பூமியின் நடுப்பகுதியின்
சுற்றளவு 40,075 கி.மீ. (சுமார் 25,000 மைல்); இந்த பூமி, 24 மணி நேரத்தில்
தன்னையே ஒரு சுற்று சுற்றிக் கொள்கிறது; அந்தக் கணக்குப்படி பார்த்தால்,
பூமியின் வேகம் ஒரு மணிக்கு சுமார் 1000 மைல் வேகத்தில் பூமி சுற்றுகிறதாம்;
(சரியான கணக்குப்படி ஒரு மணிக்கு, 1041.7 மைல்
வேகம்); பூமியானது, மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத்தானே சுற்றுகிறது;
பூமி, சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகிறது?
ஒரு நொடிக்கு 30 கி.மீ.
வேகத்தில் பூமி, சூரியனைச் சுற்றுகிறதாம்; அதாவது ஒரு மணிக்கு 69,361 மைல் வேகத்தில் சுற்றுகிறாம்;
சூரியன்
இந்த பிரபஞ்சத்தை எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது?
சூரியன் இந்த பிரபஞ்சம்
என்னும் கேலக்சியை ஒரு நொடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறதாம்; அதாவது ஒரு மணிக்கு 4,90,000 மைல்
வேகத்தில் சுற்றுகிறதாம்;
ஒளியின்
வேகம்?
லைட் என்னும் ஒளியின்
வேகத்தை அளந்து சொல்வதற்கு "C" என்ற லத்தீன்
மொழியான "Celeritas" என்ற வார்த்தையின் அடையாளத்தை
வைத்துள்ளனர்; செலரிட்டாஸ் என்றால் லத்தீன் மொழியில் "பாய்ந்து
செல்லும் வேகம்" என்று பொருள்; இந்தக் கணக்கில் ஒளியின்
வேகத்தை கணக்கிட்டால், ஒரு செகண்ட் (நொடிக்கு) 1,86,280 மைல் வேகத்தில் ஒளி பாய்ந்து செல்லுமாம்;
கண்ணால் கூட பார்க்க முடியாத வேகம் இது;
தூரத்தில் உள்ள நட்சத்திரங்களை
எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று மைல், கிலோ மீட்டர்
கணக்கில் எல்லாம் கணக்கிட முடியாதாம்; எனவே, இந்த ஒளி பாயும் வேகத்தை வைத்து கணக்கிட முடியுமாம்; அந்த ஒளி பாயும் வேகத்தை "ஒளி ஆண்டு" Light Year என்று கணக்கிடுகிறார்கள்; ஒரு ஒளி ஆண்டு என்றால் அது
எவ்வளவு?
ஒரு ஒளி ஆண்டு = 9 லட்சம்
கோடி கி.மீ. தூரம்;