பிரான்ஸ்
மன்னர் பிலிப்-2
பிரான்ஸ் நாட்டை ஆண்ட
மன்னர் பிலிப்-2; இவர் 1165ல் பிறந்து 58 வயதுவரை
வாழ்ந்தவர்; 43 வருடங்கள் (இறக்கும்வரை) பிரான்ஸ் நாட்டு மன்னராக
இருந்தவர்; இவரை பிலிப் ஆகஸ்தஸ் என்றும் அழைப்பர்; பிலிப்பின் தந்தை மன்னர் லூயிஸ்-7; இவருக்கு வெகுகாலம்
ஆண்குழந்தையே இல்லாமல் இருந்து, பின்னர் இவரின் மூன்றாவது மனைவி
மூலம் கடவுளின் அருளால் பிறந்தவர் இந்த பிலிப் என்பதால் இவரை கடவுளின் குழந்தை என்றும்
செல்லமாக அழைப்பர்; இவர், பொவினஸ் சண்டையில்
(Battle of Bouvines) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர்;
இது நடந்தது 1214ல்; வெற்றிகொண்ட அப்பொது பிரான்ஸ்
மன்னருக்கு 49 வயது; இதில்தான் இங்கிலாந்து மன்னர் ஜான்-, ஜெர்மன் மன்னர்
ஓட்டோ-4, இவர்களை இவர் தோற்கடித்தார். இங்கிலாந்து மன்னர் ஜானை
தோற்கடித்ததால், இங்கிலாந்தில் உள்ள நிலபிரபுக்கள், தோற்ற இங்கிலாந்து மன்னர் ஜானைக் கட்டாயப்படுத்தி மேக்னா கார்ட்டா என்ற சட்டத்தை
கொண்டுவந்து, மன்னரின் அதிகாரத்தை குறைத்து, மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்தினார்கள்;
பிரான்ஸ் மன்னர் பிலிப்பின்
இளமை கால வாழ்க்கையைப் பற்றி சுவையான கதையும் உண்டு; இவர்
சிறு வயதில், (12-13 வயதிருக்கும்) காட்டில் வேட்டைக்குச் சென்றபோது
காணாமல் போய்விட்டார்; பனி, பசியில் வாடி
திரிந்தவரை, அங்குள்ள விவசாயி கண்டுபிடித்தார். பிலிப்பின் தந்தை
மன்னர் லூயிஸ், மகனைக் காணாமல் கோயில் குளமெல்லாம் திரிந்து கடவுளை
வேண்டினார். பின்னர் பிலிப் கிடைத்தார். அதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என நினைக்கத்
தோன்றுகிறது. அதை அறிந்த அவரின் தந்தையும் பிலிப்பின் 14 வயதிலேயே அவருக்கு மன்னனாக
முடிசூடி விட்டார்.