Ms. Hillary Clinton
திருமதி. கிலாரி கிளின்டன்:
அமெரிக்காவின் அடுத்த அதிபராக வர போட்டி போடும் ஒரு போட்டியாளர். இவர் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி. தற்போதுள்ள அதிபர் ஒபாமா இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர். 2016க்கு இவரே தகுதியான அதிபர் என்று ஒபாமாவே புகழ்ந்துள்ளார். இவர்கள் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்.
இவருக்கு எதிராக, பழைய அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்களின் இளைய சகோதரர் ஜான் ஜெப் புஷ் (John Jeb Bush) அவர்களும் களத்தில் உள்ளார். இவர் ரிபப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்தவர்.
அமெரிக்காவில் இரண்டு கட்சிகள்தான் உண்டு.
ஒன்று பழமையான, ரிபப்ளிகன் பார்ட்டி (Republican Party); (யானைக் கட்சி)
மற்றொன்று, டெமோக்ரட்டிக் பார்ட்டி (Democratic Party); (கழுதைக் கட்சி)
ரிபப்ளிகன் பார்ட்டி மிகப் பழையது; இதுதான் மனிதனை அடிமையாக விற்றதை ஒழித்தது. ஆப்ரகாம் லிங்கன் இந்த கட்சியில்தான் இருந்தார்; இதுவரை 18 அதிபர்கள் இந்த ரிபப்ளிக்கன் கட்சியில் இருந்துதான் வந்துள்ளனர். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூட இந்த கட்சிதான். இதை பழமையான கொள்கை உள்ள கட்சி என்று சொல்கிறார்கள். ரிபப்ளிக்கன் கட்சியின் சின்னம் யானை.
தற்போதுள்ள அதிபர் ஒபாமா டெமாக்ரிடிக் கட்சியைச் சேர்ந்தவர்.
டெமாக்ரிடிக் கட்சியின் சின்னம் கழுதை. இந்த கழுதைக் கட்சியை சேர்ந்தவர்தான் திருமதி. கிலாரி கிளிண்டன்.
கழுதைச் சின்னம் வந்த கதை;
முதன்முதலில் 1828ல் அதிபராக ஆன்ரூ ஜாக்சன் டெமாக்ரடிக் கட்சியில் போட்டியிடுகிறார். இவரின் கோஷமான "மக்களை மக்களேதான் ஆள வேண்டும்" என்ற கோஷம் பிரபல்யமானது. எனவே எதிர்கட்சிகள் இவரை ஜாக்ஆஸ் = ஜாக்கழுதை(Jackass) என்று விமர்சிக்கின்றனர். இதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் கழுதை படத்தை போட்டு விட்டார். இதிலிருந்து டெமாக்ரிடிக் கட்சிக்கு கழுதை சின்னம்.
யானைச் சின்னம்:
இதே கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் ரிபப்ளிக்கன் கட்சிக்கு கழுதையை வரைந்து அதன் மீது சிங்கத்தின் தோலை போர்த்தியது போல படத்தை போட்டுவிட்டார். எல்லா மிருகமும் பயப்படும், ஆனால் யானை பயப்படாது. எனவே இதை யானை ஆக்கி விட்டனர். விளையாட்டாக கார்டூனிஸ்ட் செய்த வேலைகள், கட்சியின் சின்னமாகி விட்டது.