தமிழ்தாத்தா எனச் செல்லமாக அழைக்கப்பட்ட உ.வே.சா. என்னும் உ.வே.சாமிநாத
அய்யர் மறைந்து (1948 ஏப்ரல் 28) 66 வருடங்கள் ஓடிவிட்டன. தமிழில் இருந்த இலக்கிய
ஓலைச் சுவடிகளைத் தேடித்தேடி நாடுமுழுவதும் அலைந்து, திரிந்து, தேடிக் கொடுத்த
மகான். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தாராம். பின் கும்பகோணம்
கலைக் கல்லூரியில் ஆசிரியர். பின்னர், மீனாட்சி தமிழ் கல்லூரியில் முதல்வரானாராம்.
தமிழ் இலக்கியங்கள் இன்று நம்மிடம் உள்ளதற்கு இவரே முழுமுதற்காரணம்.
பொதுவாக, எல்லா நாட்டு இலக்கியங்களுமே கவிதை வடிவிலேயே
உள்ளன. காரணம், எழுத்துக்கள் இல்லாத காலம். அறிந்தவற்றை நினைவில் வைத்துக் கொள்ள
முடியாது. எனவே கவிதை வடிவில் இருந்தால், நினைவில் நன்கு நிற்கும். கற்கவும்,
கற்பிக்கவும் சிறந்த முறை இதுதான் என எல்லா இலக்கியங்களும் இப்படி செய்திருக்கின்றன, செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழ் இலக்கியமும்
இப்படிக் கவிதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், இவைகள் எழுதப்பட்ட
காலத்தில் இருந்த தமிழ் வார்த்தைகள் இன்று இல்லை எனலாம் அல்லது அவைகளுக்கு இன்று
அர்த்தம் தெரிந்த தமிழன் அதிகமாக இல்லை எனலாம். இதுவே தமிழ் மொழிமீது தமிழ் மக்களுக்கு
ஈர்ப்பு குறைந்ததற்கு முழுமையான காரணம்.
எந்த ஒரு மொழியுமே அதன் இன்றைய
தலைமுறையின் மொழிவளத்தில் இருக்க வேண்டும். இலக்கியமொழி பெருமையாக இருந்தாலும்,
அதை உபயோகிக்க முடியாமல் போனால் அது காணாமல் போய்விடும். இந்த நிலை
தமிழ்மொழிக்கும் உள்ளது. ஒருசில புலவர்களைத் தவிர வேறு யாருக்கும் மொழிப்புலமை
இல்லை. மொழி ஆளுமை இல்லை. மொழி உபயோகிப்பும் இல்லை. எல்லா மொழிகளிலுமே பயன்பாட்டு
மொழி என்றும் பேச்சு மொழி(வழக்குமொழி) என்றும் உள்ளது. அதில் தமிழ், தனது
பயன்பாட்டுத் தன்மையை இழந்து வந்திருக்கிறது. இன்றைய தலைமுறை தமிழர்கள் பலர் தமிழைப்
பயன்பாட்டு மொழியாக உபயோகிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், எந்த மொழியையும்
வாழ்வின் அவசியமாக, தொழிலின் அவசியமாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது வளரும்.
இங்கு தமிழ் படித்த எவரும் அதை வாழ்வின் உயர்வுக்கும், வாழ்க்கைக்கும் பயன்படுத்த
முடியாத சூழ்நிலையே உள்ளது. அந்த இடத்தை ஆங்கிலம் ஏற்கனவே பிடித்துக் கொண்டு
விட்டது. ஆண்ட, ஆளும் அரசுகள் இந்த தவறை வெகுகாலம் செய்து வந்திருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக