பிரான்ஸ் மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரான்ஸ் மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2015

ராணி இசபெல்லாவின் போராட்ட வாழ்க்கை!

பிரான்ஸ் மன்னர் பிலிப்-2;
இவர் பிறந்தது 1165-ல் (இவரின் தந்தைதான் பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-7);
பிலிப் சிறுவயதிலேயே காட்டில் தொலைந்து போய் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டவர். இதனால், 14 வயதிலேயே இவருக்கு இவரின் தந்தை முடி சூடி விட்டார்; 15 வயதில் திருமணமும் செய்து வைத்து விட்டார்; பிலிப்பின் மனைவி இசபெல்லா (Isabelle of Hainaut); இவர் மணப்பெண்ணாக வரும்போதே அர்டாய்ஸ் என்னும் சிறு நாட்டை (பிரான்ஸ் தேசத்தின் வடபகுதி) வரதட்சனையாக கொண்டு வந்தார். (அந்தப் பழக்கம்தான் நாமும் வரதட்சனையாக நாட்டுக்குப் பதிலாக பொருளாக வாங்குகிறோமே என்னவோ; தொட்டில் பழக்கமோ?);
மன்னர் பிலிப்-2 மனைவி இசபெல்லா; இவருக்கு மன்னரின் மனைவி (Queen Consort) என்ற அந்தஸ்து; (அதாவது நாட்டை ஆண்டால் ராணி; ராஜாவின் மனைவியாக மட்டும் இருந்தால் குயின் கன்சார்ட் -மன்னனின் மனைவி என்ற அந்தஸ்து மட்டுமே); இவரைத் திருமணம் செய்யும் போது பிலிப் மன்னருக்கு 15 வயது; அவரின் மனைவியாகும் இந்த சிறுமி இசபெல்லாவுக்கு 10 வயதுஇந்தக் கூத்தில், இசபெல்லாவின் தந்தை ஏற்கனவே இந்தச் சிறுமியை, ஷாம்பென் நாட்டு மன்னராகப் போகும் இளவரசன் ஹென்றிக்கு நிச்சயம் (betrothel) செய்திருந்தார்கள்; இந்த ஹென்றி ஊரில்தான் ஷேம்பென் என்னும் ஒயின் கிடைக்கிறது; பிரான்ஸ் நாட்டில், இந்த பகுதிநாட்டில்தான் ஷேம்பென் (Champagne)என்னும் ஒயின் தயாரிப்பதால் ஒயினுக்கும் இந்த நாட்டுப் பெயரே வந்தது; இளவரசர் ஹென்றியின் தந்தையும், இசபெல்லாவின் தந்தையும் அவர்கள் இருவரின் மகன், மகளை திருமணம் செய்து வைப்பது என்று பேச்சு வார்த்தையே செய்து கொண்டார்களாம்; இந்தமாதிரி, என் பையன் உன் மருமகன், உன் மகள் என் மருமகள் என்று உறுதிமொழியோ, சபதமோ, இளம் வயதிலேயே செய்து கொள்வது பெரும்பாலும் நடக்காமலேயே போய்விடுகிறது; நாம் ஒன்று நினைத்தால் கடவுள் வேறொன்றை நினைப்பார்; இது இளவரசர் ஹென்றி-மற்றும் இளவரசி இசபெல்லா விஷயத்திலும் ஏற்பட்டு விட்டது ஒன்றும் ஆச்சரியமில்லை! சரி அந்த நிச்சயதார்த்தம் நின்று விட்டது. இளவரசி இசபெல்லாவை இளவரசர் பிலிப்-2க்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்; ஆனாலும், இளவரசி இசபெல்லாவின் தாயாருக்கு இதில் பெருத்த வருத்தமாம்; 10 வயதில் திருமணம், 14 வயதுவரை குழந்தை இல்லை; பிலிப்புக்கு, மனைவி மேல் பிரியம் குறைகிறது; திருமணமாகி 4 வருடம் கழித்து, மன்னர் பிலிப் ஒரு போருக்கு போகிறார்; அங்கு மாமனாரை சந்திக்கிறார்; எல்லாக் கோபமும் சேர்ந்து மாமனாரின் மேல் விழுகிறது; ஏனென்றால், மாமனார், இவரின் எதிரிகளுடன் பழக்கத்தில் உள்ளார்; மன்னர் பிலிப், குழந்தை இல்லாத மனைவியை தள்ளிவைக்காமல் என நினைக்கிறார்; மாமனாரின் நண்பர்கள் எதிர்க்கிறார்கள்; இதற்கிடையில் ராணி இசபெல்லா, சாதாரண மக்கள் உடையில் அங்குள்ள சர்ச்சுகளுக்குச் சென்று, தன்னை, மன்னர் குழந்தை இல்லை என்பதால், தள்ளி வைக்க ஏற்பாடு செய்கிறார் என்று மக்களிடம் முறையிடுகிறார்; இதைப் பார்த்த மக்கள், பாவம் பார்த்து, நேராக, அரண்மனைக்குப் போய், ராணிக்கு ஆதரவாகக் கத்துகிறார்கள்; இவ்வளவு பிரச்சனைகள் இருந்ததால், மன்னரும் மனைவியை தள்ளி வைக்கவில்லை; திருமணமாகி ஏழு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது; அதுதான் பிற்கால லூயிஸ்-8 ம் மன்னர்; அதற்குப் பிறகு, 3 வருடங்கள் கழித்து ரெட்டைக் குழந்தைகள்; பிரசவம் கடுமையாகி விட்டது; இந்த ரெட்டையர்கள் ராபர்ட், பிலிப். இரட்டையர் பிரவத்திலேயே தாய் உயிரை விட்டுவிட்டாள்; அப்போது அவருக்கு 20 வயதுதான்; நாடே சோகத்தில் ஆழ்ந்து விட்டது; தாய் போனபின்னர் இரட்டையர்களும் அம்மாவைத் தேடிக் கொண்டு 4 வயதில் இறந்து விடுகிறார்கள்; மூத்த மகன் லூயிஸ் மட்டும்தான் உயிருடன் இருக்கிறார்; தன் தாய் சீதனமாகக் கொண்டுவந்த அர்டாய்ஸ் நாட்டுக்கு இளவரசன் ஆகிறான்; பின்னர் தந்தை பிலிப் மன்னர் இறந்தவுடன், அந்த நாட்டு வழக்கப்படி, மனைவி கொண்டுவந்த சீதனமான அர்ட்டாய்ஸ் நாட்டை அந்த பெண்ணின் பிறந்த வீட்டுக்கு திரும்ப கொடுத்து விடுகிறார்கள்; அவரின் மகன் லூயிஸ் பிரான்ஸ் நாட்டுக்கு மன்னன் ஆகிவிட்டதால், தாயின் சீதனமான அர்ட்டாய்ஸ் மண்ணை ஆளமுடியாது போல!

ஒருவேளை, கணவன் உயிருடன் இருக்கும்வரை தான் மனைவியின் சீதனச் சொத்தை ஆள முடியும் போல!

பிரான்ஸின் பிலிப் மன்னர்

பிரான்ஸ் மன்னர் பிலிப்-2
பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர் பிலிப்-2; இவர் 1165ல் பிறந்து 58 வயதுவரை வாழ்ந்தவர்; 43 வருடங்கள் (இறக்கும்வரை) பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்தவர்; இவரை பிலிப் ஆகஸ்தஸ் என்றும் அழைப்பர்; பிலிப்பின் தந்தை மன்னர் லூயிஸ்-7; இவருக்கு வெகுகாலம் ஆண்குழந்தையே இல்லாமல் இருந்து, பின்னர் இவரின் மூன்றாவது மனைவி மூலம் கடவுளின் அருளால் பிறந்தவர் இந்த பிலிப் என்பதால் இவரை கடவுளின் குழந்தை என்றும் செல்லமாக அழைப்பர்; இவர், பொவினஸ் சண்டையில் (Battle of Bouvines) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர்; இது நடந்தது 1214ல்; வெற்றிகொண்ட அப்பொது பிரான்ஸ் மன்னருக்கு 49 வயதுஇதில்தான் இங்கிலாந்து மன்னர் ஜான்-, ஜெர்மன் மன்னர் ஓட்டோ-4, இவர்களை இவர் தோற்கடித்தார். இங்கிலாந்து மன்னர் ஜானை தோற்கடித்ததால், இங்கிலாந்தில் உள்ள நிலபிரபுக்கள், தோற்ற இங்கிலாந்து மன்னர் ஜானைக் கட்டாயப்படுத்தி மேக்னா கார்ட்டா என்ற சட்டத்தை கொண்டுவந்து, மன்னரின் அதிகாரத்தை குறைத்து, மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்தினார்கள்;

பிரான்ஸ் மன்னர் பிலிப்பின் இளமை கால வாழ்க்கையைப் பற்றி சுவையான கதையும் உண்டு; இவர் சிறு வயதில், (12-13 வயதிருக்கும்) காட்டில் வேட்டைக்குச் சென்றபோது காணாமல் போய்விட்டார்; பனி, பசியில் வாடி திரிந்தவரை, அங்குள்ள விவசாயி கண்டுபிடித்தார். பிலிப்பின் தந்தை மன்னர் லூயிஸ், மகனைக் காணாமல் கோயில் குளமெல்லாம் திரிந்து கடவுளை வேண்டினார். பின்னர் பிலிப் கிடைத்தார். அதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதை அறிந்த அவரின் தந்தையும் பிலிப்பின் 14 வயதிலேயே அவருக்கு மன்னனாக முடிசூடி விட்டார்.