ஜெப்ரி சாசர் எழுதிய கதைகள்தான் இந்த கான்டர்பரி
கதைத் தொகுப்புகள் -The Canterbury Tales; இவைகள் எழுதப்பட்டது 1300ம்
வருடங்களில்; இந்த கதைகள்மூலம் வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்
கொடுத்திருப்பார்;
அதில் ஒரு கதைதான் The Cook's Tale -சமையற்காரரின் கதை:
சமையற்காரரின் பெயர் பெர்கின்ஸ்; ஆள் குள்ளமாக இருந்தாலும்,
கறுத்தமுடி, நன்றாக டான்ஸ் ஆடுவார்; அவர் டான்ஸைப் பார்ப்பதற்கு ஆட்கள் கூடிவிடுவார்கள்; சமையற்கலையிலும் வல்லவர்; இருந்தாலும் வேறு ஒரு
சமையற்கார முதலாளியிடம் வேலைக்காரராக இருக்கிறார்; டான்ஸ் ஆடுவதற்காக குடிப்பார்;
கொஞ்சம் அதிகமாகவே குடிப்பார்;
ஒருநாள், முதலாளி இவரைக் கூப்பிட்டு, இப்படி
ஒரு கேள்வியை (விடுகதை மாதிரி) கேட்கிறார்; "It is better to take the rotten apple out of the
bag than to have it rot all the other apples." ஒரேயொரு அழுகிய ஆப்பிளை
பையிலிருந்து தூக்கி எறிவதைக் காட்டிலும், அதை பையிலேயே
வைத்துக் கொண்டு மற்ற ஆப்பிள்களையும் அழுக வைப்பது புத்திசாலித்தனம் அல்ல."
அவனுக்கு புரிந்துவிட்டது; நாம் தண்ணி அடித்துக்
கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டு திரிவது அவருக்கு பிடிக்கவில்லை; வேலையை விட்டு போகச் சொல்கிறார் என புரிந்து கொண்டு, வணக்கம் குட் பை முதலாளி என்று சொல்லி புறப்படுகிறான்; வழியில் ஒரு நண்பன் மாட்டுகிறான்; அவனும்
குடிகாரன்தான்; அவன் சூதாடவும் செய்வான்; அவைகள்தான் அவனுக்கு பிடித்த வாழ்க்கையும் கூட; அவனுக்கு
ஒரு மனைவி; அவள், பேருக்கு ஒரு
பெட்டிக்கடை வைத்திருக்கிறாள்; உண்மையில் அந்த வியாபாரத்தை
பார்க்க மாட்டாள்; வெளி ஆண்களுடன் பழகி பணம் சேர்ப்பாள்;
விபச்சாரி;
இத்துடன் கதை முடிகிறது;
கான்டர்பரி கதைகளை எழுதிய சாசர் அவர்கள் இந்த கதையை மட்டும் இந்துடன்
முடித்திருக்கிறார்; வேண்டுமென்றே முடித்தாரா அல்லது பின்னர் எழுதலாம் என நினைத்து
விட்டுவிட்டாரா என்று இதுவரை தெரியவில்லையாம்; அடுத்து கதை
எப்படி போயிருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவும் முடியவில்லையாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக