video et taceo" ("I see, and say nothing")
“பார்த்தேன், ஆனால் கருத்துச் சொல்ல ஏதுமில்லை”
இங்கிலாந்து ராணி 1-ம்
எலிசபெத்தின் தாரக மந்திரம் இது;
இவர் 45 வருடங்கள் ராணியாக
இருந்தவர்; (1533-ல் பிறந்து 1603 வரை வாழ்ந்தவர்;
1558ல் தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணி ஆனார்);
45 வருட ராணி இவர்; திருமணம் இல்லாமல் கன்னியாகவே
இருந்த ராணி (Virgin Queen) எனவும் இவருக்கு செல்லப் பெயர்
உண்டு;
இவர் காலத்தில்தான் கடல்வழி
படைகளை ஊக்குவித்து, வியாபாரத்தையும் விரிவு படுத்தினார்;
இவர் புராடஸ்டன்ட் மதத்தை தழுவினாலும், கத்தோலிக்க
மதக் கொள்கைகளையும், ஆங்கிலிக்கன் மதக் கொள்கைகளையும் ஏற்றுக்
கொண்டார்; இதுவே இவரின் வெற்றி என்றும் கூறுவர்; அப்போது கெடுபிடியாக இருந்த சர்ச் சட்டம், எல்லோரும்
பொது வழிபாடு என்ற புத்தகத்தில் உள்ள (தாமஸ் கிரான்மர் எழுதியது) முறைப்படி வழிபாடு
செய்ய வேண்டும் என்றும், தவறியவர்களுக்கு தண்டனை உண்டு என்றும்
சட்டம்; இதை 1-ம் எலிசபெத் அவ்வளவாக நடைமுறைப் படுத்தவில்லை;
கெடுபிடி காண்பிக்கவில்லை; இது மக்களுக்கு பிடித்துப்
போய்விட்டதாம்;
டூடர் இனத்தின் கடைசி
வாரிசும்,
ராணியும் இவரே; டூடர் இன (Tudor) 8-ம் ஹென்றியின் மகள் இவர்;
"எப்போது பேச வேண்டும்; எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டுமாம்"
The Knowledge of When to Speak and When to be Silent.
1-ம் எலிசபெத் ராணிக்கு
இந்த தாரக மந்திரமாக "நான் பார்த்தேன்; அதைப் பற்றி
சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்ற மந்திரமே பெயர் வாங்கிக் கொடுத்ததாம்;
நமக்கும் இதுவே பொருந்தும்
என்கிறார்கள்; எதைக் கண்டாலும் விமர்சனம் செய்யாமல்,
பொறுமையாக இருந்தால், அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்
என்கிறார்கள்; ராணியும் இதையே பின்பற்றி இருந்திருக்கிறார்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக