1-ம் எலிசபெத் மகாராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1-ம் எலிசபெத் மகாராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மார்ச், 2015

1-ம் எலிசபெத் மகாராணி:(Queen Elizabeth-I)


1-ம் எலிசபெத் மகாராணி:(Queen Elizabeth-I):
இங்கிலாந்தின் மகாராணி; 1533ல் பிறந்து, 67 வயதுவரை வாழ்ந்தவர்; தனது 25 வயதில் இங்கிலாந்து நாட்டுக்கு ராணியாகி விட்டார்; திருமணமே செய்து கொள்ளவில்லை; கன்னியாக இருந்து விட்டார்; டூடர் இன மன்னராட்சியில் இவரே கடைசி ராணி ஆவார்; (டூடர் இன மன்னர்களில் 7-ம் ஹென்றி முதல் மன்னர் ஆவார்);
8-ம் ஹென்றி மன்னரைப் பற்றிச் சொன்னால் தான், அவரின் மகளான (2-வது மனையின் மகளான) 1-ம் எலிசபெத் ராணியைப் பற்றி தெரியவரும்; ஆண் வாரிசுகள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற காலத்தில், எப்படி பெண் வாரிசான மகள் 1-ம் எலிசபெத் ராணி ஆனார் என்பது ஒரு சுவாரஸ்யமிக்க சரித்திரமே!
8ம் ஹென்றி: (சுமார் 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்);
8ம் ஹென்றி 1491ல் பிறந்தவர்; 18 வயதிலேயே மன்னராகி விட்டார்; இறக்கும்வரை மன்னராகவே இருந்தார்; 56 வயதில் இறந்தார்; 38 ஆண்டுகள் மன்னராக இருந்தவர்; 7-ம் ஹென்றியின் மகன்தான் இந்த 8-ம் ஹென்றி; ஹென்றி மன்னர்கள்தான் டூடர் (Tudor) இன மன்னர்கள்;
8-ம் ஹென்றி மன்னருக்கு வாரிசு வேண்டும் என்ற குழப்பத்தில்தான் எட்டு முறை திருமணம் செய்துள்ளார்; இவர் குழப்பத்தால்தான் இங்கிலாந்து அரசியலே குழம்பி போனது என்றுகூடச் சொல்லலாம்; அதுவரை ரோம் நகரிலுள்ள போப் அவர்களின் யோசனைப்படிதான் இங்கிலாந்து மன்னர்கள் ஆட்சி செய்வர்; இங்கிலாந்திலுள்ள சர்ச்சுகள் அனைத்தும் ரோமன் போப்-ன் நிர்வாகத்தில்தான் இருந்திருக்கிறது;
8-ம் ஹென்றி பிறந்த கதை;
7-ம் ஹென்றிக்கும், அவரின் மனைவியான யார்க்கின் எலிசபெத்துக்கும் (Elizabeth of York) பிறந்த மூன்றாவது குழந்தைதான் இந்த 8-ம் ஹென்றி; ஆனால் மகன்களில் இரண்டாவது மகன்தான் இந்த 8-ம் ஹென்றி மன்னர்; அவர் தந்தையான 7-ம் ஹென்றிக்கு மொத்தம் 7 பிள்ளைகள்; அதில் 8-ம் ஹென்றியுடன், அவரின் மூத்த சகோதரர் ஆர்தர், மார்க்ரெட், மேரி ஆகிய நான்கு குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர்; இதில் ஆர்தர், காத்தரின் என்பவரை திருமணம் செய்கிறார்; ஆனால் 5 மாதங்களிலேயே ஆர்தர் இறந்து விடுகிறார்; அப்போது ஆர்தருக்கு 15 வயதுதான்; அப்போது 8-ம்ஹென்றிக்கு 10 வயதுதான்;
அண்ணன் மனைவியான காத்தரின், தன் மனைவியானார்;
இறந்த அண்ணன் ஆர்தரின் மனைவியான காத்தரினை இவர் திருமணம் செய்து கொள்ள அவரின் தகப்பனார் 7-ம் ஹென்றி ஏற்பாடு செய்கிறார்; இவ்வாறு திருமணம் நடந்தால், சேர்ந்து வாழ வேண்டுமாம் (உடல் அளவில் சேர்ந்த வாழ்வது); மாப்பிள்ளையான இவருக்கோ 11 வயதுதான் ஆகிறது; ரோமிலிருந்து போப்பின் சம்மதமும் கிடைக்கவில்லை; இந்தக் காரணங்களால் இவரின் திருமணமும் தடைப்பட்டு விட்டது; அப்போது 8-ம் ஹென்றிக்கு வயது 11; உறவு கொள்ளமுடியாத வயதாம்; மறுவருடம் காத்தரினின் தாய் இசபெல்லா இறக்கிறார்; பிரச்சனைகளும் உருவாகின்றன; காத்தரினின் தகப்பனார் பெர்டினான்ட், தன் மகளுக்கு தூதுவர் பதவி கொடுத்து நிரந்தரமாக இங்கிலாந்திலேயே தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என மருமகனான 8-ம் ஹென்றியை கேட்கிறார்; ஒரு நான்கு வருடம் கழித்து தந்தை 7-ம் ஹென்றி இறக்கிறார்; இறந்த தந்தையின் ஆசை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி 8-ம் ஹென்றி, காத்தரினை மணக்க சம்மதிக்கிறார்; ஆனால் போப் சம்மதம் கிடைக்கவில்லை; 1509-ல் 8-ம் ஹென்றிக்கும் காத்தரினுக்கும் திருமணம் சர்ச்சில் நடக்கிறது; 8-ம் ஹென்றி இங்கிலாந்தின் ராஜாவாகவும் ஆகி விட்டார்;
காத்தரின் கர்ப்பமாகிறார்; பெண் குழந்தை இறந்தே பிறக்கிறது; மறுபடியும் கர்ப்பமாகிறார்; ஆண்குழந்தை பிறக்கிறது, ஹென்றி என்று பெயர்; 2 மாதத்தில் அந்த ஆண் குழந்தையும் இறக்கிறது; காத்தரீன் மீண்டும் கர்ப்பம்; இப்போது பெண் குழந்தை, அதன் பெயர் மேரி; ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தம் ராஜாவுக்கு;
பிளான்ட் என்ற பெண்ணுடன் பழக்கம்;
8-ம் ஹென்றிக்கு இப்போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது; பிளான்ட் என்ற அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இறந்தே பிறக்கிறது; பிளான்டுக்கு மறுபடியும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது; அது ஹென்றி பிட்ஜ்ராய் என்று பெயர்; திருமணம் மூலம் முறைப்படி பிறந்த ஆண் குழந்தை அல்ல அது; (பின்நாளில்அவனும் வளர்ந்து பெரியவனாகி, திருமணம் நடந்து குழந்தை இல்லாமல் இறக்கிறான்);
அரசியல் மாற்றங்களை வேகமாக நிகழ்கின்றன; 8-ம் ஹென்றி, பிரான்ஸ் நாட்டுடன் போருக்கு போகிறார்; அப்போது 8-ம் ஹென்றிக்கு 22 வயதுதான்; அதில் சிறு வெற்றியை அடைகிறார்; மறுபடியும் போருக்கு செல்கிறார்; இவர் ஊரில் இல்லாததால், அதைப் பயன்படுத்தி, இவரின் மருமகன் 4-ம் ஜேம்ஸ் இங்கிலாந்துக்குள் படைகளுடன் நுழைகிறார்; இது, தோல்விகண்ட பிரான்ஸ்காரர்களின் தூண்டுதலால் நடக்கிறது; கணவர் இல்லாததால், ராணி காத்தரீனே போரை முன்னின்று நடத்தி வெற்றியும் அடைகிறார்; பிரான்ஸ் நாட்டுடன் போர் ஏற்பட்டதால் கஜானா காலியாகி விட்டது; மந்திரிகள் யோசனையால், 8-ம் ஹென்றியின் தங்கை மேரியை, பிரான்ஸ் மன்னர் லூயிஸூக்கு திருமணம் செய்து கொடுக்க சமாதான ஒப்பந்தம் செய்கிறார்; வெகுகாலம் கழித்து பிரான்ஸ் மன்னர் லூயிஸ் இறக்கிறார்; 1-ம் பிரான்சிஸ் ஆட்சிக்கு வருகிறார்;
8-ம் ஹென்றியின் வேறு பழக்கங்கள்; (மேரிபோலின், ஆன்னிபோலின்);
இதற்கிடையில், 8-ம் ஹென்றி மன்னர், அவரின் மனைவியின் வேலைக்காரியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்; அந்த பெண்ணின் பெயர் மேரிபோலின்; இவர் அழகாக இருப்பாராம்; வேலைக்காரி மூலம் 2 குழந்தைகள்; கேத்ரின்கேரி, ஹென்றிகேரி; ஆனாலும், மன்னர் 8-ம் ஹென்றி இந்த குழந்தைகளை தன் வாரிசுகள் என்று அங்கீகாரம் அளிக்கவில்லை; மனைவி காத்தரின் ஆண் குழந்தை கொடுக்க முடியவில்லை என்று மன்னருக்கு எப்போதும் கோபமாம்; வாரிசு இல்லையே! எல்லாம் பெண்களாகவே பிறக்கிறதே; இதனால், வேலைக்காரி மேரிபோலினின் தங்கை ஆனிபோலின் மீது காதல் வந்துவிட்டது மன்னருக்கு; இந்த பெண்தான், மன்னரின் பிரயாணத்தின்போது துணைக்கு செல்பவராம்; ஆனாலும் அக்கா, மன்னருக்கு வைப்பாட்டியாக இருக்கும்போது, தானும் இதேபோல் இருக்க விரும்பவில்லையாம்;
8-ம் ஹென்றிக்கு பின்னர் அரச வாரிசு யார்? யார் மன்னராக முடியும்?
மன்னர் குழம்புகிறார்;
வைப்பாட்டி பிளான்டின் மகனான ஹென்றி பிட்ஜராயை வாரிசாக அறிவித்து விடலாமா?
காத்தரீன் மூலம் பெற்ற தன் மகள் மேரிக்கு திருமணம் செய்து வைத்து அவளுக்குப் பிறக்கும் குழந்தையை (பேரனை) ஆட்சியில் அமர்த்தி விடலாமா?
அல்லது மேரிபோலின் வேலைக்காரியின் தங்கையான ஆன்னிபோலினை திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படியென்றால் முதல் மனைவி காத்தரீனை விவாகரத்து செய்யவேண்டுமே? இதற்கு ரோமில் உள்ள போப் ஒப்புக் கொள்வாரா?
இல்லையென்றால், ரோமில் உள்ள போப்பை எதிர்த்துக் கொண்டு, நாமே இங்கிலாந்தில் தனி வழிபாட்டு சட்டத்தை கொண்டு வந்துவிடலாமா?
8-ம் ஹென்றி "சுத்த கத்தோலிக்கராய்தான்" இருந்தார்; ஆண் வாரிசு வேண்டுமே என்பதற்காக கத்தோலிக்க கொள்கையிலிருந்து விலக மனது ஒப்புக்கொண்டது; இப்போது ரோமில் போப்பாண்டவராக இருந்தவர் போப் 7-ம் கிளமெண்ட் ;
8-ம் ஹென்றியே போப்புக்குப் பதிலாக இங்கிலாந்து சட்டதிட்டங்களை வகுத்தார்; அதன்படி, அண்ணன் மனைவியான காத்தரினை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்று "லெவட்டிகஸ்" என்ற  சர்சு சட்டதில் உள்ளது என்றும், அதனால் அந்த திருமணம் செல்லாது என்றும் இவரே அறிவிக்கிறார்; அந்த மனைவியான கேத்தரினோ, சோகமாக சந்நியாசி ஆக முடிவெடுக்கிறார்; இதற்கிடையில் போப் இதற்கு சட்டப்படியான சம்மதம் கொடுக்கவில்லை; இவரும் யார் யாரையோ அனுப்பி சட்டம் பேசுகிறார், பலிக்கவில்லை;
8-ம் ஹென்றியின் செக்கரட்டரியான அறிவாளியான சர் தாமஸ் மூர் அவர்களும் கண்டிப்பான கத்தோலிக்கராகவே இருந்தார்; இந்த திருமணத்தை ரத்து செய்ய ஒப்புக் கொள்ளவில்லை;
8-ம் ஹென்றியின் தடலடியான முடிவுகள்;
மனைவி காத்தரினை அரசவைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்; வந்தால் பக்கத்தில் அமர வைக்க வேண்டும்போல; காத்தரினின் தங்கும் அறைகள், காதலியான ஆன்னிபோலினுக்கு கொடுத்து விட்டார்; ஆன்னிபோலின் படித்த அறிவாளிப் பெண்; இந்த சூழ்நிலையை நன்கு உபயோகப் படுத்திக் கொண்டு, கத்தோலிக்க தத்துவத்துக்கு மாறுதலான புராடஸ்டன்ட் கொள்கைகளை வளர்க்க பாடுபட்டார்; இங்கிலாந்து ரோமன் சர்ச்சில் தனக்குவேண்டிய பிஷப்பை நியமித்துக் கொண்டார்;
8-ம் ஹென்றி ஆன்னிபோலினை திருமணம் செய்து கொண்டார்;
பிரான்ஸ் மன்னர் 1-ம் பிரான்சிஸ் உடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார் இங்கிலாந்து மன்னர் 8-ம் ஹென்றி; இதை பயன்படுத்தி ஆன்னிபோலினை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சர்ச்சில் திருமணம் செய்து கொள்கிறார்; ஆன்னி கர்ப்பமாகி விடுகிறார்; எனவே மறுபடியும் ஊரறிய திருமணம் செய்வதற்காக, மூத்த மனைவி காத்தரின் திருமணம் சட்டம்படி செல்லாது என்று அறிவிக்கிறார்; பின்னர் ஆன்னியை வெளிப்படையாக மறுபடியும் திருமணம் செய்து கொள்கிறார்; மூத்த மனைவி காத்தரினுக்கு ராணி அந்தஸ்து கொடுக்காமல், இந்த ஆன்னிபோலினை ராணி ஆக்குகிறார்; ராணியான ஆன்னிபோலின் ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொடுக்கிறார் (இதுவும் ஆண் இல்லை, ராஜாவுக்கு வருத்தமா?); அந்தப் பெண் குழந்தைதான் எலிசபெத்;
ராணி எலிசபெத் பிறப்பு;
8-ம் ஹென்றிக்கும், ஆன்னிபோலினுக்கும் நடந்த திருமணத்தில் பிறந்த குழந்தைதான் இந்த எலிசபெத்; இவர் குறை-பிரசவமாய்தான் பிறக்கிறாராம்; ஜனவரி 25-ல் திருமணம், செப்டம்பர் 7-ல் குழந்தை என்பது குறைப்பிரவம்தான்; (திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகி விட்டதாகப் பேச்சு); எலிசபத் என்ற பெயர் ஏன் வைத்தார் என்றால், அதுதான் 8-ம் ஹென்றியின் அம்மா பெயர்; (அதாவது 7-ம் ஹென்றியின் மனைவியின் பெயர் எலிசபெத் ஆப் யார்க்); எனவே தாயின் நினைவாக தன் மகளுக்கும் எலிசபெத் என்ற பெயரை வைத்தார்;
வாரிசு போட்டி;
இங்கிலாந்து பார்லிமெண்டில் வாரிசு சட்டம் கொண்டு வரப்பட்டது; அது Act of Succession 1533; அதன்படி மூத்த மனைவி காத்தரினின் ஒரே மகள் மேரி சட்டபூர்வ வாரிசு இல்லை என்றார்கள்; மூன்றாவது மனைவி ஆன்னிபோலின் சட்டபூர்வ மனைவி என்றும் அவரின் ஒரே மகள் எலிசபெத் அடுத்த சட்டபூர்வ வாரிசு என்றும் அறிவித்தார்கள்; இதனால் போப் கிளமெண்ட் கோபம் கொண்டு ஹென்றி மன்னரை மதத்தை விட்டு விலக்க ஏற்பாடு செய்தார்; ஹென்றி மன்னரும், மொத்த இங்கிலாந்து சர்சுகளுக்கும் தானே தலைவர் என்றும் அறிவித்துக் கொண்டார்;
ஆண் குழந்தை இல்லை என்பது ஹென்றி மன்னருக்கு வருத்தமே! ஆனாலும், ஆன்னிபோலின், பொய்யாகதான் கருவுற்று இருப்பது போலவும், கரு கலைந்து விட்டது போலவும் நாடகமாடினார் என்று மன்னருக்கு ஒரு சந்தேகமும் உண்டாம்;
1536ல் ஹென்றி மன்னரின் மூத்த மனைவி காத்தரின் இறந்து விட்டார்; ஹென்றிக்கு சந்தோஷமாம்! மூன்றாம் மனைவி ஆன்னிபோலின் உண்மையிலேயே கர்ப்பமாகி விட்டார்; இந்த முறை ஆண் குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் மன்னரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பயந்தார்; மன்னர் குதிரை சவாரி செய்யும் போது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார்; வெளியில் எங்கும் போவதில்லை; அப்பொது ஒரு ஆண்குழந்தை பிறந்து இறந்து விட்டதாகச் சொல்லி விட்டார்கள்;
8-ம் ஹென்றியின் 4ம் மனைவி:
 இதற்கிடையில், மன்னர் ஹென்றிக்கு, ஜேன் செய்மூர் என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது; 3-வது மனைவி ஆன்னிபோலின் அவரின் அண்ணன் ஆகியோரை ராஜதுரோக குற்றம் சுமத்தி அவர்களை தூக்கிலிட்டார்; அதற்குப் பின் இந்த ஜேன் செய்மூர் என்ற பெண்மணியுடன் தொடர்பு அதிகமாகியது; இந்தப் பெண்மணியும் அரண்மனை வேலைக்காரிதான்; திருமணமும் செய்து கொண்டார்;
ஆண் குழந்தை பிறந்தா?
ஆம், ஜேன் செய்மூருக்குத்தான் ஆண் குழந்தை பிறந்தது; அந்தக் குழந்தையின் பெயர் இளவரசர் எட்வர்ட். (Prince Edward); இவர்தான் பின்னர் இங்கிலாந்தின் 6-ம் எட்வர்ட் மன்னர் ஆனவர்;
மகனைப் பெற்ற பிரசவத்தில் தாய் ஜேன்செய்மூர் இறந்து விட்டார்; தாயைப் பறிகொடுத்த மகன் இளவரசர் எட்வர்டு (6-ம் எட்வர்ட் மன்னர்);
8-ம் ஹென்றியின் 5-வது மனைவி காத்தரீன் ஹாவர்டு;
இந்த மனைவி இறந்த சோகம் முடிந்தவுடன் அடுத்த மனைவியை தேடித்திரிந்தார்; இதற்கிடையில் இரண்டாம் வாரிசு சட்டத்தை பார்லிமெண்டில் கொண்டு வந்து, இறந்த ஜேன்செய்மூர் மனைவிக்கு பிறந்த இளவரசர் எட்வர்டு தான் இங்கிலாந்தின் அடுத்த வாரிசு என்று பிரகடனப் படுத்தினார்; அதையடுத்து யார் யார் ராஜ வாரிசு ஆகலாம் என்று "உயில்" எழுதி விட்டார்; அதன்படி, மூத்த மகள் மேரியும், இரண்டாவது மகள் எலிசபெத்தும் சட்டப்படியான வாரிசுகள் இல்லை என்றார்; எனவே அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்றார்; அண்டை நாடுகளின் படையெடுப்புக்கு (பிரான்ஸ், ஜெர்மனி) பயந்தார்; கடல் படையை அதிகப்படுத்தினார்;
ஆனி ஆப் கிளேவ்ஸ் என்ற பெண்மணியை திருமணம் செய்ய 8-ம் ஹென்றி முடிவு செய்தார்; ஆனாலும் மன்னர், காத்தரின் ஹாவர்டு என்ற பெண்ணை காதலிக்க ஆரம்பித்தார்; இவரின் மனைவியான ஆன்னிபோலின் என்பவரின் வேலைக்காரிதான் இந்த காத்தரின் ஹாவர்டு; இவரையே திருமணமும் செய்து கொண்டார்; ஆனால் இந்த காத்தரின் ஹாவர்டு, இதற்கு முன்னர் அரண்மனையில் வேலை செய்த தாமஸ் கல்பெப்பர் என்ற வேறு ஒருவரைக் காதலித்தாராம்; பின்னர் பிரான்ஸிஸ் டெகராம் என்பவருக்கு இந்த பெண்ணை திருமணம் நிச்சயித்திருந்தார்களாம்; அதனால் இருவருக்கும் பழக்க வழக்கமும் உண்டாம்; இதையெல்லாம் தெரிந்த மன்னர் கோபமடைந்து இரண்டு முன்னல் காதலர்களையும் தூக்கிலிட்டு விட்டார்;
8-ம் ஹென்றியின் 6-வது மனைவி காத்தரீன் பார் (பணக்கார விதவை):
அப்போது 8-ம் ஹென்றிக்கு 52 வயது; இந்தப் பெண்மணியான காத்தரீன் பார் மன்னருடன் மதத்தைப் பற்றி மிக அதிகமாகப் பேசி வந்தவர்; இவரே, 8-ம் ஹென்றியின் இரண்டு மகள்களான மேரி, எலிசபெத் இருவருக்குமாக பரிந்து பேசி அவர்களை வாரிசு என மன்னரை ஏற்றுக் கொள்ள வைத்தவர்; அதன்பின்னர்தான், பார்லிமெண்டில், இந்த இரண்டு பெண்களும் வாரிசுகள்தான் என்று (அவரின் மன்னரின் ஆண் வாரிசு எட்வட்டு காலத்துக்குப்பின்னரே வாரிசு என்று) புதுச்சட்டமும் கொண்டு வரப்பட்டது;
8-ம் ஹென்றி இறந்துவிட்டார்;
மன்னர் 55ம் வயதில் (1547ல்) இறந்துவிட்டார்; சர்க்கரை நோய் என்று சொல்கிறார்கள்; இவர் ரோமன் கத்தோலிக்கர்களிடம் கோபம் கொண்டு, அதனால், இங்கிலாந்திலுள்ள எல்லா கத்தோலிக்க மதகுருக்களின் பதவியைப் பறித்துக் கொண்டு அவர்களை விரட்டி விட்டார்; அந்த இடத்தில் இங்கிலாந்து பிஷப்களை நியமித்து விட்டார்; இந்த மன உறுத்தலில்தானோ என்னவோ, சாகும்தருவாயில், மதகுரு! மதகுரு! மதகுரு! என்று மன்னர் தனக்குத்தானே பிதற்றியதாகச் சொல்லப்படுகிறது;
அடுத்த வாரிசு  8-ம் ஹென்றியின் மகன் எட்வர்டு பதவிக்கு வருகிறார்;
8-ம் ஹென்றி இறந்தபின்னர், அவரின் மகன் எட்வர்டு மன்னர் பதவிக்கு வருகிறார் (8-ம் ஹென்றியின் 2-ம் மனைவியான ஜேன் ஜெய்மூருக்கு பிறந்தவர்; இவர் ஒருவரே ஆண்வாரிசு); இவரைத்தான் மன்னர் 6-ம் எட்வர்டு என்று அழைக்கிறார்கள்; அப்போது இவருக்கு 9 வயதுதான் ஆகிறது; இறந்த மன்னர் 8-ம் ஹென்றியின் உயில்படி, அவரின் மகன் தகுந்த வயதான 18 வயது வரும்வரை, 16 நிர்வாக அதிகாரிகள் அரசை நிர்வகித்து வர வேண்டும் என்று அந்த உயிலில் சொல்லப்பட்டுள்ளது; அதில் எட்வர்டின் தாய் மாமனும் ஒருவர்; மன்னர் 6-ம் எட்வர்டுக்கு வாரிசு ஏற்படாமல் போனால், 8-ம் ஹென்றியின் மூத்த மகள் மேரிக்கு அரச பதவி போய்விடும் என்கிறது உயில்; மேரிக்கும் வாரிசு இல்லை என்றால், 8-ம் ஹென்றியின் இரண்டாவது மகள் எலிசபெத்துக்கு அரச பதவி வந்துவிடும் என்கிறது உயில்; எலிசபெத்துக்கும் வாரிசு இல்லை என்றால், 8-ம் ஹென்றி மன்னரின் தங்கை இறந்துவிட்ட மேரியின் வாரிசுகளுக்குப் போகும் என்கிறது உயில் (இவரை பிரான்ஸ் நாட்டில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்); ஆனாலும் 8-ம் ஹென்றியின் மற்றொரு தங்கை மார்க்ரெட் (ஸ்காட்லாந்து நாட்டை ஆள்பவர்) இவருக்கு உயிலில் எந்த அரச பதவியும் கிடையாது என்கிறது; இந்த ஸ்காட்லாந்து பிரிவினரை ஸ்டார்ட்ஸ் (Stuarts) என்கிறார்கள்; (யாருக்கு பதவி போகக்கூடாது என்று உயில் எழுதி வைத்தாரோ, அவர்களுக்கே இங்கிலாந்து அரச பதவி கிடைத்தது வேடிக்கையே; இந்திய நம்பிக்கைப்படி இதையே “விதி” என்பர்; ஆம், எலிசபெத் ராணி திருமணமே செய்து கொள்ளவில்லை; எனவே வேறு வழியில்லாமல் ஸ்காட்லாந்து பிரிவினரான ஸ்டார்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த மார்க்ரெட் வாரிசுகளான 6-ம் ஜேம்ஸ் என்பவர் 1-ம் ஜேம்ஸ் என்ற பெயரில் பின்னர் இங்கிலாந்து மன்னர் ஆகிவிட்டார்);
8-ம் ஹென்றியின் மகன் 6-ம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னர்;
தந்தை இறந்தவுடன் பதவிக்கு வருகிறார்; அப்போது 9 வயது; இவர் தனது 15 வயதில் நோய்வாய்ப் படுகிறார்; காசநோய் என்று சொல்கிறார்கள்; இறக்கும் தருவாயில், தந்தையின் உயிலை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்கிறார்; ஏனென்றால், அடுத்த வாரிசு தந்தையின் மூத்த மகள் மேரி; இவரோ ரோமன் கத்தோலிக்க மதத்தை ஆதரிப்பவர்; எனவே அது நடக்கக் கூடாது என்று நினைக்கிறார்; எனவே இவரின் ஒன்றுவிட்ட சகோதரிகளான மேரியும், எலிசபெத்தும் பதவிக்கு வரக் கூடாது என்று அறிவிக்கிறார்; இவரும் இறந்து விடுகிறார்; பிரச்சனை ஏற்படுகிறது;
8-ம் ஹென்றியின் மூத்த மகள் மேரி ராணி ஆகிறார்: (இங்கிலாந்தின் முதல் ராணி இவர்தான்)
மேரியை பதவிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள்; மேரி கத்தோலிக்க மதத்தை ஆதரிக்கிறார்; இவர் 1-ம் மேரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறார்; தனது 37 வயதில் பதவிக்கு வருகிறார் (1553-ல்); 42 வயது வரைதான் உயிருடன் இருக்கிறார்; தன் தகப்பனார் 8-ம் ஹென்றியின் உயில்படி, தனக்கு ஒரு வாரிசு ஏற்பட்டு விட்டால், புராட்டஸ்டன்ட் தங்கையான (ஒன்றுவிட்ட தங்கை; இருவரின் தாய்களும் வேறு) எலிசபெத்துக்கு அரச பதவி கிடைக்காது என நினைத்து, அவசரமாக திருமணத்துக்கு கணவரைத் தேடுகிறார்; இவரோ ஸ்பெயின் இளவரசரை பிரின்ஸ் பிலிப்பை தேர்ந்தெடுக்கிறார்; ஆனால் இங்கிலாந்து பார்லிமெண்டோ ஒரு ஆங்கிலேயரையே திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்; இதில் உள்நாட்டு கலவரம் நடக்கிறது; தன் ஒன்றுவிட்ட தங்கை எலிசபெத் இதற்கு ஏற்பாடு செய்திருப்பார் என சந்தேகித்து அவரை வீட்டுக் காவலில் வைக்கிறார் ராணி மேரி; ஆக முதன்முதலில் இங்கிலாந்தை ஆண்ட முதல் ராணி இவர்தான்; ராணியே நேரடியாக நாட்டை ஆண்டால், அவரை குயின்-ரெக்னன்ட் (Queen Regnant)என்பர்; ராஜாவுக்கு மட்டும் மனைவியாக இருந்தால் அந்த ராணியை குயின் கன்சார்ட் (Queen Consort) மன்னரின் மனைவி (ராணி இல்லை) என்பர்; இப்போதைய இங்கிலாந்து வழக்கப்படி, ஒரு பெண் தனது கணவரை திருமணம் செய்து கொண்டால், மனைவியின் சொத்தும், பதவியும் கணவருக்கு கிடைக்குமாம்; அதன்படி கணவரையும் அரசராக ஏற்றுக் கொண்டாலும், அவர் ராணியின் சம்மதத்துடன் தான் செயல்பட வேண்டும் என்று பார்லியமெண்ட் சட்டம் இயற்றி உள்ளதால் ராணி மேரியின் கணவர் பிலிப்புக்கு கோபமாம்; இதில் வேடிக்கை என்னவென்றால், பிலிப்புக்கு ஆங்கிலம் தெரியாதாம்; எனவே மனைவியுடன் ஸ்பெயின் நாட்டின் கணவர் ஸ்பேனிஷ், பிரென்ச், லத்தின் ஆகிய மொழிகளைக் கலந்து பேசிவருவாராம்;
மேரிக்கு வாரிசு உண்டா?
திருமணமான ஒருவருடத்தில் ராணி மேரிக்கு (அவரின் 38 வயதில்) மாதவிலக்கு நின்றுவிட்டதாம்; ஆனால் அரண்மனை டாக்டர்கள் இதை கர்ப்பம் என தவறாக நினைத்துக் கொண்டனர்; கணவர் பிலிப், ஒரு தப்புக் கணக்கு போடுகிறார்; ஒருவேளை மனைவி பிரசவத்தில் இறந்து விட்டால், குழந்தையும் இறந்து விட்டால், நமக்கு இந்த மனைவியின் பதவி பறிபோய்விடுமே என்று கருதி, எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டால் நல்லது என நினைக்கிறார்; மேரிக்கு இப்போது குழந்தை பிறக்கும் காலம் என்று ஊரே திருவிழா கோலம்; மாதம் கடக்கிறது, இன்னும் பிறக்க மாட்டேன் என்கிறதே என்று சந்தேகம்; பின்னர்தான் தெரிகிறது அது வெறும் வயிறு, கர்ப்ப வயிறு இல்லை என்று; சோகம்; மறுபடியும் குழந்தை பிறக்கும் என கனவு கண்ட மேரி, அது நிறைவேறாது என தெரிந்தவுடன், தங்கை எலிசபெத்துக்கு பதவி போகும் என கருதினார்; உடல்நிலை மோசமாகி 1558ல் (தனது 42 வயதில்) ராணி மேரி இறந்து விடுகிறார்;
**