மகாபாரதத்தின் யுத்தம் 18 நாட்கள் நடந்ததாக அந்த போரை
வர்ணித்திருப்பர்; அதில் படைபலம், மன்னர், தளபதிகளின்
வீரம் சிறப்பு போன்ற எண்ணற்ற பெருமைகளை சொல்லியிருப்பர்; வியாசர்
எழுதிய மகாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது; ஒரு
ஸ்லோகம் என்பது இரட்டை வரிகளைக் கொண்டது; அப்படியானால்,
வரிக்கணக்கில் 2 லட்சம் வரிகள்; இதில் பல
கிளைக் கதைகள் இருப்பதால் (கதைக்குள் கதையாக) இவ்வளவு பெரிதாக இருக்கிறது; சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது; ஆனால்
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார், "கலியுகம் தொடங்கி விட்டது;
மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று புருஷதர்மத்தை Goals of
Life சொல்வதற்காக இந்த மகாபாரதக் கதை ஏற்பட்டது" என்கிறார்;
கலியுகம் தொடங்கி இப்போது 5,000 ஆண்டுகள் ஆகி
விட்டது; அதன்படி இந்த கதை நடந்து 5,000
ஆண்டுகள் ஆகி இருக்கலாம் அல்லது அதற்கு பின்னர் நடந்திருக்கலாம்; கதை எழுதப்பட்ட காலம், எப்போது என்று தெரியவில்லை;
வியாசர் பழைய சமஸ்கிருத மொழியில் (பாணினி மொழியில்) விநாயகருக்குச் சொல்லச் சொல்ல,
விடாமல் எழுதியதாகச் சொல்கிறார்கள்; பின்னர் மறுபடியும், அர்ஷூனின் கொள்ளுப்பேரன்
ஜனமேஜயன் மன்னருக்கு, வியாசரின் சிஷ்யன் வைஷாம்பயனா சொன்னதாக
சொல்கிறார்கள்; அதன்பின்னரே வெளி உலகுக்கு மகாபாரதம்
அறிமுகமாகி இருக்கலாம்;