Marie
Curie மேரி
க்யூரி
முதல் உலகப்போர்
நடந்து கொண்டிருக்கிறது; நமக்காக வீரர்கள் போர்
புரிகிறார்கள்; நாம் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை
செய்ய வாருங்கள்! வாருங்கள்! என அழைக்கிறார்; யாரும் இவரின்
பேச்சை காதுகொடுத்து கேட்கவில்லை; இவரே எக்ஸ்-ரே கருவிகளுடன்,
மருந்துகளுடன் போர் களத்துக்கே கிளம்பிவிட்டார்; பத்துலட்சம் வீரர்கள்.... மருந்து போதவில்லை....திசுக்களை ஸ்டெர்லைஸ்
செய்வதற்கு நிறமில்லா ரேடியோ ஆக்டிவ் வாயுவான "ரேடான்" என்ற வாயுவை உபயோகிக்கிறார்;
1903ல் ரசாயனத்துக்கான
நோபல் பரிசை வாங்கியவர்; பின்னர் 1911ல்
பௌதீகத்திற்கான நோபல் பரிசை வாங்கியவர்;
போலந்து நாட்டில்
உள்ள வர்ஜாவில் பிறந்தவர்; முழுப்பெயர் Marie
Sklodowska; சொந்த மண்ணில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை; பிரான்ஸ் நாட்டின் பாரிஸூக்கு வருகிறார்; இங்கு பெரி-க்யூரி
(Pierre Curie) என்ற வாலிபரை சந்திக்கிறார்; இவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரே; திருமணம்
செய்து கொள்கின்றனர்; ஆனால் வாழ்வதற்கு நேரமில்லை; எல்லா நேரமும் சோதனைச் சாலையிலேயே வாழ்கின்றனர்; சைக்கிளில்
சுற்றுவது இருவருக்கும் பிடித்த பொழுதுபோக்காம்;
மேரி 1867ல்
பிறந்தவர்; 66 வயது வரை வாழ்ந்தவர்; 1934ல் இறந்தார்;
ரேடியா
ஆக்டிவ்?
ஆணுக்களில்
புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான்
என மூன்று பொருள்கள் உண்டு; இதில் புரோட்டான் எத்தனை
எண்ணிக்கையில் உள்ளதோ அதே எண்ணிக்கையிலேயே நியூட்ரானும் இருக்கும்; இருந்தால்தான் அது நிலையாக இருக்க முடியும்; சில
நேரங்களில், நியூட்ரான் எண்ணிக்கை ஒன்று, இரண்டு அதிகமாக இருக்கும்; இதைத்தான்
"ஐசடோப்" Isotope என்கிறோம்; உதாரணமாக கார்பன் அணுவில் 6 புரோட்டான், 6
நியூட்ரான் மட்டுமே இருக்க வேண்டும்; கார்பனின் அட்டாமிக்
நம்பர் 6 (புரோட்டானின் எண்ணிக்கையே அதன் அட்டாமிக் நம்பர்); ஆனாலும் 6 நியூட்ரான், 7 நியூட்ரான், 8 நியூட்ரான் இருப்பதும் ஆச்சரியமில்லை; இவைகள்தான்
கார்பன் ஐசடோப்கள், கார்பன்-12, கார்பன்-13,
கார்பன்-14; ஐசடோப் என்ற வார்த்தை கிரேக்க
வார்த்தை; ஐசோ என்றால் சமம் என்றும் டோப் என்றால் இருக்கிறது
என்றும் பொருளாம்; இந்தமாதிரி ஐசடோப்புகளில் (அதாவது
கார்பன்-14ல்) ரேடியோ ஆக்டிக் கதிர்வீச்சு வருமாம்; இதுபோன்ற
மற்ற பொருள்கள் ஹீலியம்-3, ஹீலியம்-4, யுரேனியம்-235,
யுரேனியம்-239; ரேடியோ ஆக்டிக் கொடுக்கும்
ஐசடோப்புகளை ரேடியோ-ஐசடோப் (அல்லது ரேடியோ-நியூக்குலாட்ஸ்) என்பர்;
இதுபோல பூமியில்
மொத்தம் 339 நியூக்குலாட்ஸ் இயற்கையாகவே உள்ளன; இந்த சூரிய
உலகம் ஏற்பட்டபோதே அவைகளும் உருவாகினவாம்; சிலவற்றில் வேகமாக
கதிர்வீச்சு இருக்கும்; சிலவற்றில் மெதுவாகவே இருக்கும்;
80 மில்லியன் வருடங்கள் என்றால் எவ்வளவு காலம் என்பதை பார்த்துக்
கொள்ளலாம்; 1913ல் தான் இது நமக்கே தெரியவந்துள்ளது;
இந்த ரேடியோஆக்டிவ்
பொருளிலிருந்து கிளம்பும் ரே என்னும் கதிர்வீச்சானது, கேன்சர் நோயில் உள்ள ட்யூமர் செல்களை வேகமாக அழிக்கும்; பக்கத்தில் உள்ள நல்ல செல்கள் மிக மெதுவாகவே அழிக்கும் தன்மை கொண்டதாம்;
1903ல் பௌதீகத்துக்காக க்யூரி தம்பதிகள் இருவருக்கும் கொடுத்த நோபல்
பரிசைக்கூட வாங்க,ஸ்வீடனுக்கு போகக்கூ முடிய வில்லையாம்,
அவ்வளவு பிஸி!
கணவர் பெரி-க்யூரி
குதிரை வண்டியிலிருந்து விழுந்து அதனால் இறந்துவிட்டார்;
1910ல் ரேடியம், பொலோனியம் என்ற இரண்டு பொருள்களை கண்டுபிடித்ததற்காக இரசாயனத்தில் நோபல்
பரிசு தனியே வாங்கினார் மேரி;
1934ல் இவர்
இறக்கிறார்; அதிகப்படியான ரேடியோ ஆக்டிவ் கதிர்கள் இவர் உடலில் பாய்ந்துள்ளதாம்;
மரியாதை நிமித்தமாக, பாரிஸில் உள்ள கல்லறைக் கட்டிடமான பேந்தியான் (Pantheon) கட்டிடத்தில் இவரின் உடல் பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது; இந்த
கட்டிடத்தில் அடக்கம் செய்யும் 2வது பெருமைமிக்க பெண்மணி இவர்தானாம்!