விசா
கொடுக்காதீர்கள்!
வாங்கிய
கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், மறுபடியும் அவரிடமே கடன் வாங்க முடியாது; ஒரு
நாட்டில் வசிக்க செல்பவர்கள் அந்த நாட்டில் வசிக்க விசா பெறவேண்டும்; அப்படி விசா
வாங்கி அமெரிக்காவில் இருப்பவர்களில் சிலர், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு சிறை
சென்றனர்; அவர்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யும்போது, அவர்களின் சொந்த
நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுவர்; “நல்ல பிள்ளைகளை மட்டும் தங்க அனுமதித்துக்
கொண்டு, கெட்ட பிள்ளைகளை அவர்களின் தாயிடமே ஒப்படைப்பது” என்ற நியதிப்படி, தண்டனை
அனுபவித்த கெட்ட பிள்ளைகளை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விடுவர்;
ஆனால் எல்லாத் தாய்களும் அந்த கெட்ட பிள்ளைகளை திரும்ப பெற்றுக் கொள்வதில்லையாம்;
இந்த பழக்கம் இந்தியாவிடமும் உள்ளதாம்;
அமெரிக்காவில்
வருடத்திற்கு சுமார் 2000 பேர் விடுதலை ஆகின்றனர்; இவர்கள் எல்லோரும் வேறு வேறு
நாட்டைச் சேர்ந்தவர்கள்; அமெரிக்காவில் குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள்;
அமெரிக்க அரசு, இவர்களை அவரவர் தாய் நாட்டுக்கு திரும்ப அனுப்பும்போது, அந்த
நாட்டைச் சேர்ந்த அரசுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவதில்லையாம்; இதில் இந்திய நாடும்
ஒன்றாம்! இப்படிப்பட்ட நாடுகள் மொத்தம் 23 உண்டாம்!!
எனவே
அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான ரிபப்ளிக்கன் செனட்டர் சக் கிராஸ்லி என்பவர்,
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், இனிமேல் இந்த நாட்டு மக்களுக்கு இமிகிரேஷன் விசா
கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். ஆமாம்! இனி கெட்ட பிள்ளைகளை
திரும்ப அழைத்துக் கொள்ளும் நாடுகளுக்கே இமிக்கிரேஷன் கிடைக்கும்போல! அமெரிக்கா
இன்னும் முடிவு எடுக்கவில்லை;
**