பைபிள் வழி மூதாதையர்கள் இந்த மூன்று பேரும், ஆப்ரகாம் (ஆப்ராம்),
அவர் மகன் இஸ்மாயிலும், ஐசக்கும், ஐசக்கின்
மகன் ஜேக்கப் (இஸ்ரேல்);
யூதகலாச்சாரம் ஏற்படுவதற்கு இவர்களே மூதாதையர் என்றும்
சொல்வர்;
ஆப்ராம் என்கிற ஆப்ரகாம்;
முதல் மனிதன் ஆதாம் முதல் ஆப்ரகாம் வரை 10 மூதாதையர்கள்
இருந்திருக்கின்றனர்; இந்த முதல் 10 பேர், பெரும் வெள்ளப் பெருக்கு
வருவதற்கு முன்னர் வாழ்ந்த வழிதோன்றல்கள்; (மீதி 10 பேர்
வெள்ளப் பெருக்குப் பின் வாழ்ந்த வழித் தோன்றல்கள்); இதில் 10-வது
வழித்தோன்றலே ஆப்ராம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆப்ரகாம் ஆனவர்; இவரின் கனவில் கடவுள் வந்து "நீ உன் தகப்பன் சாரா-வின்
வீட்டிலிருந்து வெளியேறி, கானான் நாட்டுக்குப் போ; அங்கு கானான் மக்கள் வசிக்கிறார்கள்; அங்கு உன்
வழித்தோன்றல்களை உருவாக்கு;" என்கிறார்; ஆனால் கானான் நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்படுகிறது; எனவே
கானான் நாட்டை விட்டு அதன் தெற்குப் பகுதியான எகிப்துக்கு போகிறார்கள்; ஆப்ராமின் மனைவி பெயர் சாராய்; இவளுக்கு இன்னும்
குழந்தை பிறக்கவில்லை; எகிப்தியரைப் பார்த்து பயந்து,
சாராய் என் தங்கை என்று கணவனே பொய் சொல்லி வாழ்ந்து வருகிறார்;
மனைவி என்றால், தன்னைக் கொன்றுவிட்டு மனைவியை
அவர்கள் எடுத்துக் கொள்வார்களாம்; எகிப்து நாட்டை ஆண்ட
மன்னர் பேர்ரோ Pharaoh (இது மன்னனின் தனிப்பெயர் இல்லை;
எகிப்தை ஆளும் மன்னர்களின் பட்டப் பெயர் இது); சாராய் பெண் வந்திருப்பது அந்த எகிப்து நாட்டு இளவரசனுக்கு தகவல்
தெரிந்துவிட்டது; வரச் சொன்னான்; ஆப்ரகாமுக்கு
மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களும்,
வேலைக்காரர்களும், ஏராளமாகக் கொடுத்தான்
இளவரசன்; ஆனால் கடவுள், மன்னனின்
இளவரசனையும், அவன் செல்வங்களையும் அழித்தான்; இளவரசனுக்கு காரணம் தெரியவில்லை; காரணத்தை
தேடும்போது, சாராய் என்ற பெண் திருமணம் ஆகாதவள் இல்லை;
அவள் ஆப்ராமின் தங்கையும் இல்லை; உண்மையில்
ஆப்ராமின் மனைவிதான் இந்த சாராய் என்று தெரியவருகிறது; கோபம்
வந்து, ஆப்ராமிடம் கொடுத்த எல்லாவற்றையும் திரும்ப
ஒப்படைத்து விட்டு ஓடிவிடும்படி கூறினான் இளவரசன்; எனவே
ஆப்ராம், தன் ஆடுமாடுகளுடன் ஹெப்ரான் நாட்டுக்கு (பாலஸ்தீன
நாடு) வந்துவிடுகிறார்; அவர் தம்பி மகன் "லாட்"
என்பவனின் குடும்பத்தை பசுமையான ஜோர்டன் நாட்டுக்கு அனுப்பி விட்டார்; ஜோர்டான் நாட்டுப் போரில், ஆப்ராமின் தம்பி மகன்
லாட்டை சிறைப் பிடித்து விட்ட செய்தி ஆப்ராமுக்கு தெரியவருகிறது; ஆப்ராம் தன் கூட்டத்தை இரண்டு பிரிவாக்கி, அந்த
நாட்டை தாக்கி, தம்பி மகனை விடுவிக்கிறார்; ஜோர்டான் போரில் தோற்ற சோடோம் மன்னன், ஆப்ராமைமிடம்
நட்பாக ஆகிவிட வருகிறான்; வரும்போது, ரொட்டியும்,
ஒயினும் கொண்டு வருகிறான்; ஆப்ராமின் கனவில்
கடவுள் தோன்றி, உன் மக்களை இந்த மண்ணில் பெருக வைப்பேன்
என்கிறார்; ஆனால் ஆப்ராமின் மனைவியோ பிள்ளை இல்லாமலேயே
இருக்கிறார்; எனவே மனைவியின் எகிப்திய வேலைக்காரி மூலம்
ஆப்ராமுக்கு குழந்தை பிறக்க ஏற்பாடாகிறது; அந்தக் குழந்தை
இஸ்மாயில்; குழந்தை பிறந்தவுடன் அந்த வேலைக்காரி, எஜமானி
சாராயை மதிப்பதில்லை; எனவே வேலைக்காரியை விரட்டி விடுகிறார்;
போகும்வழியில் ஒரு நீரூற்றுக்கு அருகில், அந்த
வேலைக்காரிக்கும் அவள் குழந்தைக்கும், தேவதை தோன்றி, திரும்பி வரும்படியும், உன் மகன் மூர்கன்போல வருவான்
என்று சொல்கிறது; ஆப்ராமுக்கு வயதாகி விட்டது; இப்போதுதான் அவர் பெயர் ஆப்ரகாம் என்றும், மனைவியின்
பெயர் சாராய் என்பதை சாரா என்றும் கடவுள் மாற்றி விட்டு, அவரின் மனைவிக்கு மகன் பிறப்பான்
என்றும் கடவுள் சொல்கிறார்; (I'll give thee a son also of her.); இப்போதுதான், கடவுளின் ஆணைப்படி,
தனக்கும், மகன் இஸ்மாயிலுக்கும் (13 வயது)
சுன்னத் செய்து கொள்கிறார்; ஆப்ரகாம் பிலிஷ்டைன் பகுதியில்
(கஜா பகுதி) வசிக்க செல்கிறார்; அங்குள்ள மன்னன் அபிமேலக்
இவர்களை விசாரனைக்கு அழைக்கிறான்; அங்கு ஆப்ரகாம் தன் மனைவி
சாராவை தங்கை என்று சொல்கிறார்; மன்னனின் கனவில் கடவுள்
தோன்றி, நீ, சாராவை அடைய திட்டமிட்டால்
உன் நாட்டை இழப்பாய் என்றும் அவள் ஆப்ரகாமின் மனைவி என்றும் எச்சரிக்கிறார்;
மறுநாள், ஆப்ரகாமிடம், 'ஏன்
என்னிடம் பொய் சொன்னாய்' என்று அரசன் கேட்கிறான்; அவரும் "உண்மையில் இவள் என் சகோதரிதான்; என்
தந்தையின் மகள்; ஆனால் இவள் என் தாயின் மகள் இல்லை; அதனால் எனக்கு மனைவி ஆனாள்;" என்று விளக்கம்
அளிக்கிறார்; அங்குள்ள ஒரு கிணற்றுக்கு சண்டை வருகிறது;
ஆப்ரகாம் ஆட்களுக்கும், பிலிஷ்டைன் (கஜா)
மன்னனின் ஆட்களுக்கும்; ஆட்டுக் குட்டிகளுக்கு தண்ணீர்
இறைப்பதில் பிரச்சனையாம்;
ஆப்ரகாமுக்கு சாரா மூலம், முதன் முதலில் கடவுள் சொன்னபடி, ஒரு மகன் பிறக்கிறான்; அவனுக்கு "ஐசக்"
என்று பெயர் வைத்து, அவனின் 8 வயதில் அவனுக்கும் சுன்னத்தும்
செய்து விடுகிறார்; ஒரு விருந்து நடக்கிறது அதில் மூத்த மகன்
இஸ்மாயில், இந்த பெரியம்மா கிழவியாகி ஐசக் மகனை பெற்றதற்காக
கேலி செய்கிறான்; இதை கணவனிடம் சொல்லி மூத்த மகன்
(வேலைக்காரியின் மகன்) இஸ்மாயிலை விரட்டிவிடும்படி கேட்கிறார்; என் மகன் ஐசக்குடன் அவன் பங்குக்கு வரக்கூடாது என்றும் சொல்கிறார்;
ஆப்ரகாமுக்கு வருத்தமாகி விட்டது; கடவுளிடம்
இதற்கு தீர்வு சொல்லும்படி கடவுளை வேண்டுகிறார்; "கவலைப்படாதே,
உன் மனைவி சொல்லியபடியே செய், ஒன்றும்
ஆகாது" என்று கடவுள் சொல்கிறார்; "ஐசக் மூலம் உன்
வம்சத்தை உருவாக்குவேன், அவன் உனது வாரிசு; என்றும், இஸ்மாயில் மூலம் ஒரு தேசத்தை உருவாக்குவேன்,
அவனும் உன் இரத்த வாரிசே; என்றும் கடவுள்
ஆப்ரகாமிடம் ஆறுதலாகச் சொன்னார்; மறுநாள் இஸ்மாயிலையும் அவன்
தாயையும் பொருள்களை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்; காடுகளில்
அழைந்து திரிந்து கடவுளை வேண்டி அழுதனர்; ஒரு தேவதை தோன்றி,
'உங்களுக்கு என்றே தனி நாட்டை உருவாக்குவேன்' என்று
கூறியது; பின்னர் தான் பிறந்த எகிப்து மண்ணில் தன் மகன்
இஸ்மாயிலுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று
கருதி பெண்தேடினார்;
இதற்கிடையில்,
ஆப்ரகாம் கனவில் கடவுள் தோன்றி, உன் மகன்
ஐசக்கை எனக்கு பலி கொடு என்று கேட்டார்; அதை அப்படியே ஏற்று,
மகனைக் கூப்பிட்டுக் கொண்டு மலை ஏறினார்; அங்கு
மகனை பலி கொடுக்க தயாரானபோது, தேவதை தோன்றி "உன் மகனை
விட்டுவிடு; அதற்குப் பதிலாக ஒரு ஆட்டை பலி கொடு" என்று
சொல்லியது; கடவுள் சொன்னதை நம்பிய ஆப்ராகாமுக்கு நிறைய
செல்வத்தையும் மக்கள் கூட்டத்தையும் கொடுத்தாராம் கடவுள்;
ஆப்ரகாமின் மனைவி சாரா இறக்கிறார்; அதற்குபின்னும் ஒரு
பெண்ணை துனைவியாக வைத்துக் கொள்கிறார்; அவருக்கு 6 மகன்கள்
பிறக்கிறார்கள்; 175 வருடம் வாழ்ந்து பின்னர் ஆப்ரகாம்
இறக்கிறார்;
யூதர்கள்,
கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்கள்
அனைவருக்கும் இந்த ஆப்ரகாம்தான் மூதைதையர் என்கிறார்கள்;
ஆப்ராகாமின் ரத்த வழி வந்தவர்களை யூதர்கள் என்றும்;
ஆப்ராகாமின் கடவுள் நம்பிக்கையைக் கைக் கொண்டவர்கள்
கிறிஸ்தவர்கள் என்றும்;
ஆப்ரகாம் என்பவர் (ஆதாம் முதல், பின்னர் வந்த முகமது
நபிகள் வரை வந்த) கடவுள் தூதர் என்று
மூஸ்லீம்களும் ஏற்றுக் கொண்டார்கள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக