கங்கையில்
கழுகுகளும் காக்கைகளும்
கங்கை ஒரு
புனித நதிதான்; இங்கு புனிதநீராடினால் புண்ணியம் கிடைத்துவிடும். ஆனால், அங்கு
பிணங்கள் மிதப்பதாக செய்திகள் இப்போது மனதை நெருடுகிறது.
பாதி எரிந்த
பிணங்களும், எலும்புக் கூடுகளும் ஏராளமாக உள்ளன.
கங்கையின் நதிக்கரையோரமே பல சுடுகாடுகள் உள்ளனவாம். இங்கு பாதி எரிந்த
நிலையிலேயே நதியில் தள்ளவிட்டு விடுவார்களாம். ஒரு பிணத்தை எரிக்க குறைந்த பட்சம்
ரூ.7,000 தேவைப்படுமாம். ஏழ்மை நிலையில் இதை செலவு செய்ய முடியாதவர்கள் கங்கையில்
தள்ளிவிட்டு காரியத்தை முடிக்கின்றனர். முழுதாக எரிப்பதற்கு முழுவிறகு வாங்க
முடியாதார்களும் பாதி எரிந்ததை நதியில்
இழுத்து விட்டு விடுகின்றனராம்.
இமாயலத்திலிருந்து
புனித நதியாக வரும் இந்த புனித கங்கை, இந்த அழுக்கையும் சேர்த்தே சுமக்கிறது.
கங்கோத்திரி
சிகரத்தில் தோன்றும் கங்கை நதி 2500 கி.மீ. தூரம் ஒடி வங்கச் கடலில் கலக்கிறது.
நடுவில், ஹரித்துவார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, ரிஷிகேஷ், கொல்கத்தா, சென்று
வங்காள தேசத்துக்கும் போகிறது.
கங்கை நதியை,
இந்துக்கள் 'கங்காதேவி' என்று இந்து பெண்தெய்வமாக வழிபடுகின்றனர். கங்கை நதி,
அலகாபாத்தில் கங்கையைக் காட்டிலும் பெரிய யமுனை நதியுடன் கலந்து 'திரிவேணி
சங்கமம்' ஆகிறது.
கங்கையானது
ஆகாயத்திலிருந்து வந்தது; இதுவே பூமிலிருந்து ஆகாயத்துக்குப் போவதற்குறிய
மார்க்கமும் (வழியும்) ஆகுமாம். எனவேதான் மூதாதையர்களுக்கு இங்கு "சிரார்த்த
காரியம்" செய்கின்றனர். உயிர்போகும்போது கங்கைநீரைத் தெளிப்பது இதனால்தான்.
ஆன்மாக்களை கங்கை வழிநடத்தி சொர்க்கத்தில் சேர்ப்பாள்.
இந்த கங்கையை
இன்று புனிதமாக இல்லையென்றாலும், சுத்தமாகவாவது வைத்துக் கொள்ள முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக