ஞாயிறு, 3 மே, 2015

இளவரசி கான்ஸ்டான்ஸ் விடை பெறுகிறாள்

The Man of Law's Tale:
சிரியா நாடு; ஒருகாலத்தில் பெரும் பணக்கார வியாபாரிகள் வசித்த நாடு; அங்குள்ள பொருள்களையும் விலையுயர்ந்த துணிகளையும் உலகின் மற்ற நாடுகளுக்கு கப்பல்மூலம் அனுப்பி செல்வச் செழிப்பில் சிரியா நாடு கொழித்தது. சிரியா நாட்டின் பல வியாபாரிகள் வியாபாரத்தை விரிவாக்க ரோம் நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தனர்; ரோம் நாட்டுக்கு வியாபாரத்தை பெருக்க போகிறார்களோ அல்லது மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை; வியாபாரிகள் ஆர்வமாக ஆயத்தமானர்கள்;

ரோம் நாடு சென்ற சிரியா நாட்டு வியாபாரிகள் சுற்றித் திரிந்தார்கள்; அங்குள்ள பேரரசரின் மகள் ஒன்று இருப்பதாக பேசிக் கொண்டார்கள்; அவள் மிக அழகாம்; இந்த உலகம் உருவான காலத்திலிருந்து இதுவரை யாருமே அப்படிப்பட்ட அழகை பார்த்திருக்கவே முடியாதாம்! எல்லாருடைய ஏகோபித்த முடிவும் அதுதானாம். This was the considered judgment of all. அழகாகவும் இருந்து, அமைதியாகவும் இருப்பவள்; இளமையாகவும் இருந்து அறிவு முதிர்ச்சியாகவும் இருப்பவள்; இப்படி பொருத்தமாக இருப்பதே அரிதாம்; மற்றவர்களின் பேச்சை காதுகொடுத்து பொறுமையாக கேட்பவளாகவும் இருக்கிறாள்; அது இதைவிட அரிது; கண்ணியத்தை பிரதிபிம்பமாக வைத்திருப்பவள்; இவ்வளவு பெருமைகளை உடையவளை கடவுளே நீயே காப்பாற்றி வைக்க வேண்டும் என்று ரோம் நாட்டு மக்கள் தினமும் வேண்டிக் கொள்கின்றனராம்; May God keep her and protect her!" they all cried. இவையெல்லாம் சத்தியமான உண்மைகளே!

ரோம் நகர் போன வியாபாரிகள் சரக்குகளை வாங்கி கப்பலில் ஏற்றிவிட்டனர்; கப்பல் நிறைந்து விட்டது; கப்பல் சிரியா நாடு நோக்கி மிதக்கிறது; இந்த சிரியா நாட்டு வியாபாரிகள் பெரும் பணக்காரர்கள்; எனவே எப்போது வெளிநாட்டுக்கு வியாபாரத்துக்குச் சென்றாலும் சிரியா மன்னரான சுல்தானிடம் சொல்லிவிட்டே செல்வர்; அதேபோல, நாடு திரும்பியவுடன் மன்னர் சுல்தானைப் பார்த்து அந்த நாட்டு சிறப்புகளையும், வியாபாரம், அந்நாட்டு விபரங்களையும் மன்னரிடம் சொல்வர். சுல்தானும் மிகவும் ஆர்வமாக வெளிநாட்டுக் கதையை கேட்பார்; வியாபாரிகள் சிரியா நாடு திரும்பியவுடன் சுல்தானை சென்று பார்க்கிறார்கள்; அரண்மனையில் பெரிய விருந்து நடக்கிறது; அப்போது நடந்த பேச்சில் ரோம் நகரத்து பேரழகி "கான்ஸ்டான்ஸ்" (Constance) பற்றி மெதுவாக சுல்தானிடம் தெரிவிக்கிறார்கள்; அவள் அழகை வர்ணிக்கிறார்கள்; அவள் குணத்தை வர்ணிக்கிறார்கள்; அவள் பண்பை வர்ணிக்கிறார்கள்; சுல்தானுக்கோ ஆசை உச்சத்துக்கே போகிறது; எப்படியும் அந்த இளவரசியை தான் அடைந்துவிடவேண்டும்; காதலுக்காகவே சுல்தான் இறப்பதற்குகூட தயாராவார் போல! Sultan would die through love.

சுல்தான் தயாராகிவிட்டார்; தனது மந்திரிகளை ரோமுக்கு அனுப்பினார்; "எங்கள் சுல்தான், உங்கள் இளவரசி மீது தீராத காதல் கொண்டுவிட்டார்; அவர் காதல் தீயை அணைக்கவில்லை என்றால், அவர் அந்த தீயிலேயே உயிரை விடுவார் போலத் தெரிகிறது; எனவே இளவரசியை எப்படியாகவது எங்கள் சுல்தானுக்கு மணமகளாகக்  கொடுங்கள்" என்று மந்திரிகள் கெஞ்சுகிறார்கள்;

ரோம் நாட்டு சக்கரவர்த்தியோ கிறிஸ்தவர்; சிரியா நாட்டு மன்னரோ முஸ்லீம்; எப்படி சாத்தியப்படும்? எப்படி, கிறிஸ்தவப் பெண்ணை ஒரு முஸ்லீம் மன்னருக்கு கொடுப்பது? நடக்கிற காரியமா? மணமகன் வீட்டு வழக்கப்படிதானே திருமணமும் நடக்கும்; அப்படியென்றால், எங்கள் வீட்டு கிறிஸ்தவ பெண்ணை, முஸ்லீம் முறைப்படி சுல்தான் மணப்பாரே?

"என்னால், இவ்வளவு பேரழகுள்ள இளவரசியை மணக்காமல் இருக்க முடியாது; அதற்காக எதையும் துறக்க தயார்; என்ன, மதம் தானே பிரச்சனை? முஸ்லீமான நானே கிறிஸ்தவனாகிறேன்; பிரச்சனை தீர்த்துவிடும் அல்லவா?" சுல்தான் முடிவுக்கே வந்துவிட்டார்; "Rather than lose all hope of gaining Constance as my wife, I shall be christened. I must have her! I have no other choice!" எவ்வளவு உறுதியான வார்த்தைகள்!

உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாயின; மந்திரிகள் பறந்தார்கள்; போப் சமரசம் ஆனார்; சுல்தான் முஸ்லமான் அல்ல, கிறிஸ்தவர் ஆனார்; அதுமட்டுமா, மொத்த சிரியா நாட்டையே கிறிஸ்தவ நாடு என்று உத்தரவு போட்டு விட்டார்; அப்பாடி! ஏன், சுல்தானுக்காக நாட்டு மக்கள் மாறக்கூடாதா? இனி சிரியாவும் கிறிஸ்தவ நாடுதான்;
பேரழகி கான்ஸ்டான்ஸ் இனி எனக்குத்தான்! தங்ககட்டிகளை ரோம் நாட்டுக்கு அனுப்பிவிட்டார் சுல்தான்; நிச்சயதார்தம் முடிந்து விட்டது; Now, fair Constance - may God guide you!

ரோமாபுரி விழாக்கோலம் பூண்டுவிட்டது; மகளை சிரியா நாட்டுக்கு மணமகளாக அனுப்பப் போகிறார்; வார்த்தைகளில் சொல்ல முடியாது; நாடே விழாக்கோலம் போங்கள்! இளவரசி பிரயாணத்துக்கு கப்பல் தயாராகி விட்டது; துணைக்கு செல்வோர் தயாராகின்றனர்; பிஷப்புகள் தயாராகின்றனர்; தோழிப் பெண்கள், வேலைக்காரிகள், தளபதி, பாதுகாப்பு வீரர்கள், சமையல்காரர்கள், கப்பல் வேலையாட்கள், மொத்தமும் தயார்; கப்பல் சைரன் ஒலிக்கிறது; நாட்டு மக்களே குவிந்து விட்டனர்; மொத்த ரோமாபுரி மக்களும் ஜீசஸ் கிறிஸ்துவிடம் மனமார வேண்டும்படி கேட்டுக் கொள்கிறார்கள். "எங்கள் இளவரசியின் திருமணம் நல்லபடியாக நடக்கவும், பிரயாணம் பாதுகாப்பாக இருக்கவும் அருள்புரிய வேண்டும் இறைவனே!" என்று எல்லோர் மனமும் வேண்டுகிறது; Everybody in Rome was asked to pray to Christ that he should look favourably upon this marriage and give his blessing to the voyage.

கப்பல் நகருகிறது; இளவரசி வெளிநாட்டுக்கு மணமகளாகப் போவதால் அழுவாரோ? தாய், தந்தை, நட்புகள் இவற்றை பிரிவதால் வருந்துவாரோ? எங்களுக்காக (மக்களுக்காக) எங்களின் பாவத்துக்காக சிலுவையில் உயிர் நீத்த எங்களின் பிதாவே எங்கள் இளவரசியின் கண்ணீரை போக்கும்! பெண்களே, ஆண்களுக்கு சேவை செய்யதற்காகவே படைத்தீரோ? எப்போதும் ஆண்களின் ஆளுமையிலேயே பெண்களை வைத்திருக்கிறீரே?

ஆனால், இளவரசி கான்ஸ்டான்ஸ் முகத்தில் எந்த வருத்தமும் இல்லை; அழுகையும் இல்லை; அவள் அழுதாலும், சிரித்தாலும் சிரியாவுக்கு சென்றே ஆகவேண்டும் என்று அவளுக்குத் தெரியும்போல! எல்லா கணவர்மார்களும் நல்லவர்களே; நல்லவர்களாகவே எப்போதும் இருப்பார்கள்; அப்படித்தான் எல்லா மனைவிகளும் நினைத்து வருகிறார்கள்; அதற்குமேல் எனக்குச் சொல்லத் தெரியவில்லை; All husbands are good and always have been, as every wife knows! I shall say no more.

"அப்பா!..... அம்மா! ......  நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். ஜீசஸ் கிறிஸ்து என்னை காப்பாற்றுவார்; உங்கள் மகள் கான்ஸ்டான்ஸ்க்கு உங்களின் ஆசீர்வாதத்தை அளியுங்கள்; நான் சீக்கிரம் சிரியா நாடு சென்று விடுவேன்; மறுபடியும் உங்களை எப்போது பார்ப்பேன் என்றே எனக்குத் தெரியவில்லை; நமக்காக உயிர் தியாகம் செய்த ஜீசஸ் கிறிஸ்து எனக்காகவும் ஆசிவழங்குவார்; நான் பரிதாபத்துக்குறிய ஒரு பெண்தானே! 
இதுவரை கேட்காத அழுகைகள்...........

புத்திகெட்ட ரோமானிய சக்கரவர்த்தியே! கடவுளே! ஒரு ஜோதிடன் கூட இந்த ரோமாபுரியில் இல்லாமலா போய்விட்டான்? அவள் வாழ்வைக் கணித்துச் சொல்ல! கிழக்கிலிருந்து மேற்காக மறுபடியும் மறுபடியும் சுத்திக் கொண்டிருக்கும் கிரகங்களே உங்களுக்குக் கூடத் தெரியாதா, நல்ல நேரம் எதுவென்று? எல்லா நேரமும் நல்ல நேரமாகவே இருந்துவிட முடியாதே? கடவுளே! நாங்கள் எல்லோருமே இவ்வளவு அப்பாவிகளாகவும் முட்டாள்களாகவும் இருந்திருக்கிறோமே?

இளவரசி கான்ஸ்டான்ஸ் விடை பெறுகிறாள்; "எப்போதும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! போய்வருகிறேன் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை" என்று விடைபெறுகிறாள்; "போய்வா அழகிய மகளே;" ஆராவாரம்!

இந்தக் கதையானது The Man of Law's Tale ன் ஒரு பகுதி மட்டுமே இது...
இதை சுமார் 800 வருடங்களுக்கு முன் ஜான் பெய்னி John Payne என்பவர் எழுதியுள்ளார். இது பெரிய கதைத் தொகுப்பு; இதை கான்டர்பரி கதைகள் என்பர் The Canterbury Tales. அறிவு பூர்வமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

நன்றி; கான்டர்பரி கதைகள் தொகுப்பு.

Sir Richard Francis Burton

Sir Richard Francis Burton
ரிச்சர்டு பிரான்சிஸ் பர்ட்டன் இங்கிலாந்து அரசில் பல வேலைகள் செய்தவர். நாடு சுற்றுவதில் மன்னர். 30 மொழிகள் இவருக்கு அத்துபடியாம். அந்தந்த ஊர்காரரைப் போலவே அவர்களின் மொழியைப் பேசுவாராம். அந்தந்த ஊர் பழக்க வழக்கமும் அத்துபடியாம். இவர் கிறிஸ்தவர். எனவே மெக்காவுக்குள் இவரால் நுழைய முடியாது. ஆனாலும் அரேபிய மொழியைக் கற்றுக் கொண்டு, முஸ்லீம் தொழுகையையும் அப்படியே கற்றுக் கொண்டு மெக்காவுக்கே போய்விட்டு வந்தவராம். வழியில் எவராவது சந்தேகப்பட்டு நம்மை சோதித்துப் பார்க்கக்கூடும் என்று நினைத்து, இவர் "சுன்னத்தும்" செய்து கொண்டாராம். ஒரு உண்மையான முஸ்லீமைப் போலவே தொழுவதும், நடை உடை பாவனையும், அரபுமொழிப் பேச்சும் இவரிடம் இருந்ததாம். இதுபோல இவரின் வாழ்க்கையில் நிறைய வீரதீரச் செயல்களை செய்தவர் இவர்.

இவருக்குத்தான் எல்லா மொழியும் தெரியுமே! எனவே ஆரேபியக் கதைகளான ஆயிரத்து ஒரு இரவுகள் என்ற கதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே! இவருக்கு முன்னர் பிரென்ஞ் மொழியில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இவர் காமசூத்ரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கைப்பிரதியாக வைத்திருந்தார். இவர் இறந்தவுடன், இவரின் மனைவி அவைகளை கிழித்துப் போட்டுவிட்டாராம்.

பர்ட்டன், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியில் இந்திய ஆர்மியில் கேப்டனாக இருந்தவர். கிரிமியான் யுத்தத்திலும் கலந்து கொண்டவர். ஆள் ஒல்லியாக இருந்தாலும் வீரத்திலும் அறிவிலும் சிறந்தவர். இவரின் சின்ன வயதில், ஒரு ரோமா என்னும் ஜிப்ஸி பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருப்பாராம். அவளின் மொழியை அத்துபடியாக கற்றுக் கொண்டுள்ளார். இவர் மாதிரி அந்த ரோமானி மொழியை யாருமே அப்படிப் பேசிவிட முடியாதாம். இந்தியாவில் இராணுவத்தில் இருக்கும்போது பம்பாய் குஜராத்தில் இருந்தாராம். இங்கு ஹிந்துஸ்தானி, குஜராத்தி, பஞ்சாபி, சிந்தி, சராய்கி, மராத்தி, பெர்ஷியன், அராபிக், ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளையும் சரளமாக கற்றுக் கொண்டாராம். இங்கு அவரின் இந்து ஆசிரியரிடம் அனுமதி பெற்று பூணூலும் போட்டுக் கொண்டாராம். (Janeu = Brahminicla Thread); இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ராணுவத்தில் இருக்கும்போது பக்கத்தில் பல குரங்குகளை வைத்து அதனுடன் பழகுவாராம். அவை என்ன மொழி பேசிக் கொள்கின்றன என உன்னிப்பாக கவனிப்பாராம். இவர் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறையுடன் ஒட்டி வாழ்வதால், இவரின் நண்பர்கள் இவரை "White Nigger" வெள்ளைக்கார கறுப்பன் என்று கோபமாகத் திட்டியும் இருக்கிறார்களாம்.

"நாம் எவ்வளவோ மதநூல்களைப் படித்தபோதிலும், கடைசியில் நாம் கடவுளை வணங்குவதை விட்டு, நம்மையே நாம் வணங்கும் உண்மையைத் தெரிந்து கொள்வோம்" என்கிறார்.

வாழ்வின் தத்துவமாக Happiness and Misery are eqully divided and distributed in the world. இந்த உலகத்தில் மகிழ்ச்சியும் துயரமும் சரிபாதியாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது, என்கிறார்.

நம் நண்பர்களையே வருடங்கள் கழித்து பார்த்தால், அவர்கள் அதேபோல இருக்கமாட்டார்கள், மாறியே இருப்பார்கள், காலம் நம்மை மாற்றித்தான் இருக்கும், என்கிறார்.
Yet ne'er the self-same men shall meet; the years shall make us other men.

 *

அரேபிய அழகி ஷெகராஷட் (Sheherazade)


அரேபிய அழகி ஷெகராஷட் (Sheherazade or Sheharazad) அந்நாட்டு மன்னருக்கு கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். இதுவே அவளின் முதல் இரவின் முதல் கதை; ஆயிரத்து ஒரு இரவுகளில் இதுவே முதல் இரவு;
மன்னரின் முன்னாள் மனைவி இவருக்கு துரோகம் செய்து விட்டாள்; அவளைக் கொன்று விட்டார்; அதிலிருந்து மன்னருக்கு, எந்தப் பெண்ணின்மீதும் சந்தேகம்தான்; எல்லாப் பெண்களுமே மோசமானவர்கள் என்று நினைக்கிறார்; இவர்களை பழிவாங்க வேண்டும் என்றும் வெறி; மந்திரியிடம் சொல்லி, தினமும் ஒரு பெண்ணை அந்தப்புரத்துக்கு வரவழைப்பார்; உல்லாசமாக இருப்பார்; விடியற்காலையில் அவளைக் கொன்றுவிடுவார்; மறுநாள் வேறு ஒரு பெண்ணை வரவழைப்பார்; உல்லாசம், கொலை; இப்படியாகத் தினமும் நடந்து கொண்டிருக்கிறது; எத்தனை நாளைக்குத்தான் மந்திரி இளம் பெண்களை அழைத்துவருவார்? அங்கு பெண்களே கிடைக்கவில்லை; கவலையில் இருக்கிறார். அவரின் மகள் ஷெகராஷட் பேரழகி, இளம் பெண், மிகச்சிறந்த அறிவாளி, தெய்வபக்தி மிகுந்தவள்; உலக அறிவு, தத்துவம் தெரிந்தவள்; தன் தந்தையிடம், இன்று இரவு அந்தப்புரத்துக்கு தானே செல்வதாகச் சொல்கிறாள்; மந்திரி, தன் மகளை அனுப்ப சம்மதிக்கவில்லை; ஒருவழியாக தந்தையை சமாதானம் செய்து அரசனின் அந்தப்புரம் செல்கிறாள்;

அந்த இரவில், ஷெகராஷட், தன் புத்திசாலித்தனத்தால், மன்னரை தன்னிடம் நெருங்க விடாமல், தான் ஒரு கதை சொல்வதாகவும் அதை கேட்டுவிட்டு காதல் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கிறாள்; மன்னரும், விடியற்காலையில்தானே அவளை கொல்லப் போகிறோம் என நினைத்துக் கொண்டு, கதையைச் சொல் கேட்கிறேன் என்கிறார்; அவளும் தன் முதல் கதையை முதல் இரவில் ஆரம்பிக்கிறாள்;

"மகிழ்ச்சிக்குறிய மன்னரே கேளும்! ஒரு வியாபாரி பணத்தில் கொழித்துக் கொண்டிருந்தான்; எல்லா நாடுகளிலும் அவனின் வியாபாரம் உண்டு; ஒருமுறை, தன் குதிரைமீதேறி பக்கத்து நாடுக்கு செல்கிறான்; அவனின் வியாபார பாக்கியை வசூலிக்கச் செல்கிறான்; போகும்வழியில் கொளுத்தும் வெயில்; ஒரு தோட்டத்தில் உள்ள மரத்தில் இளைப்பாறுகிறான்; பசிக்கு, தன்னிடமிருந்த ரொட்டியையும் பேரீச்சம்பழத்தையும் சாப்பிடுகிறான்; பேரீச்சம்பழத்தின் கொட்டையை தூக்கி எறிகிறான்; அப்போது ஒரு 'அதிபயங்கர பேய் மனிதன்' மிகப்பெரிய உருவத்தில் வந்து முன்னே நிற்கிறான்ஒரு பெரிய வாளைக் கையில் வைத்திருக்கிறான்; 'எழுந்திரு, நீதானே என் மகனைக் கொன்றவன்; நான் உன்னைக் கொல்லப்போகிறேன்' என்றது; 'ஐயோ! நான் எப்படி உன் மகனைக் கொல்ல முடியும்?' என்று பயந்து கொண்டே கேட்கிறான் வியாபாரி; "நீ தின்றுவிட்டு எறிந்தாயே ஒரு பேரிச்சம்பழக் கொட்டையை, அது என் மகனின் நெஞ்சில் டமால் என்று விழுந்து அந்த வேகத்தில் என மகன் உன்னால் இறந்துவிட்டான், அவனின் சாவை நீயே முடிவு செய்தாய்" என்று கர்சித்தது அந்த பேய்மனிதன். "ஐயோ! எனக்கு அவ்வளவு சக்தியை கடவுள் கொடுக்கவில்லையே! அப்படியே நான் வீசியதால் இறந்திருந்தாலும் அது நான் வேண்டுமேன்றே செய்யவும் இல்லையே! நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள்; ஜின்னி என்ற அந்த பேய்மனிதன், "சாவு எல்லோருக்கும் வருவதுதான்; ஆனால் நீ என் மகனை கொன்றுவிட்டாய்" என்று கத்திக் கொண்டு அவனை இழுத்து எறிந்து கத்தியை அவன்மேல் ஓங்கியது; அவன் அலறிக் கொண்டு கடவுளே! என்று கத்தி இப்படி கதறுகிறான்;

"காலம் இரண்டு வகை, ஒன்று பிரகாசமானது, மற்றொன்று இருளானது:
வாழ்க்கை இரண்டு வகை, ஒன்று வசதியும் பாதுகாப்புமானது, மற்றொன்று பயம்;
வாழ்க்கையில் வசதிகள் வருவதை யார் தடுக்க முடியும்? பரம ஏழையாக்கி வேடிக்கை பார்ப்பதையும் யார் தடுத்துவிட முடியும்?
கடலில் முத்துக்கள் அடி ஆழத்தில் கிடைக்கும்; ஆனால் செத்த பிணம் மேலே மிதக்கும்;
காலம் நம்மிடம் விளையாடுகிறது; துரதிஷ்டமானது நீண்ட நேரம் நம்மை முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறது;
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முடியாது; ஆனால் இவை எதுவும் சூரியனையோ சந்திரனையோ மறைத்து கிரகணத்தை உண்டாக்க முடியாது;
இந்த பூமியில் எத்தனை எத்தனை பசுமையான மரங்கள் காய்ந்துபோன மரங்கள் உள்ளன; இவைகள் கல்லால் அடித்து பழம் பழுக்க வைக்க முடியாது;
நல்ல காலத்தில் நல்லது நடக்கும்; துரதிஷ்டமான நேரத்தில் கெட்டவைகள் நடப்பது என்பது நம் தலையெழுத்தே!' என்று புலம்புகிறான்;
"நீ சொன்னதுபோலவேதான், உனக்கு இப்போது என் கையால் சாவும் வருகிறது"  என்று ஜின்னி முரடன் சொன்னான்;

"முரடனே! நான் கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் உள்ளன; எனக்கு நிறைய சொத்துக்களும் உள்ளன; மனைவி, குழந்தைகளும் உள்ளனர்; வேறு பலரின் சொத்துக்களும் என்னிடம் அடமானமாக உள்ளன; எனவே என்னை இப்போது விட்டுவிட்டால், நான் என் ஊருக்குச் சென்று, கொடுக்க வேண்டியவர்களின் பொருள்களை எல்லாம் அவரவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன்; பின்னர் உன்னிடமே திரும்பி வந்துவிடுவேன்; அப்போது நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; கடவுளை இதற்கு சாட்சியாக வைக்கிறேன்; இதைக் கேட்ட ஜின்னி முரடன், ஒருவருடம் கால அவகாசம் கொடுத்து வியாபாரியை அவன் ஊருக்கு அனுப்பி வைக்கிறான்;

வியாபாரி தன் ஊருக்கு வருகிறான்; தன் மனைவி மக்களிடம் நடந்ததை கூறுகிறான்; அவரவர் பொருள்களை அவரவர்களிடம் ஒப்படைக்கிறான்; வீட்டில் உள்ளவர்கள் அழுகிறார்கள்; தன் குழந்தைகளுக்கு கார்டியனை நியமிக்கிறான்; அந்த ஒருவருட காலம் வரை வசிக்கிறான்; கடைசி நாளில், தன் கடைசி துணியை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு செல்கிறான்; எல்லோரும் அவனையே அழுகையுடன் பார்க்கிறார்கள்; நேராக இந்த ஜின்னி முரடனைச் சந்தித்த அந்த தோட்டத்துக்கு வருகிறான்; ஒருவருடம் முடிந்து அடுத்த வருடத்தின் துவக்க நாள் அது; தனக்கு இப்படி ஒரு முடிவு வந்ததையும், கழுத்தில் காலன் கயிறு போட்டு இழுப்பதையும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்; ஒரு மதகுரு கவரிமானுடன் அங்கு வந்து அவன் முன்னே நின்று, "நீ, நீடூழி வாழ்க! ஏன் இங்கு அழுது கொண்டிருக்கிறாய்? இது ஜின்னியின் இடமாயிற்றே! இங்கு உனக்கென்ன வேலை? என்று கேட்கிறார்; அவனும் நடந்ததை சொல்கிறான்; "அல்லா நம்பிக்கைக்கு உகந்தவன்; உன்னுடனே நானும் இங்கேயே இருப்பேன்; என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்" என்கிறார்; வியாபாரிக்கு நேரம் ஆக ஆக பயம் எடுக்கிறது; அப்போது மற்றொரு மதகுரு அங்கு வருகிறார்; அவருடன் இரண்டு வைட்டை நாய்களை கூட்டிக் கொண்டு வருகிறார்; அவரும் என்ன நடந்தது என கேட்கிறார்; இவர்களும் சொல்கிறார்கள்; அடுத்த மூன்றாவது மதகுரு வருகிறார்; அவர் குதிரை மாதிரியும் கழுதை மாதிரியும் இருக்கும் கழுதை-குதிரையை கூட்டி வருகிறார்; அவரும் அதேபோல் நடந்ததைக் கேட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார்; 

இப்பொழுது, ஒரே தூசு புகையாக வருகிறது; பெரிய தூண் அசைந்து வருகிறத்து; அதுதான் ஜின்னி முரடன்; கையில் பெரிய வாள்; கண்களில் நெருப்பு; வந்தவுடன் வியாபாரியை இழுக்கிறான்; வியாபாரி அழுகிறான்; அதை பார்த்து மூன்று பேரும் அழுகிறார்கள்; முதல் குரு எழுந்து முரடனின் கையை முத்தமிடுகிறார்; "என் கதை இன்னும் ஆச்சரியமாக இருக்கும் கேள், அது இந்த வியாபாரியின் சோகக் கதையை காட்டிலும் ஆச்சரியமிக்கதாக இருக்கும்; நானும் இந்த மானும் ரத்த உறவு" என்கிறார்;

பேரழகி ஷெகராசெட் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது விடிந்து விட்டது; மன்னன், அந்த புதுக்கதை என்ன என்று கேட்பதற்காக மறுநாள் இரவு வரை காத்திருக்க வேண்டும்; எனவே அழகி ஷெகராசெட்டை மறுநாள் இரவு வந்து கதையை தொடரும்படி கேட்டுக் கொள்கிறார் மன்னர்.
இரண்டாம் இரவு கதை தொடர்கிறது........


சனி, 2 மே, 2015

கதை கதையாம்...

பளிச்சென்று அடிக்கும் வெயிலைப் பார்த்தால் ஒரு நாளில் நான்கில் ஒரு பங்கு நகர்ந்து விட்டது தெரிகிறது; ஏப்ரல் மாதத்தின் 18 வது நாள் இது; மே மாதம் வருவதற்கு தூது சொல்லவந்ததோ இந்த ஏப்ரல் மாதம்! ஒவ்வொரு மரத்தின் நிழலும், அந்த மரம் வளர்ந்திருக்கிற அளவுக்கே அதன் நிழலின் நீளமும் இருக்கிறது; இதை வைத்துப் பார்த்தால், பளிச்சென்று கிளம்பியுள்ள சூரியன் 45 டிகிரி உயரத்தில் இருக்கிறது; அப்படியென்றால், மணிக்கணக்குப்படி இப்போது 10 மணி இருக்கும்; இந்தச் சூரியனைப் பார்த்துக்கொண்டே வந்திருப்பவன், தன் குதிரையை விட்டு இறங்கி சேணத்தை அவிழ்க்கிறான்;
இறங்கியவன், "மைலார்ட்! ஏற்கனவே ஒருநாளில் கால் பங்கு பொழுது கடந்துவிட்டது; போன பொழுது கடவுளுக்கும் செயிண்ட் ஜானுக்கும் போனதாகவே புண்ணியமாகவே இருக்கட்டும்; மைலார்ட்! இனிவரும் பகலையும் இரவையையும் வீணாக்க வேண்டாம்; அவைகள், தூக்கத்தில் நம்மிடம் கொள்ளை அடிப்பவர்களைப் போல, காலத்தை நம்மிடமிருந்து கொள்ளை அடித்துச் சென்றுவிடும்; கண்ணைத் திறந்து முழித்துக் கொண்டிருக்கும்போதே, நம்முடைய அஜாக்கிரதையால், காலம் நம்மைக் கடந்து சென்றுவிடும்! அது ஆற்று வெள்ளம் போல! போகும், திரும்பி வராது; நதி வெள்ளம் மலை உச்சியிலிருந்து வேகமாக இறங்கி மலையில் அடியிலுள்ள சமதரைக்கு வருவதுபோல கீழ்நோக்கித்தான் வரும்; காலம் கடந்து செல்வது, சொத்துக்களை இழந்து அழுவதைப்போல! பொருள்கள் போய்விட்டால், சம்பாதித்துக் கொள்ளலாம்; காலம் போய்விட்டால் திரும்பப் பெறமுடியாது; மறுபடியும் அது வரவே வராது; பிரிட்டீஸ் மால்கின் பெண்மணியின் சிக்குப்பிடித்த கூந்தலைப் போல! ஒன்று சேர்க்கவே முடியாது! நம்முடைய சோம்பேறித்தனத்தால் புளித்துப்போக விடக்கூடாது;
வக்கீல் பெருந்தகையே! கடவுள் நமக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறான்; நீங்கள் ஒரு கதையை சொல்லுங்கள்; சொல்வதாக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் ஒப்புக்கொண்டபடி கதையைச் சொன்னால், நான் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிலுள்ள நீதியை கண்டு கொள்வேன்; ஒப்புக் கொண்டால், உங்களை விடுவிப்பேன்; அதன்பின் நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம்;
உன்னை நம்பிக்கை இழக்கச் செய்யமாட்டேன்; கதையை சொல்கிறேன்; ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காத செயல்; ஒப்புக்கொள்வது என்பதே ஒரு கடன் மாதிரிதான்; அதை திரும்பக் கொடுத்தே ஆக வேண்டும்; நான் உன்னிடம் என்ன ஒப்புக் கொண்டேனோ அதை திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; வேறு என்ன நான் சொல்ல! உறுதிமொழியே கடன்தானே! ஒரு கதையென்ன, பல கதைகள் என்னிடம் உள்ளன;சாசர் என்பவர் கதைகள் பல சொல்லி உள்ளார்; அவர் கதைகளில் காதலையே அதிகம் சொல்கிறார்; ஏதோ ஓல்ட் டெஸ்டமெண்டில் உள்ளதுபோல பழமையாக இருக்கிறது; உனக்கு அதையே, நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்; சின்ன வயதாக இருக்கும்போது, செயக்ஸ் மற்றும் அல்சையோன் (Ceyx and Alcyone) கதை படித்திருக்கிறேன்; (கிரேக்க இதிகாசத்தில், அல்சையோன் என்ற பெண், செயக்ஸ் என்பவனை மணக்கிறாள்; இவன்தான் விடியற்காலையில் வானத்தில் வரும் விடிவெள்ளி; இவர்கள் ஜியஸ்-ஹெரா என்ற சிவனும்-பார்வதியும்போல வாழ்கிறார்கள் என்று ஊரார் பேசிக் கொள்கிறார்களாம்; நம்மை உதாரணமாக வைக்கிறானே என்று ஜியஸ் கடவுள் கோபம் கொண்டு செயக்ஸை கடலில் தூக்கி போட்டுவிடுகிறார்; கடலில் அவன் செல்லும் கப்பலில் இடியை போடுகிறார்; கனவுக் கடவுளான மார்பஸ், செயக்ஸ் போல மாறுவேடம் பூண்டு, அதாவது இந்திரன், மாறு வேடத்தில் வந்து முனிவரின் மனைவி அகலிகையை அடைவதைப்போல, செயக்ஸ் மனைவி அல்சயோனிடம் வந்து பேசுகிறான்; அவளுக்கு தெரிந்து, நொந்துபோய் இவளும் கடலில் விழுகிறாள்; கடவுள் இறக்கப்பட்டு கணவன் மனைவி இருவரையும் காப்பாற்றி ஹால்சயான் பறவைகளாக, அதாவது நம்மூர் மரங்கொத்திப் பறவை மாதிரி மாற்றிவிடுகிறார்;-- இது கிரேக்க இதிகாசம்; கடவுளோடு மனிதன் போட்டி போடக்கூடாதுபோல!); அந்த கிரேக்க இதிகாசக் கதை காலத்திலிருந்தே அதைப் படிப்பவர்கள், எல்லாக் கணவன்-மனைவி, காதலர்கள் இவர்கள் இந்த இருவரைப்போல என்று சொல்லிக் கொள்கிறார்களாம்;
இதுமாதிரியே 'லிசண்ட் ஆப் குபிக் செயிண்ட்' கதையும் (The Legend of Cupic's Saint); குபிட் என்றால் ஆசைக்கடவுள்; ஒரு ராஜா-ராணி; அவர்களுக்கு மூன்று பெண்கள்; மூவருமே அழகிகள்; இளையவள் பேரழகி; சைக்கி என்று பெயர்; இவளைப் பார்த்தவர்கள் யாரும் 'காதல் கடவுளான வீனஸை' வணங்குவதில்லையாம்; வீனஸூக்கு கோபம் வருகிறது; சைக்கிதான் அடுத்த வீனஸ் கடவுள் என்று நாட்டில் பேச்சு வருகிறது; வீனஸ் தேவதை, தன் மகன் குபிட்டை அழைத்து பேரழகி சைக்கி உடம்பில் காயம் உண்டாக்கும்படி உத்தரவு இடுகிறாள்; ஆனால், சைக்கியை பார்த்த குபிட் அவள் அழகில் மயங்கி காதல் வயப்படுகிறான்; சைக்கியின் மற்ற இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி விடுகிறது; ஆனால் சைக்கிக்கு திருமணம் ஆக தடையாகிறது. அவளின் தகப்பனார், ஏதோ சாமி குத்தம் என்று சந்தேகிக்கிறார்; இப்படி போகிறது இந்தக் கதை.....
இப்படி பல கதைகள் உள்ளன.....
இந்த கதைகள் எதையும் நான் உனக்கு சொல்லப்போவதில்லை;

வித்தியாசமான வேறு கதையைச் சொல்கிறேன் கேள்!.....

வெள்ளி, 1 மே, 2015

கான்டர்பரி கதைகள் (The Canterbury Tales)

கான்டர்பரி கதைகள் (The Canterbury Tales):
ஜாபரி சாசர் (Geoffrey Chaucer). இவர் ஆங்கில கவிதை உலகின் தந்தை என்று போற்றப்படுவர். கதைத் தொகுப்பாக இவர் எழுதியுள்ள கதைகள் மிக சிறந்தவை என போற்றப்படுகிறது.இவர் இங்கிலாந்தில் 1387 முதல் 1400 வரை உள்ள காலங்களில் இந்தக் கதைத் தொகுப்பை எழுதினார். அப்போது இங்கிலாந்தை ரிச்சர்டு-2 மன்னர் ஆண்ட காலம். இதை மத்திய ஆங்கில காலம் என்பர். (Middle English period);
இங்கிலாந்தில் கான்டர்பரி என்ற பகுதிக்கு யாத்திரை செல்வார்களாம். அப்போதுள்ள மக்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம். அந்தக் கூட்டத்தில் 30 பேர்கள் சேர்ந்து மாலை, இரவு வேலையில் பொழுதைப் போக்குவதற்காக ஒவ்வொருவரும் போகும்போது இரண்டு கதைகளும், திரும்பி வரும்போது இரண்டு கதைகளும் சொல்ல வேண்டும் என்று உடன்பாடு செய்து கொண்டார்களாம். அவ்வாறு சொல்லப்பட்ட கதைகளாக ஜெப்ரி சாசர் எழுதி உள்ளார். (இன்றைக்கு 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகள் இவைகள்). வாழ்க்கையின் தத்துவங்களை புட்டுப்புட்டு வைத்திருப்பார். அவர் எழுதிய நிறைய கதைகள் கிடைக்கவும் இல்லையாம்.
நார்மன்கள் இங்கிலாந்தை ஆண்ட காலத்தில் ஆங்கிலம் அங்கு பிரபலம் ஆகிவில்லை. பிரான்ஸ்காரர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறிய பின்னரே, மேல்தட்டு மக்களால் ஆங்கிலம் பேசப்பட்டதாம்.
அந்தக் காலக்கட்டத்தில், மத்திய கால ஆங்கிலம் (Middle English) இருந்துவந்த காலம். ஆங்கில வார்த்தைகள் வேறு வேறு மாதிரி இருக்கும்; இப்போதுள்ள ஆங்கிலம் வேறு மாதிரி இருக்கும். உதாரணமாக--
aiel என்றால் தாத்தாவாம்; ஆனால் இப்போது grandfather;
alday என்றால் தினமும்; ஆனால் இப்போது daily:
ba என்றால் முத்தம்; ஆனால் இப்போது kiss;
chambre என்றால் படுக்கையறை; ஆனால் இப்போது bedroom;
coverchief என்றால் தலைப்பாகை; ஆனால் இப்போது head-dress; (அதுதான் இப்போது கர்சீப் ஆகியிருக்குமோ?);
dame என்றால் அம்மா; இப்போது mother;
deef என்றால் செவிடு; ஆனால் இப்போது deaf:
scole என்றால் பள்ளிக்கூடம்; இப்போது school;
ஜெப்ரி சாபர் எழுதிய கான்டர்பரி கதைகளில் முக்கியமானவைகள்;
The Knight's Tale
The Miller's Tale
The Reeve's Tale
The Cook's Tale
The Man of Law's Tale
The Wife of Bath's Tale
The Friar's Tale
The Summonor's Tale
The Clerk's Tale
The Merchant's Tale
The Squire's Tale
The Franlin's Tale
the Parson's Tale
The Manciple's Tale
The Second Nun's Tale
The Canon's Yeoman's Tale
The Shipman's Tale
The Prioress's Tale
The Tale of Sir Thopas
The Tale of Melibee
The Monk's Tale
The Nun's Priest's Tale
The Physician's Tale
The Pardoner's Tale
எல்லாமே மிகுந்த படிப்பினை கொண்ட கதைகள்.
அதிக உருக்கமாகவும் அறிவுபூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கும்.