உத்த பஞ்சாப் (Udta Punjab)
உத்த பஞ்சாப் என்று ஒரு சினிமா; இதை வெளியிடக்கூடாது என்று என்.சி.ஓ.க்கள்
வழக்கு தொடுத்தன; அதில் போதை உபயோகத்தை சொல்லி உள்ளது என்றும் அது சமுதாயத்துக்கு
எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வழக்குப் போட்டது;
இந்த சினிமாவில் சாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் ஆகியோர்
நடித்துள்ளனர்.
மத்திய சென்சார் போர்டும் இதில் உள்ள காட்சிகளை 13 இடங்களில் வெட்டி
விட வேண்டும் என்று சொல்லி உள்ளது; பாம்பே மற்றும் பஞ்சாப், ஹரியான ஐகோர்ட்டுகள்
இந்த சினிமாவைத் திரையிடலாம் என்றும் ஒரு ஒரே காட்சியை மட்டும் வெட்டிவிட்டால்
போதும் என்றும் சொல்லி உள்ளது; இந்த சினிமாவை வெளியிட்டால், பஞ்சாப்பை பற்றி
மோசமாக மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என கருத இடமில்லை என்றும் கோர்ட் சொல்லி
உள்ளது; மத்திய சென்சார் போர்டு தேவையில்லாமல் பல காட்சிகளை வெட்டிவிடும்படி
கேட்டது தவறு என்றும் கோர்ட் சொல்லி உள்ளது;
இதற்கிடையில் ஒரு என்ஜிஒ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இந்த
சினிமாவை வெளியிடக் கூடாது என்றும், ஐகோர்ட் கொடுத்த உத்தரவுக்கு தடை கேட்டும்
மனுச் செய்தது; ஆனால், சுப்ரீம் கோர்ட் பாம்பே ஐகோர்ட்டின் உத்தரவு மீது ஸ்டே
கொடுக்க மறுத்து விட்டது; இந்த சினிவைப் பார்க்காமலேயே பாம்பே ஐகோர்ட், அந்த சினிமாவை
வெளியிட உத்தரவு கொடுத்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்துள்ளனர்: ஆனால்,
பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட் இந்த சினிமாவைப் பார்த்துவிட்டுத்தான் அதை வெளியிட உத்தரவு
கொடுத்துள்ளதாம்;
சினிமாவோ, அதன் கதையோ, அதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களோ, சமுதாயத்தை
ஒட்டு மொத்தமாக மாற்றிவிடும் என்று நம்புவதற்கில்லை! சினிமா என்பதே ஒரு கருத்தைச்
சொல்லும் சாதனம் மட்டுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக