வில்சன் கோட்பாடு Wilson Doctrine
இங்கிலாந்து பார்லிமெண்டில் இந்த வில்சன் கோட்பாடு
பின்பற்றப்படுகிறுது. இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசும் எம்.பி.யின் பேச்சை
வைத்து அவரை வேவு பார்க்க கூடாது என்பதே இந்த வில்சன் கோட்பாடு. எம்.பி-க்கு
எங்கிருந்தாவது ஒரு தகவல் வரும். அதைக் கொண்டு, அந்த எம்.பி., பார்லிமெண்டில் அந்த
தகவலைத் தெரிவிப்பார். அதற்காக, அவரின் டெலிபோனை கண்காணித்து அவர் யாரிடம்,
எங்கிருந்து, எந்த முறையில், அந்த தகவலைப் பெற்றார் அல்லது பெறுகிறார் என வேவு பார்க்க
கூடாதாம்.
இந்த வில்சன் கோட்பாடானது, Harold Wilson ஹரால்டு
வில்சன் அவர்கள் இங்கிலாந்தில் 1966-ல் பிரதம மந்திரியாக இருந்தபோது,
கொண்டுவரப்பட்ட கொள்கை என்பதால், அவர் பெயரை வைத்தே வில்சன் கொள்கை அல்லது வில்சன்
கோட்பாடு Wilson Doctrine என்று அழைக்க ஆரம்பித்தனராம்.
அப்போது (1966ல்) இருந்த எம்.பி.க்கள் ஒரு புகாரை செய்தனர். “நாங்கள்
பேசும் விபரங்களை சேகரிக்க, எங்களின் டெலிபோனை, அரசின் ரகசியப் பிரிவு
ஒட்டுக்கேட்க ஆரம்பித்து விட்டது” என்று புகார். ஆனால், அப்போதைய பிரதமர் ஹரால்டு
வில்சன், “அப்படிபட்ட விபரங்களை சேகரிக்கக் கூடாது” என்று இரகசிய போலிஸுக்கு
உத்தரவு பிறப்பிக்கிறார். அதுமுதல் இதற்கு “வில்சன் கோட்பாடு” என்று பெயர்.
இப்போது இந்த பிரச்சனை வேறு உருவத்தில் வருகிறது. 2104 முதல்
இதைப்பற்றி கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்படுகின்றன. வில்சன் கொள்கை என்பது 100%
தடுக்கப்பட்ட கொள்கை அல்ல என்றும், ஒரு அளவுக்கு மட்டுமே அதை கடைப்பிடிக்க
முடியும் என்றும் அரசு கூறுகிறது. இதற்கு எந்த சட்டமும் அங்கீகாரம் அளிக்கவில்லை
என்கிறது அரசு. எனவே இதற்கு ஒரு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என அரசு
நினைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக