பகவத் கீதை
பகவானின் கீதம் (Song of the Lord).
இந்த கீதம் 700 சுலோகங்களால் ஆனது;
சுலோகம் என்பது பல வரிகள் கொண்ட ஒரு பாடல் தொகுப்பு;
இது மகாபாரதக் கதைக்குள் சொல்லப்பட்டுள்ளது;
இதை இடைச் செருகல் என்றும் சொல்வர்;
இடைச் செருகலோ, ஆதி உருவாக்கமோ, அதிலுள்ள விஷயமே முக்கியம் என்பதால்,
எப்போது சொல்லி இருந்தால் என்ன?
மகாபாரதக் கதை சுமார் 5000 வருடங்களுக்கு முந்தியது; அது கிட்டத்தட்ட துவாபர
யுகம் முடிந்து கலியுகம் தோன்றிய போது, வரப்போகும் அல்லது வந்துவிட்ட, இந்த
பொல்லாத கலியுகத்தில் எப்படி மனிதன் வாழ வேண்டும் அல்லது வாழ்வை ஏற்றுக் கொள்ள
வேண்டும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சொன்ன கீதமே இந்த பகவத் கீதை.
மகா பாரதக் கதையில் அத்தியாயம் 25 லிருந்து 42 வரை உள்ள அத்தியாயங்கள்
இந்த பகவத் கீதை;
கீதையில் தர்மத்தையும், ஞானத்தையும், பக்தியையும், யோகத்தையும், கர்மத்தையும்,
கொண்டு மனிதன் மோட்சத்தை அடையும் வழியைக் கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணன்;
இந்த மனித உடலுக்குள் வாழும் ஆத்மா என்ற விஷயத்துக்கும், இந்த பிரபஞ்சம்
முழுமையும் ஆட்கொண்ட பிரம்மம் என்ற விஷயத்துக்கும் இடையே உள்ள தொடர்பே வாழ்வு;
இந்த மனித ஆத்மா, வாழ்ந்து தெளிவு பெற்று, பேராத்மா என்னும் பிரம்மத்தை,
இறைநிலையை அடைய தவிக்கும்; அதை நோக்கிய பயணமே இந்த பிரபஞ்ச நகர்வும் வாழ்வும்; இதை
அடைவதைத்தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பல வழிகளில் அடைய முடியும் என்பதை கீதை மூலம்
உணர்த்துகிறான்; மகா பாரதக் கதையும், கதையின் பாத்திரங்களும், அவைகளின் குணங்களும்,
சந்தேகங்களும், தெளிவுகளும், அவரவர் கர்மாக்களும், பக்திகளும், ஞானமும், தர்மமும்
இத்தகைய செயல்களின் விளைவுகளும் என்று ஏகப்பட்ட விஷயங்களுடன் இந்த மானிட ஆத்மா,
இறைநிலையின் உள்ள பிரம்மத்தை அடைய வழி சொல்லப்படுகிறது;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக