நரகன் என்னும்
நகராசுரன்:
விஷ்ணுவின் பத்து
அவதாரங்களில் ஒரு அவதாரம் வராக அவதாரம்; இது விஷ்ணுவின் மூன்றாவது
அவதாரமாகும்; வராகம் என்றால் பன்றி; பூமியைக்
கடலுக்கு அடியில் எடுத்துச் சென்ற அசுரனான இரணியட்சனுடன், இந்த
பன்றி வேடத்தில் கடலுக்கு அடியில் சென்று ஆயிரம் வருடம் போராடி அவனைக் கொன்று,
பூமியை விஷ்ணு மீட்டார் என்பது ஐதீகம்;
விஷ்ணுவின் இந்த வராக
அவதாரத்தில், விஷ்ணுவுக்கு பூமியில் பிறந்தவனே
நரகன் என்னும் இந்த அசுரன்; இவன் ஆண்ட பகுதிக்குப் பெயர்
பிராக்சோதிஷம்; இந்த நரகனின் வாகனம் சுப்பிரதீகம் என்னும்
யானை; இவனின் புத்திரன் பகதத்தன்;
இந்த அரசுனான நரகன், மிகக் கொடுமைகள் செய்துள்ளான்; அதிதி
என்பவனது கர்ண குண்டலங்களை பறித்துக் கொண்டான்; வருணனின்
சத்திரத்தையும் கவர்ந்து கொண்டான்; இவைகளுடன் இந்திரன்
இருக்கும் தேவலோகம் சென்று அவனின் சிம்மாசனத்தையும் அபகரித்துக் கொண்டான்;
இந்திரன் பயந்து ஓடி
விஷ்ணுவிடம் முறையிடுகிறார்;
விஷ்ணு, இந்த அசுரன் நரகனையும், அவன்
தமையன் முராசுரனையும் கொன்று விடுகிறார்; இந்த நரகன்,
ஏற்கனவே 16,000 கன்னியரை தேவலோகத்திலிருந்து
சிறைப்பிடித்து அடைத்து வைத்துள்ளான்; அவர்கள் அனைவரையும்
விஷ்ணு மீட்கிறார்; அவர்கள் கேட்டுக் கொண்டதால், அத்தனை கன்னியரையும் விஷ்ணுவே திருமணம் செய்து கொள்கிறார்;
இவ்வாறு நரகன்
என்னும் நரக அசுரனைக் கொன்ற தினமே நரக சதூர்த்தி தினம் எனப்படும்;
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக