இங்கிலாந்து மன்னர் ஜான்:
1166ல் பிறந்தவர்; 60 வயதுவரை வாழ்ந்தவர்; 17 வருடம் இங்கிலாந்து மன்னராக
இருந்தவர்; இவர் காலத்தில்தான் "மேக்னா கார்ட்டா"
(Magna Carta) என்ற பொதுமக்கள் உரிமை சட்டம் வந்தது. அதனால் மன்னருக்கு
அதிகாரம் குறைந்தது. இதைத் தொடர்ந்தே உலக நாடுகளில் மக்களாட்சி ஏற்பட வாய்ப்பு கிடைத்தது;
பிரான்ஸ் மன்னர் பிலிப்-2 உடன் நடந்த போவைன்ஸ் சண்டையில் இங்கிலாந்து
மன்னர் ஜான், பிரான்ஸ் மன்னர் பிலிப்பிடம் தோற்றார். (இந்தச்
சண்டையில் இங்கிலாந்து, ஜெர்மனி, இவைகள்
பிரான்ஸ் நாட்டுடன் சண்டையிட்டன); இங்கிலாந்து மன்னர் ஜானின்
இந்தத் தோல்வி, இங்கிலாந்தில் இருந்த நிலபிரபுக்களுக்கு தொக்காகி
விட்டது. மன்னர் தோற்றால், வேலைக்காரன் கூட மதிக்க மாட்டான்போல!
இங்கிலாந்து மன்னரை கட்டாயப்படுத்தி இந்த மேக்னா கார்ட்டா சட்டத்தை திணித்து விட்டார்கள்;
மேக்னா கார்ட்டா என்பது
லத்தீன் வார்த்தை; "மிகப்பெரிய சட்டம்"
என்ற பொருளில் The Great Charter என்று பெயரிட்டனர். அதாவது விடுதலை
கொடுக்கும் சட்டம் என்று அர்த்தம்; இந்த சட்டத்தை முதலில் எழுதியவர்
கேன்டபெரி ஆர்ச் பிஷப் (Archbishop of Cantebury) என்பவர். அதாவது
மன்னருக்கும் நிலபிரபுக்களுக்கும் ஒரு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காக இதை 1215ல்
ஏற்படுத்தினார்; இதன்படி மன்னர் இஷ்டத்திற்கு மக்களை சிறையில்
அடைக்க கூடாது; அதிக நிலவரி வாங்கக்கூடாது; நிலபிரபுக்களும் மன்னரின் சபையில் உறுப்பினராக இருப்பார்கள்; சர்ச் உரிமகைள் பாதுகாக்கப்பட வேண்டும்; இப்படியாக மக்களாட்சி
போல இந்த சட்டம் ஏற்படுத்தப் பட்டது. அதனால் மன்னரின் அதிகாரம் குறைந்தது. இங்கிலாந்து
மன்னர் ஜான், பிரான்ஸ் போரில் பிரான்ஸ் மன்னர் பிலிப்பிடம் தோற்காமல்
இருந்திருந்தால், இந்த உலகில் சுதந்திரம் என்பது வந்திருக்காதோ என்னவோ தெரியவில்லை;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக