ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

அரசுப் பள்ளிகள்

அலகாபாத் ஐகோர்ட் ஒரு அதிரடியாக தீர்ப்பை கொடுத்துள்ளதாம். 

எல்லா அரசு ஊழியர்களும் அவர்களின் குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டுமாம். தவறினால் அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். ஆறு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது ஐகோர்ட். 

இப்போது அங்கு மூன்று வகையான பள்ளிப் படிப்புகள் உள்ளதாம். இங்க்லீஸ் மீடியம் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என மூன்று வகை உள்ளதாம். 

அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அரசுக்கு வருமானம் வருவதுடன், கல்வியின் தரமும் தானே உயர்ந்துவிடுமாம். 

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஷ்பானிஸ் மொழி (Spanish)

Spanish language
ஷ்பானிஸ் மொழி (Spanish):
இது ஸ்பெயின் நாட்டின் கேஸ்டைல் (Castile region of Spain) பகுதியில் பேசிவந்த மொழி என்பதால் இதை கேஸ்டிலியன் (Castilian) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். உலக மக்களில் மிக அதிகமாகப் பேசப்படும் மொழி. துல்லியமான கணக்கெடுப்பின்படி, சைனாவின் ‘மாண்ட்ரின் மொழி” க்கு அடுத்து இந்த ஷ்பானிஸ் மொழிதான் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. உலக நாடுகளில், சுமார் 20 நாடுகளில் இந்த ஷ்பானிஸ் மொழி பேசப்படுகிறது. 470 மில்லியன் மக்கள் இந்த ஷ்பானிஸ் மொழியை அன்றாடம் பேசி வருகின்றனராம். (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; 470 மில்லியன் என்பது 47 கோடி மக்கள்). தமிழ்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை (வெளிநாட்டில் இருப்பவர் உட்பட சுமார் 80 மில்லியன் தமிழ் மக்கள் மட்டுமே. அதாவது 8 கோடி; தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி).
பிரான்ஸ் நாட்டுக்கு தெற்கே உள்ள நாடு ஸ்பெயின் நாடு. இதைத்தான் முன்னர் கேஸ்டைல் நாடு என்பர். இங்குள்ளவர்கள் தென்-மேற்கே சென்று தென் அமெரிக்காவை ஆண்டுவந்தனர். ஆகவேதான் தென் அமெரிக்க மக்கள் ஸ்பெயின் நாட்டின் (காஸ்டைல் நாட்டின்) கேஸ்டைல் மொழியான ஷ்பானிஷ் மொழியை பேசிவந்தனர். அதுவே தென்அமெரிக்கர்களின் தாய்மொழியானது.
மெக்ஸிகோ நாடு முழுக்க ஷ்பானிஸ் மொழி பெசும் மக்கள் தான். அமெரிக்காவின் தென்பகுதியில் ஷ்பான்ஸ் மொழி பேசுபவர்கள் அதிகம். அமெரிக்கா செல்லும் தமிழர்களுக்கும் ஷ்பானிஸ் மொழி தெரிந்திருந்தால் நல்லதுதான். பிரான்ஸ் நாட்டிலும் ஒரு 4% மக்கள் ஷ்பானிஸ் மொழி பேசுகிறார்கள்.


அர்ஜென்டினா (Argentina)

Argentina
அர்ஜென்டினா (Argentina):
அமெரிக்க கண்டம் என்பது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரண்டு நிலப்பகுதிகள். இதில் வட அமெரிக்கா என்பது வடக்கே கனடா நாடும், தெற்கே யு.எஸ்.ஏ. என்ற யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா, சுருக்கமாக ஸ்டேட்ஸ் என்னும் பிரபல்யமான அமெரிக்க நாடும் கொண்டது.
தென் அமெரிக்கா என்பது பல நாடுகள் சேர்ந்த நிலப்பரப்பு. இங்கு பெரும்பாலும் லத்தீன் நாட்டின் மொழியான ஷ்பானிஸ் மொழியே பேசுவதால் இந்த நாட்டை பொதுவாக ‘லத்தீன் அமெரிக்கா’ என்றே செல்லமாக அழைப்பர்.
இந்த தென்அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள நாடுகளில் பெரிய நாடே இந்த அர்ஜென்டினா. உலக நாடுகளில் எட்டாவது பெரிய நாடு இது. கிட்டத்தட்ட 28 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டநாடு. (இந்தியாவின் நிலப்பரப்பு சுமார் 33 லட்சம் கி.மீ கொண்டது). இங்கே முழுக்க முழுக்க ஷ்பானிஸ் மொழி (Spanish) பேசுபவர்கள்தான். ஷ்பானிஸ் மொழி கிட்டத்தட்ட இங்லீஷ் மொழி சாடைதான் இருக்கும்.
அர்ஜென்டினாவை “சில்வர் நாடு” (வெள்ளி தேசம்) என்பர். அர்ஜென்டினா என்ற பெயரே வெள்ளி என்றுதான் பெயர். சில்வரின் கெமெஸ்ட்ரி பெயர் (இரசாயனப் பெயர்) அர்ஜென்டம். வெள்ளி என்பதன் லத்தீன் மொழி அர்ஜென்டம்.
இந்த அர்ஜென்டினாவின் தலைநகர் “பூனஸ் ஏரிஸ்” (Buenos Aires). இது மிகப்பெரிய நகரம்.  இந்தப் பெயரும் இதற்கு வேடிக்கையாகவே வந்தது. பூனஸ் ஏரிஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு “ப்யூர் ஏர்” அல்லது “சுத்தமான காற்று” என்று பொருள். ஷ்பானிஸ் மாலுமிகள் இந்த மண்ணுக்கு முதன்முதலில் கப்பல் மூலம் வந்து இறங்கியபொது “நல்ல காற்று அவர்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தாக” அந்த பெயரையே இதற்கும் வைத்து விட்டார்களாம்!
இந்த நாட்டில் 1810ல் ஏற்பட்ட “மே மாதப் போராட்டம்” சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. 1816ல் சுதந்திரம் பெற்றது. சூரியன் போட்ட கொடி வைத்துள்ளார்கள். (இந்தியாவில் அந்த இடத்தில் அசோக சக்கரம் இருக்கும்).
அர்ஜென்டினா நாடு, ‘புட்பால்’ என்னும் கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 125 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட நாடு. இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு குழுக்களைக் கொண்டது. பிபா என்னும் FIFA  என்னும் உலக கால்பந்து விளையாட்டு குழுவிலும் உள்ளது. இரண்டுமுறை கால்பந்து உலகக் கோப்பையும் பெற்றுள்ளது.