"The Monk's
Tale" is one of The Canterbury Tales by it author Geoffrey Chaucer: ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான்
இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு
முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);
விடிவெள்ளியின் சோகக் கதையைச் சொல்லிமுடித்து, அடுத்த சோகக் கதைக்கு வருகிறார். . . .. .
அடுத்து,ஆடம் என்னும் ஆதாம் (Adam) கதையை கேட்டிருப்பீர்கள்!
இந்த உலகம் உருவானபோது, எந்தப் பாவமும் செய்யாத ஒரே ஒருவன் இந்த ஆடம் (ஆதாம்) மட்டுமே!
கடவுள் இந்த உலகத்தை படைக்கிறார்; அங்கு ஒரு அழகான தோட்டத்தை படைக்கிறார்; அதுதான் ஏடன்
தோட்டம் - Eden Garden. அதுதான் சொர்க்கம்; நிறைய மரங்கள்; நிறைய பூக்கள்; நிறைய பழங்கள்; இத்தனைக்கும் நடுவே ஒரேயொரு மரம் தனியே
நிற்கிறது; அதுதான் மனிதனுக்கு "நல்லது எது, கெட்டது எது என்று காட்டிக்கொடுக்கும் குணத்தை தரும் பழங்களைக் கொண்ட மரம்;
சிலர் ஆப்பிள் மரம் என்கின்றனர்; ஆதாமை தனியே கூப்பிட்ட
கடவுள், "நீ, இங்குள்ள எல்லா மரத்தின்
பழங்களையும் சாப்பிடலாம்; ஆனால் குறிப்பாக இந்த மரத்தின் பழத்தை
எந்தக் காரணத்தைக் கொண்டும் சாப்பிடாதே; இது என் உத்தரவு"
என்று கண்டிப்புடன் கூறுகிறார்;
"You may eat fruits from any
tree you like, but not from the Tree of Knowledge. If you do not obey, you
shall die."
கடவுள் சொல்வதை "முதல்
மனிதன்" கேட்கவில்லை; விதி;
அந்த ஏடன் நந்தவனத்தில்
பல விலங்குகள்; அதில் பாம்பும் ஒன்று; ஆதாமுக்கு பேச்சுத் துணைக்கு ஏவாள் என்ற பெண்ணை, அவன்
எலும்பிலிருந்தே படைத்து துணைக்கு கொடுத்துவிட்டுப் போனார்; இருவருமே
எந்த ஆசையும் இல்லாமல் சுற்றித் திரிகின்றனர்;
அந்தப் பாம்பு, ஏவாள் பெண்ணிடம் வந்து, இந்த மரத்தின் பழத்தை உண்டால்,
நீ புத்திசாலி ஆகிவிடுவாய்; கடவுளைப் போலவே புத்திசாலி;
ஆசை மனிதனை விடுவதில்லை; ஆதாமை கட்டாயப்படுத்தி
இருவரும் பழத்தை உண்கின்றனர்; கடவுள் திரும்பி வந்து பார்க்கிறார்.
இருவரும் மரத்தில் ஒழிந்து கொள்கின்றனர்; இருவரும் நிர்வாணமாக
இருப்பதால், அறிவுவந்து, வெட்கப்பட்டுள்ளனர்;
கடவுளுக்கு கோபம்! மனிதன்
எப்போதுமே சொன்ன பேச்சை கேட்கமாட்டான்; ஆசைக்கு துணைபோவான்;
இவன் அழிவதும் இந்த ஆசையால்தான்;
கோபத்தில் கடவுள் சாபமிடுகிறார். பாரடைஸ் என்னும் சொர்க்க வாழ்கையிலிருந்து மனிதனைத் தூக்கி எறிகிறார்.
கடவுள், பிரியத்துடன் படைத்த ஆதாம் என்னும் மனிதன், அன்றுமுதல்
துன்பத்துக்கு ஆளாகி உழல்கிறான்.
அவனின் சோகக்கதை இதுதான்!
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக