குயிலாய் இருக்கும் கடம்பாடவி இடைக்
கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்து இடை
வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின்
மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான அளித்த
கனங்குழையே!
(அபிராமி அந்தாதி – பாடல் 99)
(கடம்ப வனத்தில் குயிலாய் இருக்கும்,
இமய மலையில் மயிலாய் இருக்கும், வானத்தில் வந்து
உதிக்கும் வெயிலாய் இருக்கும், தாமரையின் மீது அன்னமாய் இருக்கும்,
கயிலை நாதருக்கு இமவான் மணம் செய்து கொடுத்த கனங்குழையே!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக