திருஅண்ணாமலை:
திருவண்ணாமலை
பிரம்மா, விஷ்ணு இவர்களுக்கு ஜோதி பிழம்பாக (ஒளி
பிழம்பாக) நின்று சிவன் தரிசனம் கொடுத்த இடம் இந்த திருவண்ணாமலை.
இங்குள்ள லிங்கத்திற்குப் பெயர் ‘தேயு லிங்கம்’. இந்த
திருவண்ணாமலை நடுநாட்டிலுள்ளது. அதி பிரபலமான சிவஸ்தலம்.
மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும், திருவம்மானையும்,
பாடியது இந்த திருவண்ணாமலையில்தான்.
இந்த இடம் சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்ட இடம்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பிறந்த இடமும் இதுவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக