கோமள வல்லியை அல்லியம் தாமரைக் கோயில்
வைகும்
யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே!
(அபிராமி அந்தாதி – பாடல் 96)
(கோமளவல்லியை, மலர்ந்த தாமரை மலரை கோயிலாக கொண்டு வீற்றிருக்கும் யாமள வல்லியை, குற்றம் இல்லாதாளை, எழுத்தில் விளக்க முடியாத சாமள மேனி
(பச்சை வண்ண மேனி), சகல கலைகளிலும் வல்லவளான மயில்
போன்றவளை, தன்னால் இயன்ற அளவு போற்றித் தொழபவர்கள், ஏழு உலகங்களுக்கும் அதிபதி ஆவார்கள்!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக