கடவுளின் தகப்பனார் யார்?
கிரேக்க
இதிகாசம்;
ஆகாயத்திலிருந்து வந்தவர்
தந்தை;
பூமியில் இருந்து வந்தவர் தாய்; ஆகாயத்தில் யார்
இருக்கிறார்? Uranus யுரானஸ் கடவுள்; யுரானஸ்
என்றால் ஆகாயம், சொர்க்கம்; இவர்தான் ஆகாயத்தின்
தந்தை; பூமித்தாய் கையா Gaia. இவர்கள் இருவரும்
சேர்ந்து பெற்ற பிள்ளைகள்தான் டைட்டான்ஸ் Titans; ஒவ்வொரு நாளின்
இரவிலும் ஆகாயக் கடவுளான யுரானஸ், பூமிக்கு வந்து பூமியை தழுவி மூடிக்
கொள்வாராம்; அப்போது தன் மனைவி பூமித்தாயான கயாவுடன் கலந்து குழந்தை
பெற்றுக் கொள்வார்களாம்; இருந்தாலும், யுரானஸ் தந்தைக்கு, தன் குழந்தைகள்
மேல் பிரியம் இல்லையாம்; உண்மையில் குழ்ந்தைகளை வெறுக்கிறாராம்; முதல் ஆறு மகன்களுக்கும் முதல் ஆறு மகள்களுக்கும் டைட்டன்ஸ் என்று பெயர் கூட்டம்
உண்டு; ஏதோ ஒரு கோபத்தில் தந்தை யுரானஸ், கடைசி மகன் டார்டாரஸை பூமிக்கு அடியிலுள்ள பாதாள சிறையில் அடைத்து வைத்து விடுகிறார்; இதனால் தாய்க்கு, கணவர் மீது, கோபம் உச்சிக்கு போகிறது; தாய் கயா, ஒரு அரிவாளாக உருவம் மாறி, தன் பிள்ளைகளிடம் "இந்த அரிவாளைக் கொண்டு உங்களின் தந்தையின் விரையை வெட்டி
விடுங்கள்" என்று கூறுகிறார்; "கொலையும் செய்வாள் பத்தினி." கடைசி மகன் "குரோனஸ்" இதற்கு உடன்படுகிறான்; துணிச்சல் மிக்கவன்; தகப்பனுடன் சண்டையிடுகிறான், தாய் சொன்னது போலவே
தந்தையின் விரைகளை அறுத்து கடலில் வீசிவிடுகிறான்; இதில் பயந்துவிட்ட
தந்தை, தன் மகன்களை அழைக்கிறார்; என் ரத்தம்
விழுந்த இடங்கள், ஜியான்ட்ஸ் (வீரம் மிக்கவர்கள்) ஆகவும்;
மலியா என்னும் நிம்ஸ் (மரத்தில் வசிக்கும் இளம் தேவதைகள்) ஆகவும்;
என் விரைகள் விழுந்த கடல்பகுதி அபோர்டைட் (காதல், காமம், குழந்தை பெறும் தேவதைகள்) ஆகவும்; மாறவேண்டும் என்று கூறினார்;
இந்த நிகழ்வுகளுக்குப்
பின்னர்,
கடவுள் யுரானஸ், இரவில் மனைவியைத் தேடி பூமிக்கு
வரவில்லை; எனவே பூமியும் இரவில் இருளால் தழுவப் படவில்லை;
இத்துடன் கடவுள் குழந்தை பெற்றுக் கொள்வது நின்றுவிட்டது;
யுரானஸ்-கையாவுக்கு பிறந்த
குழந்தைகளில் கடைசி மகன் துணிச்சல்மிக்க இந்த குரோனஸ் முக்கியமானவர்; (கடைசிப் பையன்தான், தாயின் சொன்னபேச்சை தட்டாமல் கேட்பவன் போல!) குரோனஸின் சகோதரிதான்
ரியா; சகோதரியையே குரோனஸ் திருமணம் செய்து கொண்டான்;
(கடவுளின் முதல் குழந்தைகள் என்பதால், அவர்கள் வழக்கப்படி அப்படித்தான் திருமணம் செய்து கொள்வார்களாம்);
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக