விரும்பித்
தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித்
ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து,
சுரும்பிற்
களித்து,
மொழி தடுமாறி, முன் சொன்னவெல்லாம்
தரும்பித்தவர்
ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
(அபிராமி அந்தாதி – பாடல்-94)
(விரும்பி உன்னைத் தொழும் அடியார்கள் கண்களில் நீர் பெருகி, உடல் மயிர் கூச்செறிந்து புளகாங்கிதம் அடைந்து, அறிவு
இழந்து, மதுக்குடித்த வண்டு போலாகி, மொழி
தடுமாறி, முன்னர் சொன்னவை எல்லாம் நிகழ்வித்தவர் ஆவர் என்றால்,
அதற்கு மூலகாரணம் அபிராமியின் சமயம் நன்றே!)