வியாழன், 4 ஜூன், 2015

The Clerk's Tale:

The Clerk's Tale: கிளர்க்கின் கதை;
கான்டர்பரி கதைகளில் இதுவும் ஒன்று; 3000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இவை; மிகப் பிரபலமான கதைகளும் இவைகள்தான்;

இவன் திருமணம் ஆகாத பேச்சிலர்; வால்டர் என்று பெயர்; ஊரில் இருப்பவர்கள் எல்லாம், 'இவனை, ஒரு திருமணம் செய்து கொண்டு ஒரு வாரிசை பெற்றுக் கொள்: அதுதான் உனக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; இவனுக்கும் அதுவே சரியென்று பட்டது;

ஒருநாள், கிராமத்திலுள்ள ஒரு ஏழைப் பெண்ணை போய் பார்க்கிறான்; அவள் அன்றாடம் கூலி வேலைசெய்து வயிற்றுப்பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்; அவளிடம் பேசுகிறான்; அவன் அவளுக்கு வாழ்க்கை அளிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்கிறான்; அவளும் ஒப்புக் கொள்கிறாள்; தான் ஒரு சிறந்த மனைவியாக இருந்து அவனுக்கு உதவுவதாகவும் கூறுகிறாள்;

திருமணம் நடக்கிறது; மனைவி பெயர் கிறிசல்டா; பின்னர் ஒரு மகள் பிறக்கிறாள்; மகள் பிறந்தவுடன் அவளை சோதித்து பார்க்க நினைக்கிறான்; ஒரு ஆபீஸர் போன்ற தோற்றமுடைய ஒரு ஆளை அனுப்பி வைக்கிறான்; வந்தவன், இவன் மனைவியிடம் சென்று அந்த குழந்தையை உன் கணவர் வாங்கிக் கொண்டுவரும்படிகேட்கிறார் என்று சொல்கிறான்; அதை எங்கோ கொண்டு செல்லப் போகிறாரகள் என்றும் சந்தேகமாகச் சொல்கிறான்; அவள், பயந்து கொண்டு, கணவனுக்கு கொடுத்த வாக்குப்படி, சொன்ன பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; ஆனால் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள்; "நீங்கள் குழந்தையை கொன்றுவிட்டால், அதை சரியான முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்; ஆனாலும் அவர்கள் இந்த பெண் குழந்தையை ரகசியமாக வேறு ஒரு இடத்தில் வைத்து வளர்க்கிறார்கள்: காலப்போக்கில் அவளுக்கு மறுபடியும் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்; அதேபோலவே, ஆள் அனுப்பி அந்தக் குழந்தையையும் கொடுத்துவிடும்படி கேட்டு அனுப்புகிறான்; (சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளையும் மனைவி கங்கையில் விட்டுவிடுவாள்; கணவனான மன்னர் எதிர்த்து கேட்கமுடியாது; அப்படி அதில் தப்பித்த ஒரு குழந்தைதான் பீஷ்மர் என்று மகாபாரதக் கதை உண்டு);


அப்படியே கணவனின் பேச்சை தட்டாமல் குழந்தையை கொடுக்கிறாள்; இன்னும் சோதித்து பார்க்க நினைக்கிறான்; அவளை விவாகரத்து செய்து வெளியேற்றுகிறான்; அவன் வேறு திருமணம் செய்து கொள்ளப் போகதாக சொல்கிறான்; அதுவரை இருந்து அந்த புதுப் பெண்ணுக்கு தோழியாக இருந்து உதவி வேலை  செய்யும்படி கேட்கிறான்; அந்த புதுப் பெண்ணுக்கு, தான் ஏற்கனவே தூக்கிக் கொண்டு போன தன் மகளை அன்பாகக் கொடுக்கிறான்; உடனே மனைவிக்கு தன் மகள் உயிருடன் இருப்பதாக தெரிந்து விடுகிறது; சந்தோஷம் தாங்க முடியவில்லை; இரண்டாவது பிறந்த மகனும் வருகிறான்; தாயைப் பார்க்கிறான்; தன் கணவன் பொய்யாக இதை செய்திருப்பது அவளுக்கு தெரியவருகிறது; பின்னர் இருவரும் மகிழச்சியுடன் வாழ்கிறார்கள்; அவள் பொறுமைக்கு கிடைத்த பரிசுகள்

The Cook's Tale

ஜெப்ரி சாசர் எழுதிய கதைகள்தான் இந்த கான்டர்பரி கதைத் தொகுப்புகள் -The Canterbury Tales; இவைகள் எழுதப்பட்டது 1300ம் வருடங்களில்; இந்த கதைகள்மூலம் வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுத்திருப்பார்;

அதில் ஒரு கதைதான் The Cook's Tale -சமையற்காரரின் கதை:
சமையற்காரரின் பெயர் பெர்கின்ஸ்; ஆள் குள்ளமாக இருந்தாலும், கறுத்தமுடி, நன்றாக டான்ஸ் ஆடுவார்; அவர் டான்ஸைப் பார்ப்பதற்கு ஆட்கள் கூடிவிடுவார்கள்; சமையற்கலையிலும் வல்லவர்; இருந்தாலும் வேறு ஒரு சமையற்கார முதலாளியிடம் வேலைக்காரராக இருக்கிறார்டான்ஸ் ஆடுவதற்காக குடிப்பார்; கொஞ்சம் அதிகமாகவே குடிப்பார்;

ஒருநாள், முதலாளி இவரைக் கூப்பிட்டு, இப்படி ஒரு கேள்வியை (விடுகதை மாதிரி) கேட்கிறார்; "It is better to take the rotten apple out of the bag than to have it rot all the other apples." ஒரேயொரு அழுகிய ஆப்பிளை பையிலிருந்து தூக்கி எறிவதைக் காட்டிலும், அதை பையிலேயே வைத்துக் கொண்டு மற்ற ஆப்பிள்களையும் அழுக வைப்பது புத்திசாலித்தனம் அல்ல."

அவனுக்கு புரிந்துவிட்டது; நாம் தண்ணி அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டு திரிவது அவருக்கு பிடிக்கவில்லை; வேலையை விட்டு போகச் சொல்கிறார் என புரிந்து கொண்டு, வணக்கம் குட் பை முதலாளி என்று சொல்லி புறப்படுகிறான்; வழியில் ஒரு நண்பன் மாட்டுகிறான்; அவனும் குடிகாரன்தான்; அவன் சூதாடவும் செய்வான்; அவைகள்தான் அவனுக்கு பிடித்த வாழ்க்கையும் கூட; அவனுக்கு ஒரு மனைவி; அவள், பேருக்கு ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறாள்; உண்மையில் அந்த வியாபாரத்தை பார்க்க மாட்டாள்; வெளி ஆண்களுடன் பழகி பணம் சேர்ப்பாள்; விபச்சாரி;

இத்துடன் கதை முடிகிறது;

கான்டர்பரி கதைகளை எழுதிய சாசர்  அவர்கள் இந்த கதையை மட்டும் இந்துடன் முடித்திருக்கிறார்; வேண்டுமென்றே முடித்தாரா அல்லது பின்னர் எழுதலாம் என நினைத்து விட்டுவிட்டாரா என்று இதுவரை தெரியவில்லையாம்; அடுத்து கதை எப்படி போயிருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவும் முடியவில்லையாம்.