பிலிப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிலிப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2015

ராணி இசபெல்லாவின் போராட்ட வாழ்க்கை!

பிரான்ஸ் மன்னர் பிலிப்-2;
இவர் பிறந்தது 1165-ல் (இவரின் தந்தைதான் பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-7);
பிலிப் சிறுவயதிலேயே காட்டில் தொலைந்து போய் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டவர். இதனால், 14 வயதிலேயே இவருக்கு இவரின் தந்தை முடி சூடி விட்டார்; 15 வயதில் திருமணமும் செய்து வைத்து விட்டார்; பிலிப்பின் மனைவி இசபெல்லா (Isabelle of Hainaut); இவர் மணப்பெண்ணாக வரும்போதே அர்டாய்ஸ் என்னும் சிறு நாட்டை (பிரான்ஸ் தேசத்தின் வடபகுதி) வரதட்சனையாக கொண்டு வந்தார். (அந்தப் பழக்கம்தான் நாமும் வரதட்சனையாக நாட்டுக்குப் பதிலாக பொருளாக வாங்குகிறோமே என்னவோ; தொட்டில் பழக்கமோ?);
மன்னர் பிலிப்-2 மனைவி இசபெல்லா; இவருக்கு மன்னரின் மனைவி (Queen Consort) என்ற அந்தஸ்து; (அதாவது நாட்டை ஆண்டால் ராணி; ராஜாவின் மனைவியாக மட்டும் இருந்தால் குயின் கன்சார்ட் -மன்னனின் மனைவி என்ற அந்தஸ்து மட்டுமே); இவரைத் திருமணம் செய்யும் போது பிலிப் மன்னருக்கு 15 வயது; அவரின் மனைவியாகும் இந்த சிறுமி இசபெல்லாவுக்கு 10 வயதுஇந்தக் கூத்தில், இசபெல்லாவின் தந்தை ஏற்கனவே இந்தச் சிறுமியை, ஷாம்பென் நாட்டு மன்னராகப் போகும் இளவரசன் ஹென்றிக்கு நிச்சயம் (betrothel) செய்திருந்தார்கள்; இந்த ஹென்றி ஊரில்தான் ஷேம்பென் என்னும் ஒயின் கிடைக்கிறது; பிரான்ஸ் நாட்டில், இந்த பகுதிநாட்டில்தான் ஷேம்பென் (Champagne)என்னும் ஒயின் தயாரிப்பதால் ஒயினுக்கும் இந்த நாட்டுப் பெயரே வந்தது; இளவரசர் ஹென்றியின் தந்தையும், இசபெல்லாவின் தந்தையும் அவர்கள் இருவரின் மகன், மகளை திருமணம் செய்து வைப்பது என்று பேச்சு வார்த்தையே செய்து கொண்டார்களாம்; இந்தமாதிரி, என் பையன் உன் மருமகன், உன் மகள் என் மருமகள் என்று உறுதிமொழியோ, சபதமோ, இளம் வயதிலேயே செய்து கொள்வது பெரும்பாலும் நடக்காமலேயே போய்விடுகிறது; நாம் ஒன்று நினைத்தால் கடவுள் வேறொன்றை நினைப்பார்; இது இளவரசர் ஹென்றி-மற்றும் இளவரசி இசபெல்லா விஷயத்திலும் ஏற்பட்டு விட்டது ஒன்றும் ஆச்சரியமில்லை! சரி அந்த நிச்சயதார்த்தம் நின்று விட்டது. இளவரசி இசபெல்லாவை இளவரசர் பிலிப்-2க்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்; ஆனாலும், இளவரசி இசபெல்லாவின் தாயாருக்கு இதில் பெருத்த வருத்தமாம்; 10 வயதில் திருமணம், 14 வயதுவரை குழந்தை இல்லை; பிலிப்புக்கு, மனைவி மேல் பிரியம் குறைகிறது; திருமணமாகி 4 வருடம் கழித்து, மன்னர் பிலிப் ஒரு போருக்கு போகிறார்; அங்கு மாமனாரை சந்திக்கிறார்; எல்லாக் கோபமும் சேர்ந்து மாமனாரின் மேல் விழுகிறது; ஏனென்றால், மாமனார், இவரின் எதிரிகளுடன் பழக்கத்தில் உள்ளார்; மன்னர் பிலிப், குழந்தை இல்லாத மனைவியை தள்ளிவைக்காமல் என நினைக்கிறார்; மாமனாரின் நண்பர்கள் எதிர்க்கிறார்கள்; இதற்கிடையில் ராணி இசபெல்லா, சாதாரண மக்கள் உடையில் அங்குள்ள சர்ச்சுகளுக்குச் சென்று, தன்னை, மன்னர் குழந்தை இல்லை என்பதால், தள்ளி வைக்க ஏற்பாடு செய்கிறார் என்று மக்களிடம் முறையிடுகிறார்; இதைப் பார்த்த மக்கள், பாவம் பார்த்து, நேராக, அரண்மனைக்குப் போய், ராணிக்கு ஆதரவாகக் கத்துகிறார்கள்; இவ்வளவு பிரச்சனைகள் இருந்ததால், மன்னரும் மனைவியை தள்ளி வைக்கவில்லை; திருமணமாகி ஏழு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது; அதுதான் பிற்கால லூயிஸ்-8 ம் மன்னர்; அதற்குப் பிறகு, 3 வருடங்கள் கழித்து ரெட்டைக் குழந்தைகள்; பிரசவம் கடுமையாகி விட்டது; இந்த ரெட்டையர்கள் ராபர்ட், பிலிப். இரட்டையர் பிரவத்திலேயே தாய் உயிரை விட்டுவிட்டாள்; அப்போது அவருக்கு 20 வயதுதான்; நாடே சோகத்தில் ஆழ்ந்து விட்டது; தாய் போனபின்னர் இரட்டையர்களும் அம்மாவைத் தேடிக் கொண்டு 4 வயதில் இறந்து விடுகிறார்கள்; மூத்த மகன் லூயிஸ் மட்டும்தான் உயிருடன் இருக்கிறார்; தன் தாய் சீதனமாகக் கொண்டுவந்த அர்டாய்ஸ் நாட்டுக்கு இளவரசன் ஆகிறான்; பின்னர் தந்தை பிலிப் மன்னர் இறந்தவுடன், அந்த நாட்டு வழக்கப்படி, மனைவி கொண்டுவந்த சீதனமான அர்ட்டாய்ஸ் நாட்டை அந்த பெண்ணின் பிறந்த வீட்டுக்கு திரும்ப கொடுத்து விடுகிறார்கள்; அவரின் மகன் லூயிஸ் பிரான்ஸ் நாட்டுக்கு மன்னன் ஆகிவிட்டதால், தாயின் சீதனமான அர்ட்டாய்ஸ் மண்ணை ஆளமுடியாது போல!

ஒருவேளை, கணவன் உயிருடன் இருக்கும்வரை தான் மனைவியின் சீதனச் சொத்தை ஆள முடியும் போல!