திங்கள், 2 மார்ச், 2015

சிதம்பரம்

சிதம்பரம்:

இது சிவபிரான் ஆகாய லிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவஸ்தலம். இங்கேயுள்ள கனக சபையிலே சிவபெருமான் பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு ஆனந்த தாண்டவம் செய்தருளுவார். 

மாணிக்கவாசக சுவாமிகளும் திருநாளைப் போவாரும் இன்னும் எண்ணிறந்த சிவபக்தர்களும் முக்திபெற்ற ஸ்தலம் இதுவே. 

இந்த சிவஸ்தலம் பிரம்மம் முதல் பிருதுவி ஈறாக உள்ள தத்துவங்களை யெல்லாம் குறிப்பாகக் காட்டுவது.

திருவண்ணாமலை

திருஅண்ணாமலை:
திருவண்ணாமலை
பிரம்மா, விஷ்ணு இவர்களுக்கு ஜோதி பிழம்பாக (ஒளி பிழம்பாக) நின்று சிவன் தரிசனம் கொடுத்த இடம் இந்த திருவண்ணாமலை.
இங்குள்ள லிங்கத்திற்குப் பெயர் ‘தேயு லிங்கம்’. இந்த திருவண்ணாமலை நடுநாட்டிலுள்ளது. அதி பிரபலமான சிவஸ்தலம்.
மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும், திருவம்மானையும், பாடியது இந்த திருவண்ணாமலையில்தான்.
இந்த இடம் சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்ட இடம்.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பிறந்த இடமும் இதுவே.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தனம் தரும் கல்வி தரும்

தனம் தரும் கல்வி தரும் 
ஒருநாளும் தளர் வறியா மனம் தரும் 
தெய்வ வடிவுதரும் 
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் 
நல்லன எல்லாம் தரும் 
அன்பரென்பவருக்கே கனம் தரும் 
பூங்குழலால் அங்காள பரமேஸ்வரி கடைக் கண்களே!

ஆறிந்தடந்தோள் வாழ்க!

ஆறிந்தடந்தோள் வாழ்க!
ஆறுமுகம் வாழ்க வெற்பை
கூறிசை தணிகைவேல் வாழ்க!
குக்குடன் வாழ்க செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க!
ஆனைதன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க!
வாழ்கசீர் அடியார் எல்லாம்!

ஐந்து கரத்தனை

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகந்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடிப் போற்றுகின்றேனே!


திங்கள், 2 பிப்ரவரி, 2015

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்!

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்!
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்!
ருத்ரஸ்ய ஸூனும் ஸூரஸன்ய நாதம்!
குதம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

(சிவந்த நிறம், அறிவில் சிறந்த, தெய்வீக மயிலில் வலம் வரும், தேவர்களின் படைத் தலைவனான ஆறுமுகப் பெருமானே, உன்னைச் சரணடைகிறேன்.)


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மீன் எதனால் உயிர் இழக்கும்?

மீன் எதனால் உயிர் இழக்கும்?

"சுவையின்மீனளிநாற்றத்திற்றும்பியே பரிசந்தன்னில்
நவையிலாவசுணந்தானே நல்லிசை தனிற்பதங்கம்
உவகையாமொளியை வேட்டேயுயிரினை யிழக்குமைந்தாம்
இவையெலாமுடையோர் தம்பாலா ருயிரழந்திடாதார்."

மீன் தன் சுவையினால் உயிர் இழந்துவிடும்;
வண்டு நாற்றத்தினால் உயிர் இழந்துவிடும்;
தும்பி தொடுவதால் உயிர் இழந்துவிடும்;
அசுணமா(?) இசையினால் உயிர் இழந்துவிடும்;
விட்டில்பூச்சி ஒளியினால் உயிர் இழந்துவிடும்;

இவை எல்லாச் சுவைகளையும் உடையவர் (விரும்புபவர்) உயிர்இழப்பது உறுதிதானே!

ஐம்புலன்களையும் அடக்கவேண்டுமாம்!