part-2 (The Man of Law's
Tale)
கப்பல் ஏறிய இளவரசி
கான்ஸ்டான்ஸ், நல்ல மனதுடன் இருக்க எல்லா முயற்சிகளும்
எடுத்துக் கொள்கிறாள்; ரோமிலிருந்து கப்பல் சிரியா நோக்கி
போகிறது;
சுல்தானின் சிரியா
நாடு;
சுல்தானின் தாயார் --
கெட்டதற்காகவே பிறந்திருப்பார் போல! பெற்ற தாய்
எப்படி இவ்வளவு வில்லியாக இருக்க முடியும்? தன்
மகன் சுல்தான், கிறிஸ்தவனா? என்ன
அநியாயம் இது? என்ன அக்கிரமம் இது? மன்னன்
என்றால், கேட்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டானா?
தனக்கு நம்பிக்கையான ஆட்களையும் முக்கியமானவர்களையும் இரகசியமாக
கூப்பிட்டு அனுப்புகிறாள்; எல்லோரும் பதறிக் கொண்டு இவளிடம்
ஓடி வருகிறார்கள்; "நீதிமான்களே! எல்லாம்வல்ல அல்லாவின்
தூதரான முகமது நபிகளின் புனித சட்டங்களை என் மகன் மீறிவிட்டான்; ஆனால், நான் ஒரே ஒரு வரத்தை மட்டும் நம் அல்லாவிடம்
கேட்டுக் கொள்கிறேன்; என் உயிர் என் உடம்பை விட்டுப் பிரிவதற்குள் முகமது நபிகளின் சட்டம் இங்கு
நடைபெறுவதை என் இதயம் கேட்க வேண்டும்" என்று கேட்கிறாள்; இந்த புதிய மதம் நமக்கு என்ன கொடுத்துவிடப் போகிறதாம்? அடிமைத்தனத்தையும் பாவமன்னிப்பையும் தவிர வேறு எதைக் கொடுக்குமாம்?
நாம் நம் நம்பிக்கைகளை விட்டதற்காக, இறப்புக்கு
பிந்திய காலத்தில் நம்மை நகரத்தில் தள்ளும்! எனவே சீமான்களே நான் சொல்வதை நீங்கள்
கேட்டால் நாம் எல்லோரும் பாதுகாப்பாகவே இருப்போம்; எல்லோரும் ஒரே குரலில் சத்தியம்
செய்கிறார்கள்; Yes! உங்களுக்குத் துணையாக இருப்போம்;
வாழ்வானலும் சரி, சாவானாலும் சரி; come
life or death; நாங்கள் மட்டுமல்ல எங்களின் நண்பர்கள்
உறவினர்களையும் இதில் சேர்த்துக் கொள்வோம்;
இது போதும்; இப்போது நான் சொல்வதை கேளுங்கள்; முதலில் -- நாம்
அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்டதுபோல நடிப்போம்; நெற்றியில்
ஏதோ பச்சைதண்ணியை ஊற்றுவார்கள் அது நம்மை ஒன்றும் செய்துவிடாது; நான் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடும் செய்துவிடுகிறேன்; சுல்தானின் மனைவியாமே அவளை மலைகளில் அழையவிடுவோம், அந்த
பச்சைதண்ணி அவளுக்கு தேவைப்படும்;
ஓ! சுல்தானியப்
பெண்ணே! Oh
Sultaness! அக்கிரமங்களின் ஆணிவேரே! Root of all iniquity! நரகத்தில் உழன்று கொண்டிருக்கும் நல்லபாம்பே! Like the serpant
bound in hell. Oh deceitful woman! ஓ வஞ்சகக்காரியே! எல்லாவித
கேடுகெட்ட ஒழுக்கமும் உன்னிடமிருந்துதான் முளைத்து வளர்கிறதோ? சாத்தான் வசிக்கும் கூடு நீதானோ!
ஓ சாத்தானே! பெண்ணுக்கு அவளின் பழைய பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறாயா?
நீதானே, ஏவாளுக்கு கெட்ட புத்தியைக் கொடுத்து அதனால் மனிதவர்க்கத்தை தீராக
சாபத்துக்கு உள்ளாக்கி, அவனை மண்ணைக் கிண்டி சோறு தின்ன
வைத்தவன் ஆயிற்றே! இப்போது இங்கு வந்து, இந்த கிறஸ்தவ
திருமணத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறாய் தானே? எப்போதும்
நீ, பெண்களை உனது கையாளாக வைத்துக் கொண்டு உன் ஏமாற்று
வேலைகளை செய்து முடிப்பாய்!
ஏன் நான் இந்த
சுல்தானியச்சியை திட்டவும் சாபம் கொடுக்கவும் செய்கிறேன் என்றால், அவள் செயல் அப்படிப்பட்டது; அவள் தன் ஆலோசகர்களை
சத்தமில்லாமல் வெளியேற்றி விட்டாள்; நேராக தன் மகன்
சுல்தானிடம் சென்று, "மகனே நான் இஸ்லாத்தை
விட்டுவிட்டேன்; கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டேன்; இதுவரை கிறிஸ்தவராக மாறாமல் இருந்ததற்காக விமோசனம் தேடுகிறேன்; அதற்கு பிராயசித்தமாக, என் பொறுப்பிலேயே ஒரு பெரிய
விருந்தை கிறிஸ்தவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; அதற்கு
உன் அனுமதியும் வேண்டும்" என்று மகனை வேண்டுகிறாள்; எவ்வளவுக்கு
அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமோ அவ்வளவுக்கு இந்த விருந்து இருக்க வேண்டும்;
**
ரோமாபுரியிலிருந்து
கப்பலில் வந்த கிறிஸ்தவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்; சிரியா அவர்களை எதிர்கொள்கிறது; பெருத்த ஆடம்பரமும்
பகட்டுமாக இருந்தது; with much pomp and splendour; சுல்தான்
சந்தோஷத்தில் மிதந்தார்; முதலில் தன் தாய்க்கு சொல்லி
அனுப்பினார்; பின்னர் பிரபுக்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் தகவலைச் சொல்லச் சொன்னார்; "என் மனைவி வந்துவிட்டாள்; எனக்காகவும், என் மனைவிக்காகவும், நீங்கள் அனைவரும் நேரில் சென்று
எதிர் சேவை செய்து வரவேற்று அழைத்து வாருங்கள்."
அழகழகாக உடுத்திய
பெண்களும், கனவான்களும் ஒன்று கலந்து நிற்கிறார்கள்;
ரோமன்களும் சிரியன்களும் கலந்து விட்டார்கள்; தன்
மகளை வரவேற்பதைப் போன்றே முகத்தை வைத்துக் கொண்டு சுல்தானின் தாயும் தன் மருமகள்
கான்ஸ்டன்ஸை சந்தோஷ முகத்துடன் வரவேற்று அவளை நகருக்குள் மெதுவாகவும்
சம்பிரதாயமாகவும் அழைத்து வருகிறாள்; ரோமானிய மாவீரன்
ஜூலியஸ் சீசரின் வெற்றியை அந்நாடு வெகு விமரிசையாக கொண்டாடியதாக, ரோமானியக் கவிஞன் லூக்கன் வர்ணித்திருப்பதை நான் நம்ப மாட்டேன்; அதைவிட இந்த வரவேற்பு மிக மிகப் பெரியது என்றே சொல்வேன்;
சுல்தானும் மிக
ஆடம்பரமாக நேரிலேயே வந்துவிட்டார்; மனைவியைப்
பார்த்து ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகிவிட்டார்; வாயெல்லாம்
பல்லாக, முகமெல்லாம் சிரிப்பாக, உடம்பெல்லாம்
குதூகுலமாக மனைவியை வரவேற்கிறார்; ஒருவரையொருவர் பார்த்து
ரசிக்கட்டும் என்று நாம் ஒதுங்கிவிடுவோம்;
**
மாலை நேரம்; சுல்தானின் தாயார் புது மருமகளுக்குக் கொடுக்கும் பெரும் விருந்து;
ரோமானிய கிறிஸ்தவர்கள் எல்லோரும் விருந்துக்கு வந்துவிட்டனர்;
பரிமாறப்பட்ட உணவுகள் ஒன்றா இரண்டா! அவைகளின் பெயர்கூட எனக்குத்
தெரியாதே! தெரிந்தால்தானே அது என்னவென்று சொல்ல! இதுவரை பார்த்திராத, ருசித்திடாத உணவுகள்; ஆனால், அதை
தின்று முடித்து எழுவதற்குள் அதற்குறிய "விலையை" கொடுத்தே ஆகவேண்டும்
என்பது விதிபோலும்! ஓ! என்ன சோகம்! எல்லா மகிழ்ச்சிக்கும் அடுத்து இந்த துயரம்
வரிசையில் நிற்கத்தான் செய்யும்போல! இந்த தத்துவத்தை எப்போதும் நாம் மனதில்
கொள்ளத்தான் வேண்டும்; அங்கு விருந்தில் இருந்த அனைவரையும்
வெட்டிச் சாய்க்கின்றனர்; கழுத்தும் துண்டமுமாக எல்லாம்;
ஆனால், இளவரசி கான்ஸ்டான்ஸை மட்டும் ஒன்றும்
செய்யாமல் விடுகின்றனர்; உடனடியாக கான்ஸ்டான்ஸை அந்த இடத்தை
விட்டு வெளியேற்றுகிறார்கள்; அங்கு கடலில் நின்று
கொண்டிருந்து கப்பலில் ஏற்றி விடுகிறார்கள்; அந்தக்
கப்பலுக்கு சுக்கான் (rudder) இல்லை; உடனடியாக
அவளுக்கு கப்பலை இயக்குவது எப்படி என்று சொல்லித் தந்து, இதைக்கொண்டு
இத்தாலிக்கே தப்பிச் செல்லும்படி சொல்லிவிடுகிறார்கள்; அவளுக்கு
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; கையிலிருந்து பணமும்,
துணிமணியுடன் உப்புக்கடலில் பிரயாணத்தை தொடர்கிறாள்;
ஓ! கான்ஸ்டான்ஸ்!
சக்கரவர்த்தியின் மகளே! நல்லொழுக்கத்தின் பிம்பமே! அதிர்ஷடத்தின் கடவுள்தான் இனி
உன்னை வழிகாட்ட வேண்டும்!
**
இந்தக் கதையானது The
Man of Law's Tale ன் ஒரு பகுதி மட்டுமே இது...
இதை சுமார் 800
வருடங்களுக்கு முன் ஜான் பெய்னி John Payne என்பவர்
எழுதியுள்ளார். இது பெரிய கதைத் தொகுப்பு; இதை கான்டர்பரி
கதைகள் என்பர் The Canterbury Tales. அறிவு பூர்வமானதாகவும்
உணர்வு பூர்வமானதாகவும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
நன்றி; கான்டர்பரி
கதைகள் தொகுப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக