெடுத்து இந்தப் பட்டத்தைக் கொடுப்பர்; இந்த உலக்குக்கு உபயோகப்படும் விஞ்ஞான செயல்களை செய்திருப்பவர்களுக்கு
கொடுக்கப்படும்;ஒவ்வொரு வருடமும் 52 பேர்கள் இவ்வாறு புதிய
பெல்லாக்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இப்போதுவரை மொத்தம்
145- பெல்லோக்கள் இதில் இருக்கிறார்கள்;
இதில், பெல்லோ பட்டம் பெற்ற முதல்
இந்தியர் Ardaseer Cursetjee (Wadia): இவர் பார்சி; இவர் இந்திய கப்பல் கட்டும் எஞ்சினியர் ஆவார்; இவரின்
22 வது வயதில் இவரின் தகப்பனாரின் கம்பெனியில், இவருடைய
மேற்பார்வையில் 60 டன் எடை கொண்ட கப்பலை தயாரித்து கடலில் மிதக்கவிட்டவர்; இது நடந்தது 1822-ல் பம்பாயில்;
பல கண்டுபிடிப்புகளை கண்டவர்; 1841ல் இவருக்கு
பெல்லோ பட்டம் FRS வழங்கி கௌரவிக்கப்பட்டதாம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக