Spanish language
ஷ்பானிஸ் மொழி (Spanish):
இது ஸ்பெயின் நாட்டின் கேஸ்டைல் (Castile region of Spain)
பகுதியில் பேசிவந்த மொழி என்பதால் இதை கேஸ்டிலியன் (Castilian) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். உலக மக்களில் மிக அதிகமாகப் பேசப்படும்
மொழி. துல்லியமான கணக்கெடுப்பின்படி, சைனாவின் ‘மாண்ட்ரின் மொழி” க்கு அடுத்து
இந்த ஷ்பானிஸ் மொழிதான் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. உலக நாடுகளில், சுமார் 20
நாடுகளில் இந்த ஷ்பானிஸ் மொழி பேசப்படுகிறது. 470 மில்லியன் மக்கள் இந்த ஷ்பானிஸ்
மொழியை அன்றாடம் பேசி வருகின்றனராம். (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; 470
மில்லியன் என்பது 47 கோடி மக்கள்). தமிழ்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை
(வெளிநாட்டில் இருப்பவர் உட்பட சுமார் 80 மில்லியன் தமிழ் மக்கள் மட்டுமே. அதாவது 8
கோடி; தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி).
பிரான்ஸ் நாட்டுக்கு தெற்கே உள்ள நாடு
ஸ்பெயின் நாடு. இதைத்தான் முன்னர் கேஸ்டைல் நாடு என்பர். இங்குள்ளவர்கள்
தென்-மேற்கே சென்று தென் அமெரிக்காவை ஆண்டுவந்தனர். ஆகவேதான் தென் அமெரிக்க மக்கள்
ஸ்பெயின் நாட்டின் (காஸ்டைல் நாட்டின்) கேஸ்டைல் மொழியான ஷ்பானிஷ் மொழியை
பேசிவந்தனர். அதுவே தென்அமெரிக்கர்களின் தாய்மொழியானது.
மெக்ஸிகோ நாடு முழுக்க ஷ்பானிஸ் மொழி
பெசும் மக்கள் தான். அமெரிக்காவின் தென்பகுதியில் ஷ்பான்ஸ் மொழி பேசுபவர்கள்
அதிகம். அமெரிக்கா செல்லும் தமிழர்களுக்கும் ஷ்பானிஸ் மொழி தெரிந்திருந்தால்
நல்லதுதான். பிரான்ஸ் நாட்டிலும் ஒரு 4% மக்கள் ஷ்பானிஸ் மொழி பேசுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக