திருமங்கையாழ்வார்:
திருமங்கையாழ்வார், கலியுகம் 460 க்கு முன்னர்
திருநகரியிலே நீலனென்னும் ஒரு சூத்திரனுக்கு மகனாகப் பிறந்தவர்.
பின்னர் இவரே ஸ்ரீரங்கத்துக் கோபுர திருப்பணி செய்த
விஷ்ணு பக்தர்.
இவரின் பத்தினி குமுதவல்லி.
திருமங்கையாழ்வார் இவ்வாறு விஷ்ணு பக்தர் ஆவதற்கு
முன்னர் பெரிய கள்வர்.
துறவு பூண்டபின் ஆழ்வார் பன்னிருவருள் இவரே
சிறந்தவர்.
நாலாயிரப் பிரபந்தத்துள் பெரிய திருமொழி இவர்
திருவாய் மலர்ந்த “தேன்பாமாலை” ஆகும்.