The Clerk's Tale: கிளர்க்கின் கதை;
கான்டர்பரி கதைகளில் இதுவும் ஒன்று; 3000 வருடங்களுக்கு முன்
எழுதப்பட்ட கதைகள் இவை; மிகப் பிரபலமான கதைகளும் இவைகள்தான்;
இவன் திருமணம் ஆகாத பேச்சிலர்; வால்டர் என்று பெயர்;
ஊரில் இருப்பவர்கள் எல்லாம், 'இவனை, ஒரு திருமணம் செய்து கொண்டு ஒரு வாரிசை பெற்றுக் கொள்: அதுதான் உனக்கு
நல்லது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; இவனுக்கும்
அதுவே சரியென்று பட்டது;
ஒருநாள், கிராமத்திலுள்ள ஒரு ஏழைப் பெண்ணை போய் பார்க்கிறான்;
அவள் அன்றாடம் கூலி வேலைசெய்து வயிற்றுப்பிழைப்பை
ஓட்டிக்கொண்டிருக்கிறாள்; அவளிடம் பேசுகிறான்; அவன் அவளுக்கு வாழ்க்கை அளிப்பதாகவும், தன்னை திருமணம்
செய்து கொள்ளும்படியும் கேட்கிறான்; அவளும் ஒப்புக்
கொள்கிறாள்; தான் ஒரு சிறந்த மனைவியாக இருந்து அவனுக்கு
உதவுவதாகவும் கூறுகிறாள்;
திருமணம் நடக்கிறது; மனைவி பெயர் கிறிசல்டா;
பின்னர் ஒரு மகள் பிறக்கிறாள்; மகள்
பிறந்தவுடன் அவளை சோதித்து பார்க்க நினைக்கிறான்; ஒரு ஆபீஸர்
போன்ற தோற்றமுடைய ஒரு ஆளை அனுப்பி வைக்கிறான்; வந்தவன்,
இவன் மனைவியிடம் சென்று அந்த குழந்தையை உன் கணவர் வாங்கிக்
கொண்டுவரும்படிகேட்கிறார் என்று சொல்கிறான்; அதை எங்கோ
கொண்டு செல்லப் போகிறாரகள் என்றும் சந்தேகமாகச் சொல்கிறான்; அவள்,
பயந்து கொண்டு, கணவனுக்கு கொடுத்த வாக்குப்படி,
சொன்ன பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; ஆனால் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள்; "நீங்கள்
குழந்தையை கொன்றுவிட்டால், அதை சரியான முறைப்படி அடக்கம்
செய்யவேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்; ஆனாலும்
அவர்கள் இந்த பெண் குழந்தையை ரகசியமாக வேறு ஒரு இடத்தில் வைத்து வளர்க்கிறார்கள்:
காலப்போக்கில் அவளுக்கு மறுபடியும் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்;
அதேபோலவே, ஆள் அனுப்பி அந்தக் குழந்தையையும்
கொடுத்துவிடும்படி கேட்டு அனுப்புகிறான்; (சந்தனு
மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளையும் மனைவி கங்கையில்
விட்டுவிடுவாள்; கணவனான மன்னர் எதிர்த்து கேட்கமுடியாது;
அப்படி அதில் தப்பித்த ஒரு குழந்தைதான் பீஷ்மர் என்று மகாபாரதக் கதை
உண்டு);
அப்படியே கணவனின் பேச்சை தட்டாமல் குழந்தையை
கொடுக்கிறாள்; இன்னும்
சோதித்து பார்க்க நினைக்கிறான்; அவளை விவாகரத்து செய்து
வெளியேற்றுகிறான்; அவன் வேறு திருமணம் செய்து கொள்ளப் போகதாக
சொல்கிறான்; அதுவரை இருந்து அந்த புதுப் பெண்ணுக்கு தோழியாக
இருந்து உதவி வேலை செய்யும்படி கேட்கிறான்;
அந்த புதுப் பெண்ணுக்கு, தான் ஏற்கனவே
தூக்கிக் கொண்டு போன தன் மகளை அன்பாகக் கொடுக்கிறான்; உடனே
மனைவிக்கு தன் மகள் உயிருடன் இருப்பதாக தெரிந்து விடுகிறது; சந்தோஷம்
தாங்க முடியவில்லை; இரண்டாவது பிறந்த மகனும் வருகிறான்;
தாயைப் பார்க்கிறான்; தன் கணவன் பொய்யாக இதை
செய்திருப்பது அவளுக்கு தெரியவருகிறது; பின்னர் இருவரும்
மகிழச்சியுடன் வாழ்கிறார்கள்; அவள் பொறுமைக்கு கிடைத்த
பரிசுகள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக