Bill - பில் என்பது சட்ட முன்வரைவு. சட்டத்தை பார்லிமெண்ட், சட்டசபை இவைகளில் விவாதித்து, ஓட்டுப்போட்டு, நிறைவேற்றுவதற்காக இந்த சட்ட வரைவை எழுதி இருப்பர். இது சட்டமாகாது. ஓட்டுப் போட்டு நிறைவேற்றினால்தான் சட்டமாகும்.
Act - ஆக்ட் என்பது சட்டம். அதாவது பில் என்னும் சட்ட முன் வரைவை பார்லிமெண்ட், சட்டசபை இவைகளில் நிறைவேற்றிய பின் இதற்கு ஆக்ட் என்று பெயர். அதற்கு தேதி குறிப்பிடும் நாளில் இருந்து அது அமலுக்கு வரும்.
Ordinance ஆர்டினஸ் என்னும் அவசரச் சட்டம்;
மத்திய அரசாக இருந்தால் ஜனாதிபதியும், மாநில அரசாக இருந்தால் அதன் கவர்னரும், மந்திரி சபை தீர்மானத்தை அவசர சட்டமாக இயற்றுவர். எதற்கு அவசரம் என்றால், சட்டம் அவசரமாக இயற்ற வேண்டிய அவசரம் இருக்கும், ஆனால் அப்போது பார்லிமெண்ட் நடந்து கொண்டிருக்காது. பார்லிமெண்ட் நடந்து கொண்டிருந்தால் மட்டுமே அங்கு சட்டத்தை (பில்) தாக்கல் செய்ய முடியும். ஆகவே அவசரத்துக்காக சட்டத்தை ஜனாதிபதியைக் கொண்டு இயற்றிக் கொள்ளலாம்; ஆனாலும் அடுத்த பார்லிமெண்ட் கூடும்போது ஆறு வாரத்துக்குள் அந்த அவசர சட்டத்தை பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்து சாதாரண சட்டமாக இயற்றிக் கொள்ள வேண்டும்.
அவசர சட்டம் கொண்டுவர ஜனாதிபதிக்கு அதிகாரம் இந்திய சாசன சட்டம் 123லிலும், மாநில கவர்னருக்கு அத்தகைய அதிகாரம் 213லிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அதிகாரத்தை கொண்டுதான், அவசர சட்டமாக 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்' அவசர சட்டமாக ஜனாதிபதியின் கையெழுத்து பெறப்பட்டு கொண்டுவரப்பட்டது. இது காலாவதி ஆகிவிட்டதால், மறுபடியும் இரண்டாம் முறையாக ஜனாதிபதி கையெழுத்து பெற்று அவசர சட்டமாக்கப் பட்டுள்ளது.
ஆனாலும், தற்போது விவசாயிகள் சங்கம் இரண்டாம்முறை அவசர சட்டம் ஆனதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக