
ஐரோப்பியர்களின் பழமையான இதிகாசங்கள் இதுவே. நமது நாட்டில் ‘இராமாயணம்’
மற்றும் ‘மகாபாரதம்’ எப்படியோ அப்படி. இராமாயணம் சூரிய வம்சத்து இராஜாக்களைப்
பற்றியும், மகாபாரதம் சந்திர வம்சத்து இராஜாக்களைப் பற்றியும் கூறியுள்ளது. ஹோமர்
இயற்றிய இதிகாசங்களுக்கும் நமது மகாபாரதக் கதாபாத்திரங்களுக்கும் நிறைய தொடர்புகள்
தென்படுகின்றன. கிரேக்க இதிகாசத்திலிருந்து மகாபாரதம் உருவானதா அல்லது
மகாபாரதக்கதையிலிருந்து கிரேக்க இதிகாசக் கதைகள் உருவானதா என்று தெரியவில்லை.
கிரேக்க இதிகாசத்தில், Zeus சீஸ் என்ற தலைமைக்கடவுள். இவரே
கிரேக்க கடவுள்களின் அரசன் என்று வர்ணிக்கப்படுகிறார். The Zeus is the
King of Gods or the Father of Gods. இந்த சீஸ் கடவுள் குரோனஸ் என்பவருக்கும்
அவரின் மனைவி ரியா என்பவளுக்கும் பிறந்தவர். இந்த சீஸ் பிறந்த கதையும்
வித்தியாசமானதே. எப்படி கிருஷ்ணன் பிறப்பு அவனின் மாமனை பலிவாங்கும் என்று
கேள்விப்பட்டு, அவனின் தாய் வாசுகி பெற்ற அனைத்து குழந்தைகளையும் பிறக்கப் பிறக்க
கொன்று போட்டானோ, அதுபோலவே இங்கும் இந்த குரோனஸ் தன் மனைவி ரியா பெற்றெடுக்கும்
எல்லாக் குழந்தைகளையும் விழுங்கி விடுவான். அதில் ஏதோ ஒரு குழந்தை தன்னைக்
கொல்லும் என தேவதை சொல்லி உள்ளதால் இதைச் செய்து வந்தான். ஆனால் அவனின் மனைவி
இதற்கு ஒருமுடிவுகட்ட எண்ணி, சீஸ் பிறந்தவுடன் அந்த குழந்தையை மறைத்து
வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை ஒரு துணியில் சுற்றி அதுதான் இப்போது
பிறந்த குழந்தை எனச் சொல்லி அவளின் கணவனான குரோனஸிடம் கொடுத்துவிடுகிறாள். அவனும்
அந்த குழந்தைபோலுள்ள கல்லை விழுங்கிவிடுகிறான். மறைத்து வைத்த குழந்தையை ஒலிம்பஸ்
மலையில் கொண்டுபோய் விடுகிறாள். அங்கு ஒரு ஆடு அந்த குழந்தைக்கு பால் கொடுக்கிறது.
அங்குள்ள ஆடுமாடு மேய்க்கும் இடையர்கள் ஆடிப்பாடி அந்த குழந்தையின் அழகுரல்
வெளியில் கேட்டுவிடாதவாறு சமாளித்து வளர்க்கின்றனர். வளர்ந்த சீஸ், நாட்டுக்குள்
வந்து, தன் தகப்பன் குரோனஸை சண்டையிட்டு அவனின் வயிற்றைக் கிழித்து, அதில் அவன் விழுங்கிய
எல்லாக் குழந்தைகளையும் காப்பாற்றி வெளிய கொண்டு வருகிறான். இப்படி போகிறது இதிகாசக்
காவியக் கதையான இலியட்.
இந்த சீஸ் கடவுளே தன் மனைவிகள் மூலம் மற்ற
கடவுள்களைப் பெற்றும், தனியே உருவாக்கியும் உள்ளார். இடி, மின்னல்கள், மழை, ஆகாயம்
இவைகளுக்கு இவரே காரணகர்த்தா. இவரை இந்திய வேதமான ரிக்வைதம் ‘டையஸ் பிதா’ என்று
கூறுகிறது. ரோமானியர்களும் அவர்களின் வழக்கப்படி, இந்த சீஸ் கடவுளைத்தான் ஜூபிடர் Jupiter குரு அல்லது வியாழன் என்று கூறுகின்றனர்.
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக