மரணத்தின் தன்மை:
"பெருகுசுப்பிரயோகம்பின் பிறந்தவிப்பிரயோகம்மேல்
மருவியசோகமோகமரணமுமுறையேசெய்யும்
பெருகுசுப்பிரயோகத்தான் பேச்சொடுநினைவுமாகும்
விரவுவிப்பிரியோகந்தான் வெய்துயிர்த் திரங்கலாமே.
சோகமேவெதுப்பினோடு துய்ப்பவைதெவிட்டல்செய்யும்
மோகமேயழுதலோடுமொழிபலபிதற்றலென்ப
வேமாமரணந்தானேமிகுமயக்கோடயார்ப்பாம்
பாகடர்சொல்லினல்லாய்பகருநூலியல்பிதாமே."
1. சுப்பிரயோகம் என்பது பேச்சும் நினைவும்.
2.விப்பிரயோகம் என்பது மூச்செறிந்து வருந்துவது.
3.சோகம் என்பது வெதுப்பும் உணவை வெறுத்தலும்.
4.மோகம் என்பது அழுதலும் பிதற்றலும்.
5.மரணம் என்பது மயக்கமும், அயர்ச்சியும்.
"மரணத்துக்கு முன் ஏற்படும் ஐந்து வகை அவஸ்தையை (அவத்தையை)
இவ்வாறு சொல்கிறார்கள்.
முதலில்,
பேச்சும் நினைவும் மங்கும்;
பின்னர், மூச்சுஉயிர் நிற்க முடியாமல் வருத்தும்;
பின்னர்,
உணவு செல்லாது, பசிபோகும்;
பின்னர், அழுகையும் வரும், பிதற்றலும்
ஆரம்பிக்கும்;
பின்னர், மரணத்துக்கு
சற்றுமுன் ஒருவித மயக்கமும், அயர்ச்சியும் உண்டாகி உயிர் பிரியும்.