செவ்வாய், 31 மார்ச், 2015

Marie Curie மேரி க்யூரி

Marie Curie  மேரி க்யூரி
முதல் உலகப்போர் நடந்து கொண்டிருக்கிறது; நமக்காக வீரர்கள் போர் புரிகிறார்கள்; நாம் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய வாருங்கள்! வாருங்கள்! என அழைக்கிறார்; யாரும் இவரின் பேச்சை காதுகொடுத்து கேட்கவில்லை; இவரே எக்ஸ்-ரே கருவிகளுடன், மருந்துகளுடன் போர் களத்துக்கே கிளம்பிவிட்டார்; பத்துலட்சம் வீரர்கள்.... மருந்து போதவில்லை....திசுக்களை ஸ்டெர்லைஸ் செய்வதற்கு நிறமில்லா ரேடியோ ஆக்டிவ் வாயுவான "ரேடான்" என்ற  வாயுவை உபயோகிக்கிறார்;
1903ல் ரசாயனத்துக்கான நோபல் பரிசை வாங்கியவர்; பின்னர் 1911ல் பௌதீகத்திற்கான நோபல் பரிசை வாங்கியவர்;
போலந்து நாட்டில் உள்ள வர்ஜாவில் பிறந்தவர்; முழுப்பெயர் Marie Sklodowska; சொந்த மண்ணில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை; பிரான்ஸ் நாட்டின் பாரிஸூக்கு வருகிறார்; இங்கு பெரி-க்யூரி (Pierre Curie) என்ற வாலிபரை சந்திக்கிறார்; இவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரே; திருமணம் செய்து கொள்கின்றனர்; ஆனால் வாழ்வதற்கு நேரமில்லை; எல்லா நேரமும் சோதனைச் சாலையிலேயே வாழ்கின்றனர்; சைக்கிளில் சுற்றுவது இருவருக்கும் பிடித்த பொழுதுபோக்காம்;
மேரி 1867ல் பிறந்தவர்; 66 வயது வரை வாழ்ந்தவர்; 1934ல் இறந்தார்;
ரேடியா ஆக்டிவ்?
ஆணுக்களில் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என மூன்று பொருள்கள் உண்டு; இதில் புரோட்டான் எத்தனை எண்ணிக்கையில் உள்ளதோ அதே எண்ணிக்கையிலேயே நியூட்ரானும் இருக்கும்; இருந்தால்தான் அது நிலையாக இருக்க முடியும்; சில நேரங்களில், நியூட்ரான் எண்ணிக்கை ஒன்று, இரண்டு அதிகமாக இருக்கும்; இதைத்தான் "ஐசடோப்" Isotope என்கிறோம்; உதாரணமாக கார்பன் அணுவில் 6 புரோட்டான், 6 நியூட்ரான் மட்டுமே இருக்க வேண்டும்; கார்பனின் அட்டாமிக் நம்பர் 6 (புரோட்டானின் எண்ணிக்கையே அதன் அட்டாமிக் நம்பர்); ஆனாலும் 6 நியூட்ரான், 7 நியூட்ரான், 8 நியூட்ரான் இருப்பதும் ஆச்சரியமில்லை; இவைகள்தான் கார்பன் ஐசடோப்கள், கார்பன்-12, கார்பன்-13, கார்பன்-14; ஐசடோப் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தை; ஐசோ என்றால் சமம் என்றும் டோப் என்றால் இருக்கிறது என்றும் பொருளாம்; இந்தமாதிரி ஐசடோப்புகளில் (அதாவது கார்பன்-14ல்) ரேடியோ ஆக்டிக் கதிர்வீச்சு வருமாம்; இதுபோன்ற மற்ற பொருள்கள் ஹீலியம்-3, ஹீலியம்-4, யுரேனியம்-235, யுரேனியம்-239; ரேடியோ ஆக்டிக் கொடுக்கும் ஐசடோப்புகளை ரேடியோ-ஐசடோப் (அல்லது ரேடியோ-நியூக்குலாட்ஸ்) என்பர்;
இதுபோல பூமியில் மொத்தம் 339 நியூக்குலாட்ஸ் இயற்கையாகவே உள்ளன; இந்த சூரிய உலகம் ஏற்பட்டபோதே அவைகளும் உருவாகினவாம்; சிலவற்றில் வேகமாக கதிர்வீச்சு இருக்கும்; சிலவற்றில் மெதுவாகவே இருக்கும்; 80 மில்லியன் வருடங்கள் என்றால் எவ்வளவு காலம் என்பதை பார்த்துக் கொள்ளலாம்; 1913ல் தான் இது நமக்கே தெரியவந்துள்ளது;
இந்த ரேடியோஆக்டிவ் பொருளிலிருந்து கிளம்பும் ரே என்னும் கதிர்வீச்சானது, கேன்சர் நோயில் உள்ள ட்யூமர் செல்களை வேகமாக அழிக்கும்; பக்கத்தில் உள்ள நல்ல செல்கள் மிக மெதுவாகவே அழிக்கும் தன்மை கொண்டதாம்; 1903ல் பௌதீகத்துக்காக க்யூரி தம்பதிகள் இருவருக்கும் கொடுத்த நோபல் பரிசைக்கூட வாங்க,ஸ்வீடனுக்கு போகக்கூ முடிய வில்லையாம், அவ்வளவு பிஸி!
கணவர் பெரி-க்யூரி குதிரை வண்டியிலிருந்து விழுந்து அதனால் இறந்துவிட்டார்;
1910ல் ரேடியம், பொலோனியம் என்ற இரண்டு பொருள்களை கண்டுபிடித்ததற்காக இரசாயனத்தில் நோபல் பரிசு தனியே வாங்கினார் மேரி;
1934ல் இவர் இறக்கிறார்; அதிகப்படியான ரேடியோ ஆக்டிவ் கதிர்கள் இவர் உடலில் பாய்ந்துள்ளதாம்; மரியாதை நிமித்தமாக, பாரிஸில் உள்ள கல்லறைக் கட்டிடமான பேந்தியான் (Pantheon) கட்டிடத்தில் இவரின் உடல் பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது; இந்த கட்டிடத்தில் அடக்கம் செய்யும் 2வது பெருமைமிக்க பெண்மணி இவர்தானாம்!


video et taceo" ("I see, and say nothing")

video et taceo" ("I see, and say nothing"
பார்த்தேன், ஆனால் கருத்துச் சொல்ல ஏதுமில்லை”
இங்கிலாந்து ராணி 1-ம் எலிசபெத்தின் தாரக மந்திரம் இது;
இவர் 45 வருடங்கள் ராணியாக இருந்தவர்; (1533-ல் பிறந்து 1603 வரை வாழ்ந்தவர்; 1558ல் தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணி ஆனார்);
45 வருட ராணி இவர்திருமணம் இல்லாமல் கன்னியாகவே இருந்த ராணி (Virgin Queen) எனவும் இவருக்கு செல்லப் பெயர் உண்டு;
இவர் காலத்தில்தான் கடல்வழி படைகளை ஊக்குவித்து, வியாபாரத்தையும் விரிவு படுத்தினார்; இவர் புராடஸ்டன்ட் மதத்தை தழுவினாலும், கத்தோலிக்க மதக் கொள்கைகளையும், ஆங்கிலிக்கன் மதக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டார்; இதுவே இவரின் வெற்றி என்றும் கூறுவர்; அப்போது கெடுபிடியாக இருந்த சர்ச் சட்டம், எல்லோரும் பொது வழிபாடு என்ற புத்தகத்தில் உள்ள (தாமஸ் கிரான்மர் எழுதியது) முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தவறியவர்களுக்கு தண்டனை உண்டு என்றும் சட்டம்; இதை 1-ம் எலிசபெத் அவ்வளவாக நடைமுறைப் படுத்தவில்லை; கெடுபிடி காண்பிக்கவில்லை; இது மக்களுக்கு பிடித்துப் போய்விட்டதாம்;
டூடர் இனத்தின் கடைசி வாரிசும், ராணியும் இவரே; டூடர் இன (Tudor) 8-ம் ஹென்றியின் மகள் இவர்;
"எப்போது பேச வேண்டும்; எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டுமாம்" The Knowledge of When to Speak and When to be Silent.
1-ம் எலிசபெத் ராணிக்கு இந்த தாரக மந்திரமாக "நான் பார்த்தேன்; அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்ற மந்திரமே பெயர் வாங்கிக் கொடுத்ததாம்;
நமக்கும் இதுவே பொருந்தும் என்கிறார்கள்; எதைக் கண்டாலும் விமர்சனம் செய்யாமல், பொறுமையாக இருந்தால், அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறார்கள்; ராணியும் இதையே பின்பற்றி இருந்திருக்கிறார்;



1-ம் எலிசபெத் மகாராணி:(Queen Elizabeth-I)


1-ம் எலிசபெத் மகாராணி:(Queen Elizabeth-I):
இங்கிலாந்தின் மகாராணி; 1533ல் பிறந்து, 67 வயதுவரை வாழ்ந்தவர்; தனது 25 வயதில் இங்கிலாந்து நாட்டுக்கு ராணியாகி விட்டார்; திருமணமே செய்து கொள்ளவில்லை; கன்னியாக இருந்து விட்டார்; டூடர் இன மன்னராட்சியில் இவரே கடைசி ராணி ஆவார்; (டூடர் இன மன்னர்களில் 7-ம் ஹென்றி முதல் மன்னர் ஆவார்);
8-ம் ஹென்றி மன்னரைப் பற்றிச் சொன்னால் தான், அவரின் மகளான (2-வது மனையின் மகளான) 1-ம் எலிசபெத் ராணியைப் பற்றி தெரியவரும்; ஆண் வாரிசுகள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற காலத்தில், எப்படி பெண் வாரிசான மகள் 1-ம் எலிசபெத் ராணி ஆனார் என்பது ஒரு சுவாரஸ்யமிக்க சரித்திரமே!
8ம் ஹென்றி: (சுமார் 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்);
8ம் ஹென்றி 1491ல் பிறந்தவர்; 18 வயதிலேயே மன்னராகி விட்டார்; இறக்கும்வரை மன்னராகவே இருந்தார்; 56 வயதில் இறந்தார்; 38 ஆண்டுகள் மன்னராக இருந்தவர்; 7-ம் ஹென்றியின் மகன்தான் இந்த 8-ம் ஹென்றி; ஹென்றி மன்னர்கள்தான் டூடர் (Tudor) இன மன்னர்கள்;
8-ம் ஹென்றி மன்னருக்கு வாரிசு வேண்டும் என்ற குழப்பத்தில்தான் எட்டு முறை திருமணம் செய்துள்ளார்; இவர் குழப்பத்தால்தான் இங்கிலாந்து அரசியலே குழம்பி போனது என்றுகூடச் சொல்லலாம்; அதுவரை ரோம் நகரிலுள்ள போப் அவர்களின் யோசனைப்படிதான் இங்கிலாந்து மன்னர்கள் ஆட்சி செய்வர்; இங்கிலாந்திலுள்ள சர்ச்சுகள் அனைத்தும் ரோமன் போப்-ன் நிர்வாகத்தில்தான் இருந்திருக்கிறது;
8-ம் ஹென்றி பிறந்த கதை;
7-ம் ஹென்றிக்கும், அவரின் மனைவியான யார்க்கின் எலிசபெத்துக்கும் (Elizabeth of York) பிறந்த மூன்றாவது குழந்தைதான் இந்த 8-ம் ஹென்றி; ஆனால் மகன்களில் இரண்டாவது மகன்தான் இந்த 8-ம் ஹென்றி மன்னர்; அவர் தந்தையான 7-ம் ஹென்றிக்கு மொத்தம் 7 பிள்ளைகள்; அதில் 8-ம் ஹென்றியுடன், அவரின் மூத்த சகோதரர் ஆர்தர், மார்க்ரெட், மேரி ஆகிய நான்கு குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர்; இதில் ஆர்தர், காத்தரின் என்பவரை திருமணம் செய்கிறார்; ஆனால் 5 மாதங்களிலேயே ஆர்தர் இறந்து விடுகிறார்; அப்போது ஆர்தருக்கு 15 வயதுதான்; அப்போது 8-ம்ஹென்றிக்கு 10 வயதுதான்;
அண்ணன் மனைவியான காத்தரின், தன் மனைவியானார்;
இறந்த அண்ணன் ஆர்தரின் மனைவியான காத்தரினை இவர் திருமணம் செய்து கொள்ள அவரின் தகப்பனார் 7-ம் ஹென்றி ஏற்பாடு செய்கிறார்; இவ்வாறு திருமணம் நடந்தால், சேர்ந்து வாழ வேண்டுமாம் (உடல் அளவில் சேர்ந்த வாழ்வது); மாப்பிள்ளையான இவருக்கோ 11 வயதுதான் ஆகிறது; ரோமிலிருந்து போப்பின் சம்மதமும் கிடைக்கவில்லை; இந்தக் காரணங்களால் இவரின் திருமணமும் தடைப்பட்டு விட்டது; அப்போது 8-ம் ஹென்றிக்கு வயது 11; உறவு கொள்ளமுடியாத வயதாம்; மறுவருடம் காத்தரினின் தாய் இசபெல்லா இறக்கிறார்; பிரச்சனைகளும் உருவாகின்றன; காத்தரினின் தகப்பனார் பெர்டினான்ட், தன் மகளுக்கு தூதுவர் பதவி கொடுத்து நிரந்தரமாக இங்கிலாந்திலேயே தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என மருமகனான 8-ம் ஹென்றியை கேட்கிறார்; ஒரு நான்கு வருடம் கழித்து தந்தை 7-ம் ஹென்றி இறக்கிறார்; இறந்த தந்தையின் ஆசை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி 8-ம் ஹென்றி, காத்தரினை மணக்க சம்மதிக்கிறார்; ஆனால் போப் சம்மதம் கிடைக்கவில்லை; 1509-ல் 8-ம் ஹென்றிக்கும் காத்தரினுக்கும் திருமணம் சர்ச்சில் நடக்கிறது; 8-ம் ஹென்றி இங்கிலாந்தின் ராஜாவாகவும் ஆகி விட்டார்;
காத்தரின் கர்ப்பமாகிறார்; பெண் குழந்தை இறந்தே பிறக்கிறது; மறுபடியும் கர்ப்பமாகிறார்; ஆண்குழந்தை பிறக்கிறது, ஹென்றி என்று பெயர்; 2 மாதத்தில் அந்த ஆண் குழந்தையும் இறக்கிறது; காத்தரீன் மீண்டும் கர்ப்பம்; இப்போது பெண் குழந்தை, அதன் பெயர் மேரி; ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தம் ராஜாவுக்கு;
பிளான்ட் என்ற பெண்ணுடன் பழக்கம்;
8-ம் ஹென்றிக்கு இப்போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது; பிளான்ட் என்ற அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இறந்தே பிறக்கிறது; பிளான்டுக்கு மறுபடியும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது; அது ஹென்றி பிட்ஜ்ராய் என்று பெயர்; திருமணம் மூலம் முறைப்படி பிறந்த ஆண் குழந்தை அல்ல அது; (பின்நாளில்அவனும் வளர்ந்து பெரியவனாகி, திருமணம் நடந்து குழந்தை இல்லாமல் இறக்கிறான்);
அரசியல் மாற்றங்களை வேகமாக நிகழ்கின்றன; 8-ம் ஹென்றி, பிரான்ஸ் நாட்டுடன் போருக்கு போகிறார்; அப்போது 8-ம் ஹென்றிக்கு 22 வயதுதான்; அதில் சிறு வெற்றியை அடைகிறார்; மறுபடியும் போருக்கு செல்கிறார்; இவர் ஊரில் இல்லாததால், அதைப் பயன்படுத்தி, இவரின் மருமகன் 4-ம் ஜேம்ஸ் இங்கிலாந்துக்குள் படைகளுடன் நுழைகிறார்; இது, தோல்விகண்ட பிரான்ஸ்காரர்களின் தூண்டுதலால் நடக்கிறது; கணவர் இல்லாததால், ராணி காத்தரீனே போரை முன்னின்று நடத்தி வெற்றியும் அடைகிறார்; பிரான்ஸ் நாட்டுடன் போர் ஏற்பட்டதால் கஜானா காலியாகி விட்டது; மந்திரிகள் யோசனையால், 8-ம் ஹென்றியின் தங்கை மேரியை, பிரான்ஸ் மன்னர் லூயிஸூக்கு திருமணம் செய்து கொடுக்க சமாதான ஒப்பந்தம் செய்கிறார்; வெகுகாலம் கழித்து பிரான்ஸ் மன்னர் லூயிஸ் இறக்கிறார்; 1-ம் பிரான்சிஸ் ஆட்சிக்கு வருகிறார்;
8-ம் ஹென்றியின் வேறு பழக்கங்கள்; (மேரிபோலின், ஆன்னிபோலின்);
இதற்கிடையில், 8-ம் ஹென்றி மன்னர், அவரின் மனைவியின் வேலைக்காரியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்; அந்த பெண்ணின் பெயர் மேரிபோலின்; இவர் அழகாக இருப்பாராம்; வேலைக்காரி மூலம் 2 குழந்தைகள்; கேத்ரின்கேரி, ஹென்றிகேரி; ஆனாலும், மன்னர் 8-ம் ஹென்றி இந்த குழந்தைகளை தன் வாரிசுகள் என்று அங்கீகாரம் அளிக்கவில்லை; மனைவி காத்தரின் ஆண் குழந்தை கொடுக்க முடியவில்லை என்று மன்னருக்கு எப்போதும் கோபமாம்; வாரிசு இல்லையே! எல்லாம் பெண்களாகவே பிறக்கிறதே; இதனால், வேலைக்காரி மேரிபோலினின் தங்கை ஆனிபோலின் மீது காதல் வந்துவிட்டது மன்னருக்கு; இந்த பெண்தான், மன்னரின் பிரயாணத்தின்போது துணைக்கு செல்பவராம்; ஆனாலும் அக்கா, மன்னருக்கு வைப்பாட்டியாக இருக்கும்போது, தானும் இதேபோல் இருக்க விரும்பவில்லையாம்;
8-ம் ஹென்றிக்கு பின்னர் அரச வாரிசு யார்? யார் மன்னராக முடியும்?
மன்னர் குழம்புகிறார்;
வைப்பாட்டி பிளான்டின் மகனான ஹென்றி பிட்ஜராயை வாரிசாக அறிவித்து விடலாமா?
காத்தரீன் மூலம் பெற்ற தன் மகள் மேரிக்கு திருமணம் செய்து வைத்து அவளுக்குப் பிறக்கும் குழந்தையை (பேரனை) ஆட்சியில் அமர்த்தி விடலாமா?
அல்லது மேரிபோலின் வேலைக்காரியின் தங்கையான ஆன்னிபோலினை திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படியென்றால் முதல் மனைவி காத்தரீனை விவாகரத்து செய்யவேண்டுமே? இதற்கு ரோமில் உள்ள போப் ஒப்புக் கொள்வாரா?
இல்லையென்றால், ரோமில் உள்ள போப்பை எதிர்த்துக் கொண்டு, நாமே இங்கிலாந்தில் தனி வழிபாட்டு சட்டத்தை கொண்டு வந்துவிடலாமா?
8-ம் ஹென்றி "சுத்த கத்தோலிக்கராய்தான்" இருந்தார்; ஆண் வாரிசு வேண்டுமே என்பதற்காக கத்தோலிக்க கொள்கையிலிருந்து விலக மனது ஒப்புக்கொண்டது; இப்போது ரோமில் போப்பாண்டவராக இருந்தவர் போப் 7-ம் கிளமெண்ட் ;
8-ம் ஹென்றியே போப்புக்குப் பதிலாக இங்கிலாந்து சட்டதிட்டங்களை வகுத்தார்; அதன்படி, அண்ணன் மனைவியான காத்தரினை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்று "லெவட்டிகஸ்" என்ற  சர்சு சட்டதில் உள்ளது என்றும், அதனால் அந்த திருமணம் செல்லாது என்றும் இவரே அறிவிக்கிறார்; அந்த மனைவியான கேத்தரினோ, சோகமாக சந்நியாசி ஆக முடிவெடுக்கிறார்; இதற்கிடையில் போப் இதற்கு சட்டப்படியான சம்மதம் கொடுக்கவில்லை; இவரும் யார் யாரையோ அனுப்பி சட்டம் பேசுகிறார், பலிக்கவில்லை;
8-ம் ஹென்றியின் செக்கரட்டரியான அறிவாளியான சர் தாமஸ் மூர் அவர்களும் கண்டிப்பான கத்தோலிக்கராகவே இருந்தார்; இந்த திருமணத்தை ரத்து செய்ய ஒப்புக் கொள்ளவில்லை;
8-ம் ஹென்றியின் தடலடியான முடிவுகள்;
மனைவி காத்தரினை அரசவைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்; வந்தால் பக்கத்தில் அமர வைக்க வேண்டும்போல; காத்தரினின் தங்கும் அறைகள், காதலியான ஆன்னிபோலினுக்கு கொடுத்து விட்டார்; ஆன்னிபோலின் படித்த அறிவாளிப் பெண்; இந்த சூழ்நிலையை நன்கு உபயோகப் படுத்திக் கொண்டு, கத்தோலிக்க தத்துவத்துக்கு மாறுதலான புராடஸ்டன்ட் கொள்கைகளை வளர்க்க பாடுபட்டார்; இங்கிலாந்து ரோமன் சர்ச்சில் தனக்குவேண்டிய பிஷப்பை நியமித்துக் கொண்டார்;
8-ம் ஹென்றி ஆன்னிபோலினை திருமணம் செய்து கொண்டார்;
பிரான்ஸ் மன்னர் 1-ம் பிரான்சிஸ் உடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார் இங்கிலாந்து மன்னர் 8-ம் ஹென்றி; இதை பயன்படுத்தி ஆன்னிபோலினை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சர்ச்சில் திருமணம் செய்து கொள்கிறார்; ஆன்னி கர்ப்பமாகி விடுகிறார்; எனவே மறுபடியும் ஊரறிய திருமணம் செய்வதற்காக, மூத்த மனைவி காத்தரின் திருமணம் சட்டம்படி செல்லாது என்று அறிவிக்கிறார்; பின்னர் ஆன்னியை வெளிப்படையாக மறுபடியும் திருமணம் செய்து கொள்கிறார்; மூத்த மனைவி காத்தரினுக்கு ராணி அந்தஸ்து கொடுக்காமல், இந்த ஆன்னிபோலினை ராணி ஆக்குகிறார்; ராணியான ஆன்னிபோலின் ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொடுக்கிறார் (இதுவும் ஆண் இல்லை, ராஜாவுக்கு வருத்தமா?); அந்தப் பெண் குழந்தைதான் எலிசபெத்;
ராணி எலிசபெத் பிறப்பு;
8-ம் ஹென்றிக்கும், ஆன்னிபோலினுக்கும் நடந்த திருமணத்தில் பிறந்த குழந்தைதான் இந்த எலிசபெத்; இவர் குறை-பிரசவமாய்தான் பிறக்கிறாராம்; ஜனவரி 25-ல் திருமணம், செப்டம்பர் 7-ல் குழந்தை என்பது குறைப்பிரவம்தான்; (திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகி விட்டதாகப் பேச்சு); எலிசபத் என்ற பெயர் ஏன் வைத்தார் என்றால், அதுதான் 8-ம் ஹென்றியின் அம்மா பெயர்; (அதாவது 7-ம் ஹென்றியின் மனைவியின் பெயர் எலிசபெத் ஆப் யார்க்); எனவே தாயின் நினைவாக தன் மகளுக்கும் எலிசபெத் என்ற பெயரை வைத்தார்;
வாரிசு போட்டி;
இங்கிலாந்து பார்லிமெண்டில் வாரிசு சட்டம் கொண்டு வரப்பட்டது; அது Act of Succession 1533; அதன்படி மூத்த மனைவி காத்தரினின் ஒரே மகள் மேரி சட்டபூர்வ வாரிசு இல்லை என்றார்கள்; மூன்றாவது மனைவி ஆன்னிபோலின் சட்டபூர்வ மனைவி என்றும் அவரின் ஒரே மகள் எலிசபெத் அடுத்த சட்டபூர்வ வாரிசு என்றும் அறிவித்தார்கள்; இதனால் போப் கிளமெண்ட் கோபம் கொண்டு ஹென்றி மன்னரை மதத்தை விட்டு விலக்க ஏற்பாடு செய்தார்; ஹென்றி மன்னரும், மொத்த இங்கிலாந்து சர்சுகளுக்கும் தானே தலைவர் என்றும் அறிவித்துக் கொண்டார்;
ஆண் குழந்தை இல்லை என்பது ஹென்றி மன்னருக்கு வருத்தமே! ஆனாலும், ஆன்னிபோலின், பொய்யாகதான் கருவுற்று இருப்பது போலவும், கரு கலைந்து விட்டது போலவும் நாடகமாடினார் என்று மன்னருக்கு ஒரு சந்தேகமும் உண்டாம்;
1536ல் ஹென்றி மன்னரின் மூத்த மனைவி காத்தரின் இறந்து விட்டார்; ஹென்றிக்கு சந்தோஷமாம்! மூன்றாம் மனைவி ஆன்னிபோலின் உண்மையிலேயே கர்ப்பமாகி விட்டார்; இந்த முறை ஆண் குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் மன்னரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பயந்தார்; மன்னர் குதிரை சவாரி செய்யும் போது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார்; வெளியில் எங்கும் போவதில்லை; அப்பொது ஒரு ஆண்குழந்தை பிறந்து இறந்து விட்டதாகச் சொல்லி விட்டார்கள்;
8-ம் ஹென்றியின் 4ம் மனைவி:
 இதற்கிடையில், மன்னர் ஹென்றிக்கு, ஜேன் செய்மூர் என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது; 3-வது மனைவி ஆன்னிபோலின் அவரின் அண்ணன் ஆகியோரை ராஜதுரோக குற்றம் சுமத்தி அவர்களை தூக்கிலிட்டார்; அதற்குப் பின் இந்த ஜேன் செய்மூர் என்ற பெண்மணியுடன் தொடர்பு அதிகமாகியது; இந்தப் பெண்மணியும் அரண்மனை வேலைக்காரிதான்; திருமணமும் செய்து கொண்டார்;
ஆண் குழந்தை பிறந்தா?
ஆம், ஜேன் செய்மூருக்குத்தான் ஆண் குழந்தை பிறந்தது; அந்தக் குழந்தையின் பெயர் இளவரசர் எட்வர்ட். (Prince Edward); இவர்தான் பின்னர் இங்கிலாந்தின் 6-ம் எட்வர்ட் மன்னர் ஆனவர்;
மகனைப் பெற்ற பிரசவத்தில் தாய் ஜேன்செய்மூர் இறந்து விட்டார்; தாயைப் பறிகொடுத்த மகன் இளவரசர் எட்வர்டு (6-ம் எட்வர்ட் மன்னர்);
8-ம் ஹென்றியின் 5-வது மனைவி காத்தரீன் ஹாவர்டு;
இந்த மனைவி இறந்த சோகம் முடிந்தவுடன் அடுத்த மனைவியை தேடித்திரிந்தார்; இதற்கிடையில் இரண்டாம் வாரிசு சட்டத்தை பார்லிமெண்டில் கொண்டு வந்து, இறந்த ஜேன்செய்மூர் மனைவிக்கு பிறந்த இளவரசர் எட்வர்டு தான் இங்கிலாந்தின் அடுத்த வாரிசு என்று பிரகடனப் படுத்தினார்; அதையடுத்து யார் யார் ராஜ வாரிசு ஆகலாம் என்று "உயில்" எழுதி விட்டார்; அதன்படி, மூத்த மகள் மேரியும், இரண்டாவது மகள் எலிசபெத்தும் சட்டப்படியான வாரிசுகள் இல்லை என்றார்; எனவே அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்றார்; அண்டை நாடுகளின் படையெடுப்புக்கு (பிரான்ஸ், ஜெர்மனி) பயந்தார்; கடல் படையை அதிகப்படுத்தினார்;
ஆனி ஆப் கிளேவ்ஸ் என்ற பெண்மணியை திருமணம் செய்ய 8-ம் ஹென்றி முடிவு செய்தார்; ஆனாலும் மன்னர், காத்தரின் ஹாவர்டு என்ற பெண்ணை காதலிக்க ஆரம்பித்தார்; இவரின் மனைவியான ஆன்னிபோலின் என்பவரின் வேலைக்காரிதான் இந்த காத்தரின் ஹாவர்டு; இவரையே திருமணமும் செய்து கொண்டார்; ஆனால் இந்த காத்தரின் ஹாவர்டு, இதற்கு முன்னர் அரண்மனையில் வேலை செய்த தாமஸ் கல்பெப்பர் என்ற வேறு ஒருவரைக் காதலித்தாராம்; பின்னர் பிரான்ஸிஸ் டெகராம் என்பவருக்கு இந்த பெண்ணை திருமணம் நிச்சயித்திருந்தார்களாம்; அதனால் இருவருக்கும் பழக்க வழக்கமும் உண்டாம்; இதையெல்லாம் தெரிந்த மன்னர் கோபமடைந்து இரண்டு முன்னல் காதலர்களையும் தூக்கிலிட்டு விட்டார்;
8-ம் ஹென்றியின் 6-வது மனைவி காத்தரீன் பார் (பணக்கார விதவை):
அப்போது 8-ம் ஹென்றிக்கு 52 வயது; இந்தப் பெண்மணியான காத்தரீன் பார் மன்னருடன் மதத்தைப் பற்றி மிக அதிகமாகப் பேசி வந்தவர்; இவரே, 8-ம் ஹென்றியின் இரண்டு மகள்களான மேரி, எலிசபெத் இருவருக்குமாக பரிந்து பேசி அவர்களை வாரிசு என மன்னரை ஏற்றுக் கொள்ள வைத்தவர்; அதன்பின்னர்தான், பார்லிமெண்டில், இந்த இரண்டு பெண்களும் வாரிசுகள்தான் என்று (அவரின் மன்னரின் ஆண் வாரிசு எட்வட்டு காலத்துக்குப்பின்னரே வாரிசு என்று) புதுச்சட்டமும் கொண்டு வரப்பட்டது;
8-ம் ஹென்றி இறந்துவிட்டார்;
மன்னர் 55ம் வயதில் (1547ல்) இறந்துவிட்டார்; சர்க்கரை நோய் என்று சொல்கிறார்கள்; இவர் ரோமன் கத்தோலிக்கர்களிடம் கோபம் கொண்டு, அதனால், இங்கிலாந்திலுள்ள எல்லா கத்தோலிக்க மதகுருக்களின் பதவியைப் பறித்துக் கொண்டு அவர்களை விரட்டி விட்டார்; அந்த இடத்தில் இங்கிலாந்து பிஷப்களை நியமித்து விட்டார்; இந்த மன உறுத்தலில்தானோ என்னவோ, சாகும்தருவாயில், மதகுரு! மதகுரு! மதகுரு! என்று மன்னர் தனக்குத்தானே பிதற்றியதாகச் சொல்லப்படுகிறது;
அடுத்த வாரிசு  8-ம் ஹென்றியின் மகன் எட்வர்டு பதவிக்கு வருகிறார்;
8-ம் ஹென்றி இறந்தபின்னர், அவரின் மகன் எட்வர்டு மன்னர் பதவிக்கு வருகிறார் (8-ம் ஹென்றியின் 2-ம் மனைவியான ஜேன் ஜெய்மூருக்கு பிறந்தவர்; இவர் ஒருவரே ஆண்வாரிசு); இவரைத்தான் மன்னர் 6-ம் எட்வர்டு என்று அழைக்கிறார்கள்; அப்போது இவருக்கு 9 வயதுதான் ஆகிறது; இறந்த மன்னர் 8-ம் ஹென்றியின் உயில்படி, அவரின் மகன் தகுந்த வயதான 18 வயது வரும்வரை, 16 நிர்வாக அதிகாரிகள் அரசை நிர்வகித்து வர வேண்டும் என்று அந்த உயிலில் சொல்லப்பட்டுள்ளது; அதில் எட்வர்டின் தாய் மாமனும் ஒருவர்; மன்னர் 6-ம் எட்வர்டுக்கு வாரிசு ஏற்படாமல் போனால், 8-ம் ஹென்றியின் மூத்த மகள் மேரிக்கு அரச பதவி போய்விடும் என்கிறது உயில்; மேரிக்கும் வாரிசு இல்லை என்றால், 8-ம் ஹென்றியின் இரண்டாவது மகள் எலிசபெத்துக்கு அரச பதவி வந்துவிடும் என்கிறது உயில்; எலிசபெத்துக்கும் வாரிசு இல்லை என்றால், 8-ம் ஹென்றி மன்னரின் தங்கை இறந்துவிட்ட மேரியின் வாரிசுகளுக்குப் போகும் என்கிறது உயில் (இவரை பிரான்ஸ் நாட்டில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்); ஆனாலும் 8-ம் ஹென்றியின் மற்றொரு தங்கை மார்க்ரெட் (ஸ்காட்லாந்து நாட்டை ஆள்பவர்) இவருக்கு உயிலில் எந்த அரச பதவியும் கிடையாது என்கிறது; இந்த ஸ்காட்லாந்து பிரிவினரை ஸ்டார்ட்ஸ் (Stuarts) என்கிறார்கள்; (யாருக்கு பதவி போகக்கூடாது என்று உயில் எழுதி வைத்தாரோ, அவர்களுக்கே இங்கிலாந்து அரச பதவி கிடைத்தது வேடிக்கையே; இந்திய நம்பிக்கைப்படி இதையே “விதி” என்பர்; ஆம், எலிசபெத் ராணி திருமணமே செய்து கொள்ளவில்லை; எனவே வேறு வழியில்லாமல் ஸ்காட்லாந்து பிரிவினரான ஸ்டார்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த மார்க்ரெட் வாரிசுகளான 6-ம் ஜேம்ஸ் என்பவர் 1-ம் ஜேம்ஸ் என்ற பெயரில் பின்னர் இங்கிலாந்து மன்னர் ஆகிவிட்டார்);
8-ம் ஹென்றியின் மகன் 6-ம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னர்;
தந்தை இறந்தவுடன் பதவிக்கு வருகிறார்; அப்போது 9 வயது; இவர் தனது 15 வயதில் நோய்வாய்ப் படுகிறார்; காசநோய் என்று சொல்கிறார்கள்; இறக்கும் தருவாயில், தந்தையின் உயிலை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்கிறார்; ஏனென்றால், அடுத்த வாரிசு தந்தையின் மூத்த மகள் மேரி; இவரோ ரோமன் கத்தோலிக்க மதத்தை ஆதரிப்பவர்; எனவே அது நடக்கக் கூடாது என்று நினைக்கிறார்; எனவே இவரின் ஒன்றுவிட்ட சகோதரிகளான மேரியும், எலிசபெத்தும் பதவிக்கு வரக் கூடாது என்று அறிவிக்கிறார்; இவரும் இறந்து விடுகிறார்; பிரச்சனை ஏற்படுகிறது;
8-ம் ஹென்றியின் மூத்த மகள் மேரி ராணி ஆகிறார்: (இங்கிலாந்தின் முதல் ராணி இவர்தான்)
மேரியை பதவிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள்; மேரி கத்தோலிக்க மதத்தை ஆதரிக்கிறார்; இவர் 1-ம் மேரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறார்; தனது 37 வயதில் பதவிக்கு வருகிறார் (1553-ல்); 42 வயது வரைதான் உயிருடன் இருக்கிறார்; தன் தகப்பனார் 8-ம் ஹென்றியின் உயில்படி, தனக்கு ஒரு வாரிசு ஏற்பட்டு விட்டால், புராட்டஸ்டன்ட் தங்கையான (ஒன்றுவிட்ட தங்கை; இருவரின் தாய்களும் வேறு) எலிசபெத்துக்கு அரச பதவி கிடைக்காது என நினைத்து, அவசரமாக திருமணத்துக்கு கணவரைத் தேடுகிறார்; இவரோ ஸ்பெயின் இளவரசரை பிரின்ஸ் பிலிப்பை தேர்ந்தெடுக்கிறார்; ஆனால் இங்கிலாந்து பார்லிமெண்டோ ஒரு ஆங்கிலேயரையே திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்; இதில் உள்நாட்டு கலவரம் நடக்கிறது; தன் ஒன்றுவிட்ட தங்கை எலிசபெத் இதற்கு ஏற்பாடு செய்திருப்பார் என சந்தேகித்து அவரை வீட்டுக் காவலில் வைக்கிறார் ராணி மேரி; ஆக முதன்முதலில் இங்கிலாந்தை ஆண்ட முதல் ராணி இவர்தான்; ராணியே நேரடியாக நாட்டை ஆண்டால், அவரை குயின்-ரெக்னன்ட் (Queen Regnant)என்பர்; ராஜாவுக்கு மட்டும் மனைவியாக இருந்தால் அந்த ராணியை குயின் கன்சார்ட் (Queen Consort) மன்னரின் மனைவி (ராணி இல்லை) என்பர்; இப்போதைய இங்கிலாந்து வழக்கப்படி, ஒரு பெண் தனது கணவரை திருமணம் செய்து கொண்டால், மனைவியின் சொத்தும், பதவியும் கணவருக்கு கிடைக்குமாம்; அதன்படி கணவரையும் அரசராக ஏற்றுக் கொண்டாலும், அவர் ராணியின் சம்மதத்துடன் தான் செயல்பட வேண்டும் என்று பார்லியமெண்ட் சட்டம் இயற்றி உள்ளதால் ராணி மேரியின் கணவர் பிலிப்புக்கு கோபமாம்; இதில் வேடிக்கை என்னவென்றால், பிலிப்புக்கு ஆங்கிலம் தெரியாதாம்; எனவே மனைவியுடன் ஸ்பெயின் நாட்டின் கணவர் ஸ்பேனிஷ், பிரென்ச், லத்தின் ஆகிய மொழிகளைக் கலந்து பேசிவருவாராம்;
மேரிக்கு வாரிசு உண்டா?
திருமணமான ஒருவருடத்தில் ராணி மேரிக்கு (அவரின் 38 வயதில்) மாதவிலக்கு நின்றுவிட்டதாம்; ஆனால் அரண்மனை டாக்டர்கள் இதை கர்ப்பம் என தவறாக நினைத்துக் கொண்டனர்; கணவர் பிலிப், ஒரு தப்புக் கணக்கு போடுகிறார்; ஒருவேளை மனைவி பிரசவத்தில் இறந்து விட்டால், குழந்தையும் இறந்து விட்டால், நமக்கு இந்த மனைவியின் பதவி பறிபோய்விடுமே என்று கருதி, எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டால் நல்லது என நினைக்கிறார்; மேரிக்கு இப்போது குழந்தை பிறக்கும் காலம் என்று ஊரே திருவிழா கோலம்; மாதம் கடக்கிறது, இன்னும் பிறக்க மாட்டேன் என்கிறதே என்று சந்தேகம்; பின்னர்தான் தெரிகிறது அது வெறும் வயிறு, கர்ப்ப வயிறு இல்லை என்று; சோகம்; மறுபடியும் குழந்தை பிறக்கும் என கனவு கண்ட மேரி, அது நிறைவேறாது என தெரிந்தவுடன், தங்கை எலிசபெத்துக்கு பதவி போகும் என கருதினார்; உடல்நிலை மோசமாகி 1558ல் (தனது 42 வயதில்) ராணி மேரி இறந்து விடுகிறார்;
**

ஞாயிறு, 29 மார்ச், 2015

மக்காலே

மக்காலே:
தாமஸ் பாபிங்டன் மக்காலே Thomas Babington Macaulay;
இந்தியாவில் தற்போதுள்ள "இந்திய தண்டனைச் சட்டம்" Indian Penal Code இவர் எழுதியதுதான். 1834-ல் இவர் "பிரிட்டிஷ் அரசின் முதல் சட்டக் கமிஷனுக்கு" தலைவராக இருக்கும்போது இவர் கொடுத்த யோசனைப்படி, இது 1860-ல் சட்டமாக வந்தது; இவர் இளம் வயதிலேயே இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து இங்குள்ள மக்களையும் வாழ்க்கை முறையை அறிந்து இந்த இந்திய தண்டனைச் சட்டத்தை இயற்றியதாகச் சொல்லப் படுகிறது; இந்தச் சட்டத்துக்கு அவரால் என்ன ஒரு பெருமை என்றால், "அவர் காலத்தில் இயற்றிய எல்லாச் சட்டங்களும் காலத்தால் அதிக திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், இந்த இந்திய தண்டனைச் சட்டம் மட்டும் ஒருசில திருத்தங்களுடன் அப்படியே இன்னும் இருக்கிறது என்பதே இதன் சிறப்பு; அந்த அளவுக்கு மிகத் தெளிவாகவும், பிற்காலத்தை யோசித்தும் எழுதிய சட்டம் என்றும் இதை புகழ்கிறார்கள்; இந்தப் பெருமையும் லார்டு மக்காலேவுக்கே சேரும்!" இத்தகைய பெருமை கொண்ட தண்டனைச் சட்டம்தான் இன்னும் பல நாடுகளில் இன்னுமே நடைமுறையில் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமே! இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, சிங்கப்பூர், இலங்கை, நைஜீரியா, ஜிம்பாவே போன்ற காலனி நாடுகளில் எல்லாம் இந்தச் சட்டமே இன்னும் நடைமுறையில் உள்ளது;
இவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்றும் சொல்வார்கள்; சிறு வயதிலேயே அதிபயங்கர ஞாபகசக்தி கொண்டவராம்; கண்ணால் பார்த்த ஒரு பொருளில் (படம்) இவற்றிலுள்ள பல நுணுக்கமான விஷயங்களையும் சேர்த்தே, ஒரே நொடியில் பார்த்து விடுவாராம்; சாதாரண ஆட்களால் இவ்வளவு விஷயங்களை நொடிப்பொழுதில் பார்த்து ஞாபகத்தில் வைக்க முடியாதாம்; இந்த திறமையை Eidetic memory என்கிறார்கள்;
இவர், உலகத்தில் அப்போதிருந்த நாடுகளை இரண்டாகப் பிரித்துப் பார்த்தார்; ஒன்று நாகரீகம் அடைந்த நாடுகள், Civilised nations: மற்றொன்று காட்டுமிராண்டிகள், Barbarism; இங்கிலாந்தை நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த நாடாகவே கருதினார்; இந்தியாவில் என்னதான் சமஸ்கிருதத்தில் படிப்புகள் இருந்தாலும், ஆங்கிலேயர்களின் அறிவுப் புத்தகங்களுக்கு ஈடாகவில்லை இந்தியா என்றே கருதினார்; இந்தியாவில் சமஸ்கிருத மொழியும், பெர்ஷியன் (பார்சி) மொழியும் புழக்கத்தில் இருந்த நேரம் அது; "இங்கிலாந்தில், நான் வாழ்ந்த காலத்தில், அங்குள்ள புத்தகசாலையில், ஒரு முறைகூட, இந்த சமஸ்கிருத மொழி நூலையோ, அரபு மொழி நூலையோ பார்க்க முடிந்ததில்லை" என்கிறார்;
இந்தியர்களை நாகரீகமாக ஆக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுத் தர வேண்டும்; அப்போதுதான், ஆங்கிலத்தில் உள்ள பல நூல்களைப் படித்து அவர்களின் அறிவை வளர்ப்பார்கள்; இந்தியாவில் பெரும்பாலும் மூடநம்பிக்கையிலேயே (Superstition) மக்களை பழக்கி வைத்துள்ளார்கள்; அவர்களாகவே சுயமாகச் சிந்திக்கும் அறிவை அவர்களுக்குக் கொடுக்கவில்லை; எனவே இதற்கு முடிவே சமஸ்கிருத பள்ளிக்கூடங்களையும், மதராஸா பள்ளிக்கூடங்களையும் நிறுத்திவிட்டு, ஆங்கிலத்தை கற்றுத்தர வேண்டும் என்று இங்கிலாந்து பார்லிமெண்டில் ஓங்கிக் குரல் கொடுத்தவர்; இதன் பின்னர்தான் ஆங்கிலக் கல்வி சட்டம் 1835 அமலுக்கு வந்தது. The English Education Act of 1835; அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க்; இங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலே உரையாற்றும்போது, "சம்ஸ்கிருதம், அரபு மொழிகளைவிட, ஆங்கிலமே அறிவு சார்ந்தது; இந்தியாவில் கற்பனைக் கதைகள் மட்டுமே அதிகம்; சட்டம், விஞ்ஞானம், சரித்திரம், அரசியல் சார்ந்த நூல்கள் இல்லை; அவ்வாறு இருந்தாலும் அவை ஆங்கிலேயர்களின் நூல்களுக்கு இணையாக மாட்டா! ஆங்கிலத்தை யார் கற்றுக் கொண்டாலும் அறிவுச் செல்வத்தை அடைவார்கள்; அவ்வாறு அதை அடைந்த அறிவான தேசங்கள் ஏராளம் உண்டு; இந்தியாவின் சரித்திர நூல்களில், மனிதன் 30 அடி உயரத்தில் இருந்ததாகவும், 30,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகவும், கற்பனைகளை அவிழ்த்து விட்டும், புவியியலில் பாதாள லோகம், பால் கடல், தயிர் கடல் இருந்ததாகவும் சொல்லி உள்ளவை, இங்குள்ள ஆங்கிலேய சிறுவர்களை சிரிப்புக்கு ஆளாக்குகிறது; அறிவு சார்ந்த நூல்களை ஏன் அவர்கள் கொடுக்கவில்லை; மூடநம்பிக்கையை வைத்தே மக்களை வழி நடத்தி வந்துள்ளார்கள்;
ஒரே நேரத்தில் இந்தியர்களை ஆங்கிலம் கற்ற வைத்துவிட முடியாது; அதற்குப் பதிலாக ஒரு சிலருக்கு ஆங்கில அறிவைப் புகட்டி, அவர்களை நமக்கு (ஆங்கிலேய அரசாட்சி செய்வர்களுக்கு) உதவிக்கு வைத்துக் கொண்டால், அவர்களின் மக்களை அவர்களைக் கொண்டே ஆள முடியும்; வேற்று நாட்டான் ஆள்வதை இங்குள்ள மக்கள் ஒப்புக்கொள்ள யோசிப்பர்; எனவே அவர்களைக் கொண்டே அவர்களை ஆள்வது எளிது; அத்துடன் அவர்களைப் பார்த்து மக்களும் ஆங்கில படிப்பில் நாட்டம் கொள்வார்கள்; "ஆங்கிலம் படிப்பவர்கள், உண்மையில் அவர்களின் உடல் இந்திய மண்ணின் ரத்தத்தையும், நிறத்தையும் கொண்டிருந்தாலும், ஒழுக்கத்தையும், அறிவையும் ஆங்கிலேயர்களைப் போலவே பெறுவார்கள் என்பது உறுதி" என்று மெக்காலே குறிப்பிட்டுள்ளார்;
மெக்காலே திருமணமே செய்து கொள்ளவில்லை; 1800ல் பிறந்து 59 வருடங்கள் வாழ்ந்தவர்; இந்தியாவில் அதிக சுற்றுப்பயணம் செய்தவர்; இங்கிலாந்து பார்லிமெண்ட் தேர்தலில் விக் கட்சி சார்பில் நின்று வென்றுள்ளார்; ஒரு முறை தோற்றுள்ளார்; மூன்றாம் முறை வென்றுள்ளார்; சட்ட மேதை; வக்கீலாக ஆகவில்லை; இவர் எழுதிய "இங்கிலாந்து வரலாறு" என்ற நூல் மிகப் பிரபலமானது. ஒருசிலர், "இவர் வரலாற்றை தவறுதலாக திரித்து சொல்லியுள்ளார்" என்றும் கூறியுள்ளனர்; கேம்பிரிட்ஜின் ரினிட்டி கல்லூரியில் சட்டம் படித்தவர்;


சனி, 28 மார்ச், 2015

பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-8

பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-8:
மன்னர் பிலிப் மற்றும் ராணி இசபெல்லா இவர்களின் ஒரே மகன்தான் இந்த லூயிஸ்-8; இசபெல்லாவுக்கு 10 வயதில் திருமணம்; 4 வருடங்கள் குழந்தை இல்லை; கணவரான மன்னர் பிலிப், குழந்தை இல்லாத மனைவியை தள்ளி வைத்துவிடலாம் என்று நினைக்கிறார்; இசபெல்லா அங்குள்ள மக்களிடம் சர்ச்சில் சென்று முறையிடுகிறார்; சமாதானம் ஆகிறது; இசபெல்லா தனது 17 வயதில் இந்த லூயிஸ்-8 என்ற ஆண் மகனைப் பெற்றெடுக்கிறார்; அதற்குப் பின், 4 வருடங்கள் கழித்து இரட்டையர் பிறக்கிறார்கள்; அந்த பிரசவத்தில் ராணி இசபெல்லா இறக்கிறார்; அந்த ரெட்டை குழந்தைகளும் 4 வருடங்களில் இறந்துவிடுகிறது; இந்த மூத்த மகன் லூயிஸ்-8 மட்டுமே அரச வாரிசாக இருக்கிறார்; இவர் 1187ல் பிறந்து 40 வருடங்கள் உயிர் வாழ்கிறார்; பிரான்ஸ் நாட்டுக்கு மன்னன் ஆகிறார்; தனது 36 வயதில்தான் மன்னர் ஆகிறார்; பரிதாபம்! 3 வருடங்கள் மட்டுமே மன்னராக இருக்கிறார்; ஆனாலும் தந்தை மன்னராக இருக்கும்போது, சுறுசுறுப்பான தளபதியாகவே இருக்கிறார்; இவரை அப்போது "சிங்கம்" என்றே அழைப்பர்; இவர் இளவரசராக இருந்தபோது, இங்கிலாந்தின் ஒரு பகுதியை போரிட்டு வென்றார்; அந்த தெற்கு இங்கிலாந்து பகுதிக்கு இவர் அரசர் ஆனார். தனது 40 வயதில் இறந்து விட்டார்; இவருக்குப் பின்னர் இவரின் மகன் லூயிஸ்-9 என்ற பட்டத்துடன் பிரான்ஸ் நாட்டுக்கு அரசன் ஆனார்;
லூயிஸ்-8 மன்னருக்கு "சிங்கம்" என்று பட்டப் பெயர் உண்டு; இவரின் 8 வயதில் இவருக்கு திருமணம்; இங்கிலாந்தில் உள்ள பிரிட்டினி இளவரசி எலனார் (Eleanor of Brittany) என்பவரை திருமணம் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது; இவரே பிரிட்டானி தேசத்தின் பேரழகி! 11 வயதான இவருக்கும், பிரான்ஸ் நாட்டு இளவரசர் லூயிஸ்-8க்கும் திருமணத்துக்கு ஏற்பாடு மட்டும் நடக்கிறது; லூயிஸ்க்கு 9 வயதுதான்;
பிரிட்னி இளவரசி எலனார், பிரிட்னியின் டியூக் (Duke) ஜாப்ரே-2 (Geoffrey-II) மன்னரின் மூத்தமகள்; இந்த இளவரசி தனது 2-வது வயதில் தகப்பனை பறிகொடுத்தவர்; இவரின் மாமா ரிச்சர்ட்தான் இவரை வளர்த்தார்; ஆனால் இந்த திருமணம் நடக்கவில்லை; பேச்சுவார்த்தையிலேயே நின்றுவிட்டது;
இதற்கிடையில் இளவரசர் லூயிஸின் 12 வயதில், இளவரசி பிளான்ச் (Blanche of Castile) க்கும் திருமணம் நடந்து விட்டது;
லூயிஸ்-8 பிரான்ஸின் மன்னராக 1223ல் பதவி ஏற்கிறார்; இவருக்கு யூதர்கள் மீது ஏதோ கோபம்போல! எந்தக் கிறிஸ்தவரும் வட்டிக்கு கடன் கொடுப்பது பாவம் என்று சொல்கிறார்; யூதர்களின் வட்டிக் கணக்கை பதிவு செய்ய வேண்டாம் என்றும் சொல்கிறார்;
குறைந்த வருடமே ஆட்சி செய்கிறார்; இவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறக்கிறார்;
இவருக்கும் இவரின் ராணியான பிளான்ச்க்கும் மிக அதிகமான குழந்தைகள் பிறந்ததாம்

யுப்ரெடெஸ், டைக்ரிஸ் இரட்டை நதிகள்

யுப்ரெடெஸ் (Euphrates) என்னும் நதியும், டைக்ரிஸ் (Tigris) நதியும் இரட்டை நதிகள்; இரண்டுமே துருக்கியில் ஆரம்பித்து, துருக்கி, சிரியா, ஈராக் வழியாக ஓடி, பெர்ஷியன் வளைகுடாவில் கலக்கிறது; யூப்ரெடெஸ் நதியின் நீளம் 2800 கி.மீ. டைக்ரிஸ் நதியின் நீளம் 1850 கி.மீ.
கங்கையின் நீளம் 2525 கி.மீ.;
நைல் நதியின் நீளம் 6850 கி.மீ.;
அமேசான் நதியின் நீளம் 6990 கி.மீ.;
மஞ்சள் நதியின் நீளம் 5460 கி.மீ.;
மிசிசிப்பி நதியின் நீளம் 6275 கி.மீ.;
சைனாவின் யாங்க்ஸி நதியின் நீளம் 6300 கி.மீ.;

சைனாவின் யாங்க்ஸி நதிதான் ஆசியாவிலேயே பெரிய நீளமான நதியாம்; உலகத்தில் ஓடும் நதிகளிலேயே 3-வது நீளமான நதியாம்; இது மேற்குப் பக்கத்து சைனாவில் ஆரம்பித்து சைனா நாடுமுழுக்க ஓடி, கிழக்கு சைனாவின் துறைமுக நகரமான ஷாங்காய் நகரில் புகுந்து சைனா கடலில் கலக்கிறது

ஷாங்காய்

சைனாவின் ஷாங்காய் நகரம்  (Shanghai); உலகிலேயே இந்த நகரம்தான், மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் என்கின்றனர்; எவ்வளவாம்24.2 மில்லியன் (அதாவது, 2 கோடியே 42 லட்சம்)சென்னை சிட்டி பகுதியின் மக்கள்தொகை 4.8 மில்லியன் (48 லட்சம்); தாம்பரம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதி சேர்த்து சென்னையில் மக்கள் தொகை 9 மில்லியன் (90 லட்சம்);

ஷாங்காய் நகரம் மிகமிகப் பெரிய துறைமுக நகரம்தான்! ஷாங்காய் என்பதில் உள்ள ஷாங் என்றால் உயரமான என்றும் காய் என்றால் கடல் என்றும் பெயராம். அதாவது கடலுக்கு மேலே உள்ள நகரம் என்று ஷாங்காய் நகருக்கு பொருளாம்

வெள்ளி, 27 மார்ச், 2015

ராணி இசபெல்லாவின் போராட்ட வாழ்க்கை!

பிரான்ஸ் மன்னர் பிலிப்-2;
இவர் பிறந்தது 1165-ல் (இவரின் தந்தைதான் பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-7);
பிலிப் சிறுவயதிலேயே காட்டில் தொலைந்து போய் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டவர். இதனால், 14 வயதிலேயே இவருக்கு இவரின் தந்தை முடி சூடி விட்டார்; 15 வயதில் திருமணமும் செய்து வைத்து விட்டார்; பிலிப்பின் மனைவி இசபெல்லா (Isabelle of Hainaut); இவர் மணப்பெண்ணாக வரும்போதே அர்டாய்ஸ் என்னும் சிறு நாட்டை (பிரான்ஸ் தேசத்தின் வடபகுதி) வரதட்சனையாக கொண்டு வந்தார். (அந்தப் பழக்கம்தான் நாமும் வரதட்சனையாக நாட்டுக்குப் பதிலாக பொருளாக வாங்குகிறோமே என்னவோ; தொட்டில் பழக்கமோ?);
மன்னர் பிலிப்-2 மனைவி இசபெல்லா; இவருக்கு மன்னரின் மனைவி (Queen Consort) என்ற அந்தஸ்து; (அதாவது நாட்டை ஆண்டால் ராணி; ராஜாவின் மனைவியாக மட்டும் இருந்தால் குயின் கன்சார்ட் -மன்னனின் மனைவி என்ற அந்தஸ்து மட்டுமே); இவரைத் திருமணம் செய்யும் போது பிலிப் மன்னருக்கு 15 வயது; அவரின் மனைவியாகும் இந்த சிறுமி இசபெல்லாவுக்கு 10 வயதுஇந்தக் கூத்தில், இசபெல்லாவின் தந்தை ஏற்கனவே இந்தச் சிறுமியை, ஷாம்பென் நாட்டு மன்னராகப் போகும் இளவரசன் ஹென்றிக்கு நிச்சயம் (betrothel) செய்திருந்தார்கள்; இந்த ஹென்றி ஊரில்தான் ஷேம்பென் என்னும் ஒயின் கிடைக்கிறது; பிரான்ஸ் நாட்டில், இந்த பகுதிநாட்டில்தான் ஷேம்பென் (Champagne)என்னும் ஒயின் தயாரிப்பதால் ஒயினுக்கும் இந்த நாட்டுப் பெயரே வந்தது; இளவரசர் ஹென்றியின் தந்தையும், இசபெல்லாவின் தந்தையும் அவர்கள் இருவரின் மகன், மகளை திருமணம் செய்து வைப்பது என்று பேச்சு வார்த்தையே செய்து கொண்டார்களாம்; இந்தமாதிரி, என் பையன் உன் மருமகன், உன் மகள் என் மருமகள் என்று உறுதிமொழியோ, சபதமோ, இளம் வயதிலேயே செய்து கொள்வது பெரும்பாலும் நடக்காமலேயே போய்விடுகிறது; நாம் ஒன்று நினைத்தால் கடவுள் வேறொன்றை நினைப்பார்; இது இளவரசர் ஹென்றி-மற்றும் இளவரசி இசபெல்லா விஷயத்திலும் ஏற்பட்டு விட்டது ஒன்றும் ஆச்சரியமில்லை! சரி அந்த நிச்சயதார்த்தம் நின்று விட்டது. இளவரசி இசபெல்லாவை இளவரசர் பிலிப்-2க்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்; ஆனாலும், இளவரசி இசபெல்லாவின் தாயாருக்கு இதில் பெருத்த வருத்தமாம்; 10 வயதில் திருமணம், 14 வயதுவரை குழந்தை இல்லை; பிலிப்புக்கு, மனைவி மேல் பிரியம் குறைகிறது; திருமணமாகி 4 வருடம் கழித்து, மன்னர் பிலிப் ஒரு போருக்கு போகிறார்; அங்கு மாமனாரை சந்திக்கிறார்; எல்லாக் கோபமும் சேர்ந்து மாமனாரின் மேல் விழுகிறது; ஏனென்றால், மாமனார், இவரின் எதிரிகளுடன் பழக்கத்தில் உள்ளார்; மன்னர் பிலிப், குழந்தை இல்லாத மனைவியை தள்ளிவைக்காமல் என நினைக்கிறார்; மாமனாரின் நண்பர்கள் எதிர்க்கிறார்கள்; இதற்கிடையில் ராணி இசபெல்லா, சாதாரண மக்கள் உடையில் அங்குள்ள சர்ச்சுகளுக்குச் சென்று, தன்னை, மன்னர் குழந்தை இல்லை என்பதால், தள்ளி வைக்க ஏற்பாடு செய்கிறார் என்று மக்களிடம் முறையிடுகிறார்; இதைப் பார்த்த மக்கள், பாவம் பார்த்து, நேராக, அரண்மனைக்குப் போய், ராணிக்கு ஆதரவாகக் கத்துகிறார்கள்; இவ்வளவு பிரச்சனைகள் இருந்ததால், மன்னரும் மனைவியை தள்ளி வைக்கவில்லை; திருமணமாகி ஏழு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது; அதுதான் பிற்கால லூயிஸ்-8 ம் மன்னர்; அதற்குப் பிறகு, 3 வருடங்கள் கழித்து ரெட்டைக் குழந்தைகள்; பிரசவம் கடுமையாகி விட்டது; இந்த ரெட்டையர்கள் ராபர்ட், பிலிப். இரட்டையர் பிரவத்திலேயே தாய் உயிரை விட்டுவிட்டாள்; அப்போது அவருக்கு 20 வயதுதான்; நாடே சோகத்தில் ஆழ்ந்து விட்டது; தாய் போனபின்னர் இரட்டையர்களும் அம்மாவைத் தேடிக் கொண்டு 4 வயதில் இறந்து விடுகிறார்கள்; மூத்த மகன் லூயிஸ் மட்டும்தான் உயிருடன் இருக்கிறார்; தன் தாய் சீதனமாகக் கொண்டுவந்த அர்டாய்ஸ் நாட்டுக்கு இளவரசன் ஆகிறான்; பின்னர் தந்தை பிலிப் மன்னர் இறந்தவுடன், அந்த நாட்டு வழக்கப்படி, மனைவி கொண்டுவந்த சீதனமான அர்ட்டாய்ஸ் நாட்டை அந்த பெண்ணின் பிறந்த வீட்டுக்கு திரும்ப கொடுத்து விடுகிறார்கள்; அவரின் மகன் லூயிஸ் பிரான்ஸ் நாட்டுக்கு மன்னன் ஆகிவிட்டதால், தாயின் சீதனமான அர்ட்டாய்ஸ் மண்ணை ஆளமுடியாது போல!

ஒருவேளை, கணவன் உயிருடன் இருக்கும்வரை தான் மனைவியின் சீதனச் சொத்தை ஆள முடியும் போல!

பிரான்ஸின் பிலிப் மன்னர்

பிரான்ஸ் மன்னர் பிலிப்-2
பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர் பிலிப்-2; இவர் 1165ல் பிறந்து 58 வயதுவரை வாழ்ந்தவர்; 43 வருடங்கள் (இறக்கும்வரை) பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்தவர்; இவரை பிலிப் ஆகஸ்தஸ் என்றும் அழைப்பர்; பிலிப்பின் தந்தை மன்னர் லூயிஸ்-7; இவருக்கு வெகுகாலம் ஆண்குழந்தையே இல்லாமல் இருந்து, பின்னர் இவரின் மூன்றாவது மனைவி மூலம் கடவுளின் அருளால் பிறந்தவர் இந்த பிலிப் என்பதால் இவரை கடவுளின் குழந்தை என்றும் செல்லமாக அழைப்பர்; இவர், பொவினஸ் சண்டையில் (Battle of Bouvines) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர்; இது நடந்தது 1214ல்; வெற்றிகொண்ட அப்பொது பிரான்ஸ் மன்னருக்கு 49 வயதுஇதில்தான் இங்கிலாந்து மன்னர் ஜான்-, ஜெர்மன் மன்னர் ஓட்டோ-4, இவர்களை இவர் தோற்கடித்தார். இங்கிலாந்து மன்னர் ஜானை தோற்கடித்ததால், இங்கிலாந்தில் உள்ள நிலபிரபுக்கள், தோற்ற இங்கிலாந்து மன்னர் ஜானைக் கட்டாயப்படுத்தி மேக்னா கார்ட்டா என்ற சட்டத்தை கொண்டுவந்து, மன்னரின் அதிகாரத்தை குறைத்து, மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்தினார்கள்;

பிரான்ஸ் மன்னர் பிலிப்பின் இளமை கால வாழ்க்கையைப் பற்றி சுவையான கதையும் உண்டு; இவர் சிறு வயதில், (12-13 வயதிருக்கும்) காட்டில் வேட்டைக்குச் சென்றபோது காணாமல் போய்விட்டார்; பனி, பசியில் வாடி திரிந்தவரை, அங்குள்ள விவசாயி கண்டுபிடித்தார். பிலிப்பின் தந்தை மன்னர் லூயிஸ், மகனைக் காணாமல் கோயில் குளமெல்லாம் திரிந்து கடவுளை வேண்டினார். பின்னர் பிலிப் கிடைத்தார். அதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதை அறிந்த அவரின் தந்தையும் பிலிப்பின் 14 வயதிலேயே அவருக்கு மன்னனாக முடிசூடி விட்டார். 

இங்கிலாந்து மன்னர் ஜான்

இங்கிலாந்து மன்னர் ஜான்:
1166ல் பிறந்தவர்; 60 வயதுவரை வாழ்ந்தவர்; 17 வருடம் இங்கிலாந்து மன்னராக இருந்தவர்; இவர் காலத்தில்தான் "மேக்னா கார்ட்டா" (Magna Carta) என்ற பொதுமக்கள் உரிமை சட்டம் வந்தது. அதனால் மன்னருக்கு அதிகாரம் குறைந்தது. இதைத் தொடர்ந்தே உலக நாடுகளில் மக்களாட்சி ஏற்பட வாய்ப்பு கிடைத்தது; பிரான்ஸ் மன்னர் பிலிப்-2 உடன் நடந்த போவைன்ஸ் சண்டையில் இங்கிலாந்து மன்னர் ஜான், பிரான்ஸ் மன்னர் பிலிப்பிடம் தோற்றார். (இந்தச் சண்டையில் இங்கிலாந்து, ஜெர்மனி, இவைகள் பிரான்ஸ் நாட்டுடன் சண்டையிட்டன); இங்கிலாந்து மன்னர் ஜானின் இந்தத் தோல்வி, இங்கிலாந்தில் இருந்த நிலபிரபுக்களுக்கு தொக்காகி விட்டது. மன்னர் தோற்றால், வேலைக்காரன் கூட மதிக்க மாட்டான்போல! இங்கிலாந்து மன்னரை கட்டாயப்படுத்தி இந்த மேக்னா கார்ட்டா சட்டத்தை திணித்து விட்டார்கள்;

மேக்னா கார்ட்டா என்பது லத்தீன் வார்த்தை; "மிகப்பெரிய சட்டம்" என்ற பொருளில் The Great Charter என்று பெயரிட்டனர். அதாவது விடுதலை கொடுக்கும் சட்டம் என்று அர்த்தம்; இந்த சட்டத்தை முதலில் எழுதியவர் கேன்டபெரி ஆர்ச் பிஷப் (Archbishop of Cantebury) என்பவர். அதாவது மன்னருக்கும் நிலபிரபுக்களுக்கும் ஒரு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காக இதை 1215ல் ஏற்படுத்தினார்; இதன்படி மன்னர் இஷ்டத்திற்கு மக்களை சிறையில் அடைக்க கூடாது; அதிக நிலவரி வாங்கக்கூடாது; நிலபிரபுக்களும் மன்னரின் சபையில் உறுப்பினராக இருப்பார்கள்; சர்ச் உரிமகைள் பாதுகாக்கப்பட வேண்டும்; இப்படியாக மக்களாட்சி போல இந்த சட்டம் ஏற்படுத்தப் பட்டது. அதனால் மன்னரின் அதிகாரம் குறைந்தது. இங்கிலாந்து மன்னர் ஜான், பிரான்ஸ் போரில் பிரான்ஸ் மன்னர் பிலிப்பிடம் தோற்காமல் இருந்திருந்தால், இந்த உலகில் சுதந்திரம் என்பது  வந்திருக்காதோ என்னவோ தெரியவில்லை;

திங்கள், 2 மார்ச், 2015

திருஞானசம்மந்தர்

திருஞானசம்மந்தர்:
சீர்காழியிலே சிவபாதர்-பகவதி என்ற பிராமணத் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தை மூன்று வயதாக இருக்கும்போதே தன் தந்தையுடன் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. வேறு வழியில்லாமல், அந்தக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, தந்தை குளத்தில் இறங்கி குளிக்கிறார். அவர் தண்ணீருக்குள் தலையை மூழ்கியதும், தந்தையைக் காணத குழந்தை அழ ஆரம்பிக்கிறது.  

அதன் அழுகையைக் கேட்டு சிவன் தன் தேவியுடன் வந்து சிறுவனிடன் அமர்ந்தார். பார்வதி பொற்கிண்ணத்தில் தன் பாலைக் சுரந்து அத்துடன் ஞானத்தையும் சேர்த்து அந்தச் சிறுவனுக்கு ஊட்டிவிட்டு இருவரும் மறைகின்றனர்.

ஞானப்பாலை உண்ட சிறுவனின் வாயிலிருந்து பால் வடிகிறது. குளித்துவிட்டு வந்த தந்தை இதை காண்டு திகைக்கிறார். வழியில் யார் கொடுத்தாலும் பாலைக் குடிப்பாயா என்று கண்டிக்கிறார்.  

யார் உனக்கு பால் கொடுத்தது என்று கண்டிப்புடன் கேட்கும் தந்தைக்கு அந்த மூன்று வயது சிறுவன், ஆகாயத்தை நோக்கி கையைக் காட்டி, "தோடுடைய செவியன் . . .. " என்ற பதிகத்தைப் பாடுகிறார் அந்த மூன்றே வயதான சிறுவன், திருஞான சம்மந்தர்.

இதுதான் இவர் முதன் முதலில் பாடிய தேவாரப் பாடல்.

“தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடிகாடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங் கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.”