காஸ்மாஸ்
கம்யூட்டர்
இந்த
பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்றோ, எவ்வளவு நீள-அகலம் என்றோ, என்னென்ன இருக்கிறது
என்றோ யாராலும் சொல்ல முடியாது; பிரமாண்டத்திலும் பிரமாண்டம் இந்த அண்டம்; அண்டம்,
பிரமாண்டம், பேரண்டம்; மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது! இந்த அண்டத்தில் எத்தனையோ
சூரியன்கள்! நட்சத்திரங்கள்! கிரகங்கள்! எது எதைச் சுற்றி வருகிறது என்றே
தெரியவில்லை! இந்த நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள்! இப்படி எத்தனை கோடி
சூரியன்களை எத்தனை கோடி கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ! ஆனால் இந்த கோடி கோடி சூரியன்கள்
என்னும் நட்சத்திரங்கள் எல்லாம் பொதுவாக எதைச் சுற்றுகின்றனவோ புரியாத புதிரே! கேலக்ஸி
என்கிறார்கள்! பிளாக் ஹோல் என்கிறார்கள்! சூப்பர் நோவா என்கிறார்கள்! இன்னும்
எத்தனையே பெயர்கள் உண்டு! இவை அனைத்தையும் பெயர் சொல்லவும் முடியவில்லை! மனிதன்
பெரியவன் என்று நினைத்துக் கொள்கிறான்! ஆனால் அவன் இதில் ஒரு சிறு எறும்பு!
இதையெல்லாம் நினைக்கும்போது, இந்த
பேரண்டம், மனிதனை சுற்றியோ, மனிதனை முன் வைத்தோ ஏற்பட்டிருக்க முடியாது; மனிதன்,
கர்வமாக நினைத்துக் கொள்கிறான், “தனக்காகவே இந்த பேரண்டம் இயங்குகிறது” என்று
நினைக்கிறான்! இந்த கர்வமே மனிதனின் வாழ்வை நகர்த்துகிறது!
பேரண்டத்தை
அளக்க முடியாதுதான்! ஆனாலும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த பேரண்டத்தில்
என்னென்ன நகர்கிறது என்று ஒரு மேப் தயாரிக்க உள்ளார்; அதை ஒரு மெகா சூப்பர் கம்யூட்டரில்
பதிவும் செய்ய உள்ளார்; இந்த பேரண்டத்தில், முடிந்தவரை, என்னென்ன கிரகங்கள் எங்கு
சென்று கொண்டிருக்கின்றன என்ற ஒரு வரைபடத்தை ஓரளவுக்காவது தயார் செய்யலாம் என்று
நினைக்கிறார், ஆசைப்படுகிறார்; இவருக்கு கேம்பிரிட்ஸ் பல்கலை காஸ்மாலஜி புரபசர்
உதவுகிறார்;
ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர்
உலகம் போற்றும் பௌதீக விஞ்ஞானி; இவருக்கு இப்போது 74 வயதாகிறது; இங்கிலாந்து
நாட்டவர்; மோட்டார் நியூரான் பாதிப்பால் இவரால் பேச முடியாது; கைகால்களை வீசி
நடக்க முடியாது; லேசாக கைகளை மட்டுமே அசைக்க முடியும்; அந்த அசைவைக் கொண்டே
கம்யூட்டர் மவுஸ் மூலம் எழுதி, அது பேசுகிறது; ஆனால் இவரின் மூளை மட்டும் மிக
அதிகபட்ச வேகத்தில் வேலை செய்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக