“ய டேல் ஆப் டூ
சிட்டீஸ்” (A Tale of Two Cities).
“இரண்டு நகரங்களின் கதை.” லண்டனையும், பாரிஸையும்
வைத்து பின்னப்பட்ட கதை இது.
இந்த
கதையை 1859ல் பிரபல எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதியுள்ளார். லண்டன், பாரிஸ்
ஆகிய இரு நகரங்களை கொண்டு எழுதப்பட்ட கதை. சார்ல்ஸ் டானி (Charles
Darnay) மற்றும் சிட்னி கார்டன் (Sydney Carton) என்ற இரண்டு நபர்களின் கதைகளாகச் சொல்லப் பட்டுள்ளது. இவர்கள் இருவரும்
முகபாவனையில் ஒரேமாதிரி இருப்பவர்கள்; ஆனால் பழக்க வழக்கத்தில் வேறுபாடு
கொண்டவர்கள்.

நிறைவான
காலமாகவும் இருந்தது; மோசமான காலமாகவும் இருந்தது; அறிவான பருவமாகவும் இருந்தது;
முட்டாள்தனமான பருவமாகவும் இருந்தது; நம்பிக்கை கொடுக்கும் காலமாகவும் இருந்தது; நம்பிக்கையே
இல்லாத காலமாகவும் இருந்தது; நம்பிக்கை ஒளி தெரிந்த காலமாகவும் இருந்தது;
இருள்நிறைந்த காலமாகவும் இருந்தது; எதிர்பார்ப்பு பொங்கிவரும் வசந்த காலமாகவும்
இருந்தது; நம்பிக்கையில்லாத கடுங்குளிர் காலமாகவும் இருந்தது; இவை எல்லாமுமே சேர்ந்து
நம் முன்னே இருந்தது; இவை எதுவுமே நம்மிடம் இல்லாமலும் இருந்தது; நாம் எல்லோரும்
சொர்க்கத்துக்கே சென்றதுபோல இருந்தது; அங்கில்லாமல் வேறு எங்கோ செல்வது போல
இருந்தது; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இப்போது நாம் இருக்கும் காலத்தைவிட
வேறு வகையில் இருக்கிறது; அதிகாரமிக்கவர்களின் சத்தம் அதிகமாகி, நல்லவைகளுக்கும்,
கெட்டவைகளுக்கும் உச்சத்தையே அடையாளமாகக் கொண்டிருந்தன.