பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-8 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-8 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மார்ச், 2015

பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-8

பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-8:
மன்னர் பிலிப் மற்றும் ராணி இசபெல்லா இவர்களின் ஒரே மகன்தான் இந்த லூயிஸ்-8; இசபெல்லாவுக்கு 10 வயதில் திருமணம்; 4 வருடங்கள் குழந்தை இல்லை; கணவரான மன்னர் பிலிப், குழந்தை இல்லாத மனைவியை தள்ளி வைத்துவிடலாம் என்று நினைக்கிறார்; இசபெல்லா அங்குள்ள மக்களிடம் சர்ச்சில் சென்று முறையிடுகிறார்; சமாதானம் ஆகிறது; இசபெல்லா தனது 17 வயதில் இந்த லூயிஸ்-8 என்ற ஆண் மகனைப் பெற்றெடுக்கிறார்; அதற்குப் பின், 4 வருடங்கள் கழித்து இரட்டையர் பிறக்கிறார்கள்; அந்த பிரசவத்தில் ராணி இசபெல்லா இறக்கிறார்; அந்த ரெட்டை குழந்தைகளும் 4 வருடங்களில் இறந்துவிடுகிறது; இந்த மூத்த மகன் லூயிஸ்-8 மட்டுமே அரச வாரிசாக இருக்கிறார்; இவர் 1187ல் பிறந்து 40 வருடங்கள் உயிர் வாழ்கிறார்; பிரான்ஸ் நாட்டுக்கு மன்னன் ஆகிறார்; தனது 36 வயதில்தான் மன்னர் ஆகிறார்; பரிதாபம்! 3 வருடங்கள் மட்டுமே மன்னராக இருக்கிறார்; ஆனாலும் தந்தை மன்னராக இருக்கும்போது, சுறுசுறுப்பான தளபதியாகவே இருக்கிறார்; இவரை அப்போது "சிங்கம்" என்றே அழைப்பர்; இவர் இளவரசராக இருந்தபோது, இங்கிலாந்தின் ஒரு பகுதியை போரிட்டு வென்றார்; அந்த தெற்கு இங்கிலாந்து பகுதிக்கு இவர் அரசர் ஆனார். தனது 40 வயதில் இறந்து விட்டார்; இவருக்குப் பின்னர் இவரின் மகன் லூயிஸ்-9 என்ற பட்டத்துடன் பிரான்ஸ் நாட்டுக்கு அரசன் ஆனார்;
லூயிஸ்-8 மன்னருக்கு "சிங்கம்" என்று பட்டப் பெயர் உண்டு; இவரின் 8 வயதில் இவருக்கு திருமணம்; இங்கிலாந்தில் உள்ள பிரிட்டினி இளவரசி எலனார் (Eleanor of Brittany) என்பவரை திருமணம் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது; இவரே பிரிட்டானி தேசத்தின் பேரழகி! 11 வயதான இவருக்கும், பிரான்ஸ் நாட்டு இளவரசர் லூயிஸ்-8க்கும் திருமணத்துக்கு ஏற்பாடு மட்டும் நடக்கிறது; லூயிஸ்க்கு 9 வயதுதான்;
பிரிட்னி இளவரசி எலனார், பிரிட்னியின் டியூக் (Duke) ஜாப்ரே-2 (Geoffrey-II) மன்னரின் மூத்தமகள்; இந்த இளவரசி தனது 2-வது வயதில் தகப்பனை பறிகொடுத்தவர்; இவரின் மாமா ரிச்சர்ட்தான் இவரை வளர்த்தார்; ஆனால் இந்த திருமணம் நடக்கவில்லை; பேச்சுவார்த்தையிலேயே நின்றுவிட்டது;
இதற்கிடையில் இளவரசர் லூயிஸின் 12 வயதில், இளவரசி பிளான்ச் (Blanche of Castile) க்கும் திருமணம் நடந்து விட்டது;
லூயிஸ்-8 பிரான்ஸின் மன்னராக 1223ல் பதவி ஏற்கிறார்; இவருக்கு யூதர்கள் மீது ஏதோ கோபம்போல! எந்தக் கிறிஸ்தவரும் வட்டிக்கு கடன் கொடுப்பது பாவம் என்று சொல்கிறார்; யூதர்களின் வட்டிக் கணக்கை பதிவு செய்ய வேண்டாம் என்றும் சொல்கிறார்;
குறைந்த வருடமே ஆட்சி செய்கிறார்; இவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறக்கிறார்;
இவருக்கும் இவரின் ராணியான பிளான்ச்க்கும் மிக அதிகமான குழந்தைகள் பிறந்ததாம்