ஞாயிறு, 3 மே, 2015

Sir Richard Francis Burton

Sir Richard Francis Burton
ரிச்சர்டு பிரான்சிஸ் பர்ட்டன் இங்கிலாந்து அரசில் பல வேலைகள் செய்தவர். நாடு சுற்றுவதில் மன்னர். 30 மொழிகள் இவருக்கு அத்துபடியாம். அந்தந்த ஊர்காரரைப் போலவே அவர்களின் மொழியைப் பேசுவாராம். அந்தந்த ஊர் பழக்க வழக்கமும் அத்துபடியாம். இவர் கிறிஸ்தவர். எனவே மெக்காவுக்குள் இவரால் நுழைய முடியாது. ஆனாலும் அரேபிய மொழியைக் கற்றுக் கொண்டு, முஸ்லீம் தொழுகையையும் அப்படியே கற்றுக் கொண்டு மெக்காவுக்கே போய்விட்டு வந்தவராம். வழியில் எவராவது சந்தேகப்பட்டு நம்மை சோதித்துப் பார்க்கக்கூடும் என்று நினைத்து, இவர் "சுன்னத்தும்" செய்து கொண்டாராம். ஒரு உண்மையான முஸ்லீமைப் போலவே தொழுவதும், நடை உடை பாவனையும், அரபுமொழிப் பேச்சும் இவரிடம் இருந்ததாம். இதுபோல இவரின் வாழ்க்கையில் நிறைய வீரதீரச் செயல்களை செய்தவர் இவர்.

இவருக்குத்தான் எல்லா மொழியும் தெரியுமே! எனவே ஆரேபியக் கதைகளான ஆயிரத்து ஒரு இரவுகள் என்ற கதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே! இவருக்கு முன்னர் பிரென்ஞ் மொழியில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இவர் காமசூத்ரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கைப்பிரதியாக வைத்திருந்தார். இவர் இறந்தவுடன், இவரின் மனைவி அவைகளை கிழித்துப் போட்டுவிட்டாராம்.

பர்ட்டன், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியில் இந்திய ஆர்மியில் கேப்டனாக இருந்தவர். கிரிமியான் யுத்தத்திலும் கலந்து கொண்டவர். ஆள் ஒல்லியாக இருந்தாலும் வீரத்திலும் அறிவிலும் சிறந்தவர். இவரின் சின்ன வயதில், ஒரு ரோமா என்னும் ஜிப்ஸி பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருப்பாராம். அவளின் மொழியை அத்துபடியாக கற்றுக் கொண்டுள்ளார். இவர் மாதிரி அந்த ரோமானி மொழியை யாருமே அப்படிப் பேசிவிட முடியாதாம். இந்தியாவில் இராணுவத்தில் இருக்கும்போது பம்பாய் குஜராத்தில் இருந்தாராம். இங்கு ஹிந்துஸ்தானி, குஜராத்தி, பஞ்சாபி, சிந்தி, சராய்கி, மராத்தி, பெர்ஷியன், அராபிக், ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளையும் சரளமாக கற்றுக் கொண்டாராம். இங்கு அவரின் இந்து ஆசிரியரிடம் அனுமதி பெற்று பூணூலும் போட்டுக் கொண்டாராம். (Janeu = Brahminicla Thread); இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ராணுவத்தில் இருக்கும்போது பக்கத்தில் பல குரங்குகளை வைத்து அதனுடன் பழகுவாராம். அவை என்ன மொழி பேசிக் கொள்கின்றன என உன்னிப்பாக கவனிப்பாராம். இவர் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறையுடன் ஒட்டி வாழ்வதால், இவரின் நண்பர்கள் இவரை "White Nigger" வெள்ளைக்கார கறுப்பன் என்று கோபமாகத் திட்டியும் இருக்கிறார்களாம்.

"நாம் எவ்வளவோ மதநூல்களைப் படித்தபோதிலும், கடைசியில் நாம் கடவுளை வணங்குவதை விட்டு, நம்மையே நாம் வணங்கும் உண்மையைத் தெரிந்து கொள்வோம்" என்கிறார்.

வாழ்வின் தத்துவமாக Happiness and Misery are eqully divided and distributed in the world. இந்த உலகத்தில் மகிழ்ச்சியும் துயரமும் சரிபாதியாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது, என்கிறார்.

நம் நண்பர்களையே வருடங்கள் கழித்து பார்த்தால், அவர்கள் அதேபோல இருக்கமாட்டார்கள், மாறியே இருப்பார்கள், காலம் நம்மை மாற்றித்தான் இருக்கும், என்கிறார்.
Yet ne'er the self-same men shall meet; the years shall make us other men.

 *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக