ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொரு படைக்கு அத்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே!
(அபிராமி அந்தாதி – பாடல் 97)
சூரியன், சந்திரன், அக்னி, குபேரன், தேவர்களின் அரசனான இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், சிவன் (முப்புரம் எரித்துவன்), திருமால் (புல்லாங்குழல் ஏந்தியவன்), பொதிய முனியான அகத்தியர், போர் புரியும் வேல் படைக்கு
அதிபதியான கந்தன், கணபதி, மன்மதன்,
இவர்கள் முதலாக சாதித்த புண்ணிய தெய்வங்கள் எண்ணிலடங்காதவர் போற்றுவர்
தையலையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக